தொல்வெளியிலிருந்து தொடரும் இசை IV
அத்தியாயம் 13 பாண்டிச்சேரி சென்ற பிறகு ஆதித்யாவிற்கு அங்கே பெரிய வாய்ப்பு ஒன்றுமில்லை என்று தெரிந்தது. சிறிய ஊர். ஃபிரெஞ்சு காலனியாக இருந்ததாலோ என்னவோ தமிழ் நாட்டின் இசை மற்றும் கலாச்சாரக் கூறுகளின் நிழல் தான் இருந்தது. ஜனங்கள் மிகவும் சாத்வீகமானவர்கள். எளிமையானவர்கள். அங்கு திராவிட இயக்கங்கள் தமிழ் நாட்டில் செலுத்தி வந்த எதிர் கலாச்சார விழுமியங்கள் அவ்வளவாக இல்லை என்று தான் கூற வேண்டும். ஆந்திரா போல், கர்நாடகம் போல் மக்கள் பெருமளவில் தேசீயத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகத் தானிருந்தனர். பிராமணர்கள் மற்ற ஊர்களை விட அங்கு கம்மி தான். என்றாலும் கோயில்களில் ஆன்மீகமும் தெய்வீகமும் பக்தியும் மற்ற ஊர்களைப் போலவே குறைவில்லாமல் தான் இருந்து வந்தன. இசையைப் பொறுத்தவரை அரசுப் பள்ளி ஒன்று இருந்தது. அங்கு வாத்யங்கள் இசைப்பதற்கும் பாட்டு பயிற்றுவிப்பதற்கும் பாடத் திட்டங்கள் இருந்தன. மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு வந்தனர். தவிரவும் ‘ஜவஹர் யுவ கேந்திரா’ என்கிற மத்திய அரசு அமைப்பில் இசை போன்ற கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. ஒரு சங்கீத சபா இருந்தது. தன்னார்வலர் ஒருவர் நடத்தி வந்தார். எப்போதாவது பிரப...