இடுகைகள்

மார்ச், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம்

படம்
இந்த எழுத்தாளரின் படைப்பை இப்போது தான் முதன் முதலாகப் படிக்கிறேன். இதற்காக ஜெயமோகனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.அவருடைய நெருங்கிய நண்பர். யுவனின் குணாதிசயக் கூறுகளை விவரித்து அல்லது நகையாடி ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளைப் படித்ததில் ஓரளவுக்கு முன் அபிப்ராயத்துடன் தான் யுவனை நான் அணுகினேன். இது எந்த அளவில் என் விமர்சனத்தை பாதிக்கப் போகிறது என்பதை இக்கட்டுரையை படிப்பவர்கள் தான் அனுமானிக்க இயலும். பல ஊர்கள். பல மனிதர்கள். பல தரப்பு. எல்லோரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஊரை விட்டு ஓடுகிறார்கள் அல்லது வெளியேறுகிறார்கள். முதலில் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் போக்குகள் விவரிக்கப் படுகின்றன. கூட்டுக் குடும்பம், யானைத்தீ பசிகொண்ட ஒருவர், கோபத்தில் கையை வெட்டுபவர், விலை மாதுக்குப் பிறந்தவர், வறுமையில் வீட்டை விட்டு ஓடுகிறவர் என்று ஏகப்பட்ட பேர்களின் விவரணைகள்; அவர்களின் விரக்திகள் அல்லது வாழ்க்கைப் போராட்டங்கள்.  எல்லோரும் வேதமூர்த்தி என்னும் சாமியாருக்கு சிஷ்யர் ஆகி விடுகிறார்கள்.இதை முதலில் சொல்லிவிட்டுப் பின்னர் சந்தானம் என்கிற கதா பாத்திரம் இவர்கள் எல்லோரையும் சந்திப்பதின் மூலமாக அ...