இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனது மாஸ்கோ விஜயம்

படம்

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன் மறைந்தார் என் நாவல் நல்லூர் மனிதர்களுக்கு விரிவான விமர்சனம் எழுதி இருந்தார். அதற்கு முன்னாலேயே நான் அவரின் விமர்சனங்களைப் படித்திருந்ததால் அவர் மீது எனக்குப் பெரும் மதிப்பு இருந்தது. அதனால் நான் அவரின் விமர்சனத்தைப் பெரிய கௌரவமாக நினைத்தேன். 1993இல் டெல்லி சென்றிருந்த போது மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்தேன். 'வாட் ப்ரிங்க்ஸ் யு ஹியர்?' என்றார் முதலில் சந்தேகமாக. ஏதாவது சகாயம் கேட்கப் போவதாக எண்ணியிருக்கலாம். ஆரம்ப சந்தேகம் தெளிந்ததும் 'கல கல'வென்று பேச ஆரம்பித்து விட்டார். தி க சியிலிருந்து தஞ்சை பிரகாஷ் வரை எல்லோரைப் பற்றியும் மிக வெளிப்படையான விமர்சனங்கள். மௌனியையும் சி சு செல்லப்பாவையும் கூட விட்டு வைக்கவில்லை. சுமார் மூன்று மணி நேரங்கள் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் 1999இல் என் இரண்டாம் நாவல் 'ஒரு தேவதையும் சில வண்ணத்துப் பூச்சிகளும்' விமர்சனக் கூட்டம் சென்னையில் நடந்தபோது அவரை அழைத்தேன். எந்த பிரதி பலனும் எதிர்பாராது வந்திருந்து ஒரு விரிவான விமர்சனத்தை வழங்கினார். பின்னர் இதே நாவலைப் பற்றி படித்துறையில் விரிவான விமர்சனம் எழுதினார். உ...

விருது-சிறுகதை

நல்லூர் சங்கீத வித்வான்களுக்கு கோவிந்த ராவ் வீட்டு பஜனை தான் புகலிடம் . வருடம் ஒரு முறை நரசிம்ம ஜயந்தி உற்சவம் பத்து நாள் நடக்கும் போது கொஞ்சம் “கா ர்வார் ” பண்ணிக் கொண்டிருப்பார்கள் . அங்கேயும் கச்சேரிகளில் வெளியூர் வித்வான்களுக்குத்தான் பிராதான்யம் . பஜனையில் விசு சார் ஓர் ஓரமாய் உட்கார்ந்திருப்பார் . அவரைப் பார்த்தால் எவருக்கும் சங்கீத வித்வான் என்று தோன்றாது . அப்படி ஓர் அசட்டுக் களை . சாம்பல் பூத்த கருப்பு . நீர்க் காவி ஏறிய வேஷ்டி , நைந்து போன சட்டை . தோளில் அதே கலரில் துண்டு , பஜனை சுமாராக இரவு எட்டு மணி வாக்கில் ஆரம்பிக்கும் . வெங்காச்சமும் , சீமாச்சுவும் வரும் வரையில் எல்லோருமே காத்திருப்பார்கள் . ஏனென்றால் வெங்காச்சம் தான் ஹார்மோனியம் வாசிப்பார் . சீமாச்சு கையில் தான் பஜனை சம்ப்ரதாய புத்தகம் இருக்கும் . அவர்கள் வரும் வரை விசு சார் வாயை யாராவது கிளறிக் கொண்டிருப்பார்கள் . அவரும் சிரித்துக் கோண்டே ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார் . அவர் சரஸு மாமியைக் கல்யாணம் பண்ணிக் கொண்ட சம்பவத்தைக்...