இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமீபத்திய நான்கு நிகழ்வுகள்-சில பதிவுகள் IV

வர்தா புயல் தந்த செல்வம்  பன்னீர் செல்வம்! பெரிய ஆல மரத்தின் கீழ் செடி கொடிகள் வளராது என்பார்கள். பெரிய ஆலமரம் வேரற்றுச் சாயும் போது அடியில் சில செடிகள் துளிர் விடும் போலும். சென்ற வருடப் பெரு மழையின் போது விளைந்த கோர தாண்டவத்தை தொலைக் காட்சி  ஊடகங்களுடன் சேர்ந்து அரசும் வேடிக்கை பார்த்தது. அதன் வீச்சை எதிர் கொள்ள முடியாது அரசு எந்திரம் ஸ்தம்பித்தது. கட்சிக்காரர்கள் விளம்பரத்திலும் வாக்கு வாதங்களிலும் காட்டிய முனைப்பை நிவாரணப் பணிகளில் காட்டவில்லை. இரண்டு காரணங்கள் இருந்திருக்க முடியும். அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேலையில் சுதந்திரம் கொடுக்கப் படவில்லை என்று நினைக்கும் அளவிற்கு இருந்த மேலிடக்  கட்டுப்பாடுகள். என்ன செயலின்மை இருந்தாலும் அம்மாவின் செல்வாக்கு அதனை ஈடு செய்து விடும் என்கிற மெத்தனம். இதை  மீறி முதன் முதலாகத் தனக்கு கிடைத்த வாய்ப்பை  இந்த முறை பன்னீர் நன்கு பயன் படுத்திக்க கொண்டார் என்றே சொல்லவேண்டும். கச்சிதமான முன்னேற்பாடுகளுடன் ஆரவாரமில்லாமல் புயலைத் தமிழகம் எதிர் கொண்டதற்கு திரு.ஓ பன்னீர் செல்வம் முக்கிய காரணம் என்று சொல்ல வேண்ட...

சமீபத்திய நான்கு நிகழ்வுகள் -சில பதிவுகள் III ஆ

இந்தியாவின் தனி நபர் எதிர்க் கட்சியின் மறைவு  இதன் பின்னர் சோவின் அம்மையார் எதிர்ப்பு அவர் முதலாம் ஆட்சி முடிவுக்கு வரும் வரை நீடித்தது. நரசிம்ம ராவ் அதிமுகவுடன் உறவை முறிக்க மறுத்த கையோடு தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானதும் அதன் திமுக தொகுதி உடன்பாட்டுக்குச் சோ பெரும் பங்காற்றினார். அத்துடன் அவரின் ஜெயலலிதா எதிர்ப்பு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் வந்த காலங்களில் அவரின் மறைவு வரைக்கும்  அவர் ஏதோ காரணங்களால் அம்மையாரின் பெரிய ஆதரவாளராக மாறிப் போனார். கடுமையாகவோ கிண்டலாகவோ அம்மையாரை அவர் விமர்சிக்கத் தயங்கியது ஏன் என்பது இன்று வரை துலங்காத மர்மமே. சோ முக்கியமான தருணங்களில் தீர்மானமான நிலைப் பாட்டை  எடுத்தார். அவையாவன: 1. துக்ளக் திரைப்படம் வெளியாவதில் கடும் நெருக்கடிகளை சந்தித்த போது அதைத் துணிவுடன் எதிர்த்தார். 2. நெருக்கடி நிலையைத் துணிவுடன் எதிர்த்தார். 3. திமுகவின் ஒழுங்கீனங்களைச் சாடியவாறே இருந்தார். காங்கிரஸ் வலுவிழந்த நிலையில் அதிமுக கிட்டத்தட்ட திமுகவின் வழிகளையே கொண்டிருந்த நிலையில் விமர்சிக்கும் தேவையை அவர் எதிர்க்கட்சி நிலையில் நின்று பூர்த்தி செய்தா...

