இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ம வே சிவகுமார்

ம வே சிவகுமார் ம வே சிவகுமார் மறைந்து விட்டார் என்று கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்தேன் . முதன் முதலில் அவரின் 'பிறிதொரு இன்டலக்சுவல் ' என்கிற சிறுகதையால் கவரப்பட்டு அவரை கவனிக்க ஆரம்பித்தேன் . தொடர்ச்சியாக நிறைய சிறுகதைகள் எழுதினார். வேடந்தாங்கல் என்று ஒரு தொடர்கதையும் எழுதினார் . வாழ்க்கையை உண்மையாகவும் அங்கத நோக்கிலும் விவரிக்கும் பாணி. கிட்டத் தட்ட ஆதவனை ஒப்பிடக்கூடிய உணர்ச்சி மிகை தவிர்த்த எழுத்து. பின்னர் கல்கியில் கிட்டத்தட்ட சுய சரிதை போன்று  ஒரு தொடர்கதை எழுதினார். அதில் சுவாரஸ்யம் போய் விட்டது. வெளியில் பார்ப்பதைக் கம்மி பண்ணிக்கொண்டதன் கோளாறு என்று நினைக்கிறேன். பின்னர் பூர்ணம் விஸ்வநாதனை வைத்து அவரே நடித்து ஒரு தொலைக்காட்சி தொடரைப் பார்த்தேன். சினிமா என்கிற ஊடகம் அவருக்குப் பிடி படவில்லை என்று நினைக்கிறேன். பின்னர் ஒரு பிரபல நடிகர் நடித்த திரைப் படத்திற்கு அவர் வசனம் எழுதியதாகவும் அவர் பெயர் இருட்டடிப்பு செய்யப் பட்டதால் அந்த நடிகர் முன் சவால் விட்டு வந்ததாகவும் கேள்விப்படுகிறேன். அந்த நடிகர் எனக்கெனவே ஐ ஐ டியில் நடந்த நாடகத்தைக் காப்பி அடித்துத் திரைப் படம் எடுத்...