முக நூலர்களின் முகவரிகள் III
பதிவுகள் செய்யப் பத்து கட்டளைகள்: 1. மொழி: பண்டிதத் தமிழில் எழுத கூடாது. யாரும் படிக்க மாட்டார்கள். மொக்கை, மெர்சல், தரியல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். சொன்னார்கள் என்பதை 'சொல்லிட்டாங்கேய்' என்றால் தான் மரியாதை. புது வார்த்தைகளுக்கு அகராதிகளை புரட்ட வேண்டிய அவசியம் இல்லை. நான்கைந்து திரைப்படங்களை பார்த்தாலே போதும். 2. கூடிய மட்டில் சுருக்கமாகப் பதிவுகள் இருக்க வேண்டும். ஒரு வரி அல்லது ஒற்றை வாக்கியம் போதுமானது. அது கூடிய மட்டில் சினிமாவில் வருகிற 'பன்ச் டயலாக்' மாதிரி இருந்தால் நல்லது. இளம் பெண்களாக இருந்தால் 'வானத்தில் சிட்டுக் குருவியைப் பார்த்தால் றெக்கை கட்டி பறக்குது மனசு' என்று சந்தேகாஸ்பதமாக சொல்லிவிட்டால் போதும். போகிற வருகிறவர்கள் 'லைக்குகளை' அள்ளி விடும். 3. நல்ல சமுதாயத் தாக்கத்துடன் இருக்க வேண்டும். லஞ்சம், ஊழல்,எதேச்சாதிகாரம் போன்றவைகளுக்கு சாட்டையடி கொடுக்க வேண்டும். (அந்தரங்கத்தில் நாம் சற்று முன்னே பின்னே இருந்தால் பரவாயில்லை). 4. அரசியல்வாதிகள், திரைப்படப் பிரபலங்களைத் திட்ட வேண்டும். (கொஞ்சம் ஆபத்தான வழி; திருப்...