கவிதைகள்-கணேஷ் கிருஷ்ணமூர்த்தி
முருகா ! சுயசுதந்திரம் சிறைப்படுத்துகிறது . பாதிக்கப்பட்டவர் எல்லோரும் என் மனத்தின் சபையில் ஒன்று கூடி என்னைச் சாடுகிறார்கள் ; நியாயமான முழக்கங்கள் அவர்களுடையது ; நான் சுய மன்னிப்பைத் தேடுகிறேன் . “ இப்படியா , செய்வான் ஒரு மனிதன் ! ” என்கிறார் ஒருவர் தேநீர் அருந்திக் கொண்டே ... நீங்கள் சொல்லும் அம்மனிதன் நானில்லை . என்னைத் தெரிந்தவர்கள் திடீரென்று மொத்தமாகக் காணாமல் போகிறார்கள் . நான் அப்படிப் பட்டவன் இல்லை . பாவத்தின் சம்பளம் சுதந்திரம் நான் சற்று விரைவாக ‘ நான் அப்படியில்லை ’ என்கிறேன் எவனோ மாட்டிக் கொண்டான் அவர்கள் சொல்லும் அம்மனிதர்கள் நாம் யாவரும் இல்லை . ‘ முருகா ’ என்ற சொல் ஆழமானதொன்று என்றறிகிறேன் . குருவி சர்ச்சை ! குருவியே ! வா , வந்து இக்கிளையின் மேல் உட்காரு நீ யார் என்று தெரிந்து கொள்ளலாம் . ( அல்லது எது நீ என்று ), உன் சிறகைப் பற்றி , உன் உருண்டை ‘ வாஷர் ’ கண்களைப் பற்றி , உன் துள்ளும் தலையைப் பற்றி , நகத்தால் ஆனது போல் உள்ள உன...