Veshti
சமீபத்தில் சென்னையில் ஒரு கிளப்பில் வேஷ்டி கட்டிக்கொண்டுபோன ஒரு நீதிபதிக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து நிறைய சர்ச்சைகள் எழுந்தன . தொலைக்காட்சி சேனல்களில் 'பாண்ட்' அணிந்த பல அறிஞர்கள் இந்தத் தடை தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானது என்று வன்மையாகக் கண்டித்தனர். இதன் பின் தமிழக அரசும் மேற்கூறிய கிளப்பிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நமக்கு பின்வரும் கேள்விகள் எழுகின்றன: 1. தமிழ்ப் பண்பாடு வேஷ்டி கட்டிக்கொள்வதில் அடங்கியிருக்கிறதா? 2. தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன? வேஷ்டி கட்டிக்கொள்வதை இந்தியப் பண்பாடு என்று வேண்டுமானால் சொல்லமுடியுமே ஒழிய தனிப்பட்ட தமிழ்ப் பண்பாடு என்று கூறுவது கடினம் என்றுதான் தோன்றுகிறது. நாம் பார்த்த வரை இந்தியாவின் சகல மாநிலத்தோரும் வேஷ்டி கட்டிக்கொள்ளும் பழக்கம் உடையவர்களாகத்தான் இருக்கிறார்கள். தட்டுச்சுற்று வேஷ்டியை வேண்டுமானால் நம் தனிப்பட்ட பண்பாடாகக் கருத முடியும். அதுவும் நம் தனித்த சொத்து அல்ல. கேரளாக்காரர்கள் நம்மை விடப் பிடிவாதமாக வேஷ்டி கட்டிக்கொண்டு திரிகிறார்கள். தவிரவும் தமிழ்நாட்டில...