சொல்வதெல்லாம் ....
பொழுது போகாமல் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியை அவ்வப்போது பார்க்கிற வழக்கம். அதை நடத்துகிற அம்மை ஒரு போலீஸ்காரரின் நிமிர்வுடன் நடந்து கொள்கிறார். வருகிறவர்களை சாதுர்யமாகக் கேள்வி கேட்டு சாமர்த்தியமாக உண்மையை வரவழைக்க முயற்சிக்கிறார். மிகவும் சுவாரஸ்யமாக உரையாடல்களை நகர்த்திச் சென்று முடிவில் தீர்ப்பும் தீர்வும் வழங்குகிறார். வருபவர்கள் முக்காலே மூணு வீசம் பேர் கீழ்நிலை மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் கள்ள உறவு; குடி;காதல்; ஏமாற்றிவிட்டு ஓடுவது. இவைதான் பிரச்சனைகளாக முன் வைக்கப் படுகின்றன. இரு பாலைச் சேர்ந்தவர்களும் பேதமில்லாது குற்றம் இழைப்பவர்களாகவும் பாதிக்கப் படுகிறவர்களாகவும் இருக்கின்றனர். சில சமயங்களில் புகார் சொன்னவர்களே உண்மையில் தவறு செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் நிறைய ஆச்சர்யங்கள் உண்டு: தவறு செய்பவர்கள் பெரும்பாலும் குற்றத்தை பெருமளவில் மறுக்க முயற்சிக்காமல் அதற்கான நியாயங்களை நிறுவுவதில் முனைப்பு காட்டுகிறார்கள். நெறி ஆளுநர் பல சமயங்களில் தவறு செய்ததாகக் கருதுவர்களை கிட்டத்தட்ட மிரட்டுகிறார். இதற்கெல்லாம் சட்ட ஒப்புதல் இருக்கிறதா...