சமீபத்திய நான்கு நிகழ்வுகள் -சில பதிவுகள் III அ

இந்தியாவின் தனி நபர் எதிர்க் கட்சியின் மறைவு  துக்ளக் ஆசிரியர் சோ மறைந்தார். அம்மையார் இறந்ததனால் சோவின் மறைவு பெருமளவில் கவனிப்பு பெறாமல் பொய் விட்டது. ஊடகங்கள் பெருமளவில் அதை ஈடு செய்தாலும் வெகு ஜனத் தலைவராக அவர் இல்லாததனால் பெரிதாகப் பொருட்படுத்தப் படவில்லை. இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வது போல் புனைந்த கார்ட்டூனை அட்டைப் படத்தில் தாங்கி  வெளியான அவரின் முதல் இதழிலிருந்து அவரின் வாசகனான நான் பல்வேறு சமயங்களில் அரசியல் கலாசார சமூக பொருளாதாரப் போக்குகளையும் நோக்குகளையும் தெளிவு படுத்திக்கொள்ள அவரைச் சார்ந்திருந்தேன் என்பதை இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். குறிப்பாகக் கலைஞரின் அரசியலுக்கு எப்போதுமே அவர் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்தார். அதில் பெருமளவு நியாயமும் இருந்தது. இந்திரா காந்தியை மோசமாக எதிர்த்தார். நெருக்கடி நிலையின் போது மிகவும் சாதுர்யமாகவும் துணிச்சலுடனும் பத்திரிக்கையை நடத்தினார். (இந்திரா காந்தி யார்? என்கிற கேள்விக்கு சஞ்சய் காந்தியின் தாய் என்று அவர் அளித்த பதில் தணிக்கை செய்யப் பட்டது!) ஒரு இலக்கிய வாதியின் அரசியல் அனுபவங்களை (ஜெயகாந்தன்...

சமீபத்திய நிகழ்வுகள்-சில பதிவுகள் II

அம்மா! ஜெயலலிதா மறைந்து விட்டார். நான் ஒன்றும் அவரது பெரிய விசிறி இல்லை ஆயினும் மிகவும் வருத்தமாக இருந்தது. அவருடைய துன்ப வாழ்க்கை முடிவுக்கு வந்தது. எல்லோரும் பேசிக்கொள்வது போல் பொது வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு மேலே வந்தாராயினும் அந்தரங்க வாழ்க்கையில் மிகவும் தனியாகவும் உண்மையான பாசத்துக்கு ஏங்கும் முரட்டுக் குழந்தையாகவுமே மரிக்கும் வரையிலும் விளங்கினார். கலைஞர், கண்ணதாசன் மறைந்த போது 'கை நீட்டுவோர் பக்கமெல்லாம் கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ ' என்று எழுதினார். இது அம்மையாருக்கும் பொருந்தும். அந்த பலவீனத்தை எல்லோரும் பயன் படுத்திக் கொண்டார்களே தவிர அவர் மீது உண்மையான அக்கறை யாராவது காட்டினார்களா சந்தேகம் தான். சற்று உற்று நோக்கினால் எம்ஜியாருக்கும் என்டியாருக்கும் இது தான் நடந்தது. அவர்கள் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டார்கள். அம்மையார் முதலில் அன்னையின் வற்புறுத்தலுக்காகப் படிப்பைப் பாதியில் விட நேர்ந்தது. இதை அந்த நாளில் குமுதத்தில் எழுதிப் பாதியில் நிறுத்திய சுய சரிதையில் குறிப்பிடுகிறார். பின்னர் எம்ஜியாரின் ஆளுமையின் நிழலில் வாழ நேர்ந்தது. எம்ஜியார் மறைந்த ...

சமீபத்திய நான்கு நிகழ்வுகள்-சில பதிவுகள் I

பண மதிப்பின்மை அறிவிப்பு வந்த போது பர்ஸைத் திறந்து பார்த்தேன். 140 ருபாய் இருந்தது. பின்னர் தான் எல்லா செலவுகளையும் இத்தனை நாளாக அட்டையையும் ஆன்லைன் பண மாற்றங்களையும் வைத்தே சமாளித்து வந்திருக்கிறேன் என்று புரிந்தது. என்னிடம் கறுப்புப் பணமும் இல்லை. கையில் பெரும் பணம் வைக்க வேண்டிய தேவையும் இல்லை. ஆனால்..... கறுப்புப் பண முதலைகள் அரசின் இந்த மிரட்டல்களுக்கு ஈடு கொடுத்தே வருகிறார்கள். பெருமளவில் பாதிக்கப் படுவது ஒழுங்கு முறைத் தொழில் சாரா வெகு மக்கள் தாம். அல்லாடுகிறாரகள். ஏற்கெனவே அன்றாடக் கூலி+அரை வயிற்றுக் கஞ்சி. இந்த லட்சணத்தில் சொந்தப் பணத்தை எடுக்கப் பிச்சை எடுக்க வேண்டிய நிலை. ஆன்லைன் வர்த்தகம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்று வெந்த புண்ணில் வேலைப்  பாய்ச்சுவது போல் அரசின் அறிவுரை வேறு. அனா ஆவன்னா தெரியாதவனை திருப்புகழ் படிக்கச் சொன்னது போலிருக்கிறது. வேறு இடங்களில் புது நோட்டுகளைக் கொத்துக் கொத்தாக அள்ளுகிறார்கள். இவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தும் இது எப்படி நடக்கிறது என்கிற கேள்வி எழுகிறது.  அதிகார/பண வர்க்கத்தின் மேலிருந்து கீழ் வரை நேர்மையின்மை கோலோச்சிக் கொண்ட...