இடுகைகள்

ஜூன், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாதொரு பாகன்

எல்லோரும் கிழி கிழி  என்று  கிழிக்கிறார்களே அதில் என்ன தான் எழுதி இருக்கிறது என்று பார்க்கலாமே என்று மிகவும் முன் முயற்சி எடுத்து மாதொரு பாகன் நாவலை வாங்கினேன். தமிழில் கிடைக்கவில்லை. பெங்குவின் வெளியிட்டிருந்த ஆங்கில மொழியாக்கம் கிடைத்தது. அது குறித்து என் வினையாடல்கள் (!) வருமாறு: பிள்ளையில்லா தம்பதியினருக்கு சமுதாயம் கொடுக்கும் மன அழுத்தம் தாங்க முடியாமல் வருத்தத்தில் இருக்கும்போது இரண்டு வீட்டுப் பெரியவர்களும் சேர்ந்து கோவில் திருவிழாவில் பிற ஆடவனுடன் பிள்ளையில்லாப் பெண் கூடி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்கிற ஐதீகத்தைச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.கணவனுக்கு ஒப்புதல் இல்லை. கணவன் ஒப்புக் கொண்டது போல் நாடகமாடி அவன் மனைவியை சம்மதிக்க வைத்து விடுகிறார்கள். கடைசியில் கணவன் விஷயம் தெரிந்து மிகவும் விரக்தி அடைகிறான். இதற்கு சாஸ்திர சம்மதம் இருக்கிறதா? சந்ததி இல்லாமல் இருக்கும் பெண்ணின் கணவன் சிறு வயதிலேயே இறந்து விட்டால் பெண் அவள் மைத்துனனிடம் கூடிப் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்கிறது மனு ஸ்ம்ருதி. சத்ய காம ஜாபாலன் கதை நினைவ...

ஜெயமோகன்

தற்செயலாக ஜெயமோகன் என்கிற எழுத்தாளரின் வலைப்பூவை வாசிக்க நேர்ந்தது.  படிக்கப் படிக்க இவ்வளவு சான்றாண்மை, மரபுத் தோய்வு, ஆன்மிகத் தேடல், நேர்மை  மற்றும் நுண் மாண் நுழை புலம் உள்ள எழுத்தாளர் ஒருவர் தமிழில் இருக்கிறார் என்று அறிந்து  பிரமித்துப் போகிறேன். என்ன உழைப்பு! என்ன படிப்பு! என்ன தெளிவு! என்ன தீர்மானம்! ஜெயகாந்தனுக்குப் பிறகு நான் பார்த்து வியக்கும் ஒரு பெரிய எழுத்தாளர் இவர் தாம். இவர் சமீபத்தில் மின் அஞ்சல்களுக்கு பதில் எழுதாததற்காக மன்னிப்புக் கேட்டிருந்தார். அதற்கு பதிலாய் நான் அவருக்கு ஒரு மடல் அனுப்பி இருந்தேன். அதில் அவரைப் பாராட்டி ஒரு அஞ்சல் அனுப்பி இருந்தேன். கூச்ச உணர்வினாலோ அல்லது முகஸ்துதி செய்கிறேன் என்று நினைத்தோ என்னவோ  அவர் அதைத் தன வலைப்பூவில் வெளியிடவில்லை. எனக்கு என்ன தோன்றுகிறது  என்றால் என் தற்போதைய மயக்கம் பின்னாளில் தெளிந்து போகலாம்.  அவர் குறித்த என் அபிப்ராயத்தை மாற்றிக்கொள்ள நேரலாம். அதற்காக நான் அவரைப் பற்றி இப்போது என்ன நினைக்கிறேன் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அதற்காக  நான்...