இடுகைகள்

ஜனவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பம்மாத்து பண்ணிக்கொண்டிருந்தவர்களை ஆட்டங்காண வைத்திருக்கிறார்கள் மாணவர்கள்!

மாணவர்கள் போராட்டங்கள் ஐந்து நாட்கள் கடந்து பின்னும் தளராமல் ஓடிக் கொண்டிருக்கிறது. மிகவும் தன்வயமான இந்த எழுச்சி உள் நோக்கத்துடன் சுயநல நோக்குடன் இருந்திருந்தால் எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும். ஏதாவது விலைக்கு ஒப்புக்கொண்டு இந்நேரம் கூடியிருக்கும் மக்கள் கலைந்திருப்பார்கள். அவர்கள் தளராமல் போராடிக் கொண்டிருப்பதிலிருந்தே மாணவர்களின் - மக்களின் - சுயநல அபிலாஷைஅற்ற பொது நோக்கு வெளிப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகள் உள்ளிட்ட மொத்த இந்தியாவும் - ஏன்? - உலகமே இதை பிரமிப்புடன் கவனித்து வருகிறது. மகாத்மா காந்தி இதைத்தான் விரும்பினார். வன்முறையற்ற கட்டுப்பாடான அகிம்சைப் பேராட்டம் சுதந்திர இயக்கத்திற்குப் பிறகு இன்றுதான் முழுமையாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. என்ன ஒழுக்கம்! என்ன ஒழுங்கு! என்ன கட்டுப்பாடு! மறைந்த ஐ ஜி அருளை ஒருமுறை “அன்றைக்கும் இன்றைக்கும் என்ன வேறுபாடு?” என்று கேட்டபோது சொன்னார்... “அன்றைக்குப் பேராட்டத்தில் கடைசி ஆயுதம்தான் வன்முறை; இன்று போராட்டத்தில் அது தான் முதல் தகவல் தொடர்பு சாதனம்” இப்போது பேராட்டம் என்றால் நான்கு பஸ் எரிய வேண்டும்: பத்து பேர் சாகவேண்டும். பொதுச் ...

ஜல்லிக் கட்டு

எங்கள் ஊரில் இதை மஞ்சு விரட்டு என்பார்கள். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் நிறைய மாடுகள் இருந்தன. மேய்ச்சலுக்கு ஓட்டிப் போவதற்கு அஞ்சலை என்று ஒரு பெண்மணி வருவார். பார்ப்பதற்கு மிகவும் லட்சணமாக இருப்பார். ஒரு முறை தன்  சேமிப்பில் வாங்கியிருந்த ஒரு மோதிரத்தை என் அன்னையிடம் காண்பித்துக் கொண்டிருந்தார். இவர் கணவர் வீரன் பிளம்பர். எங்கள் வீட்டு பைப் வேலையெல்லாம் செய்வார். ஒரு நாள் அஞ்சலை அகாலமாய் இறந்து போனார். குழந்தை வேண்டாம் என்று கருச்சிதைவு யாரோ போலி டாக்டரிடம் செயது கொண்டதில் ரத்தப் போக்கு நிற்காமல் இறந்தார்.  வெங்கடாச்சலம் பால் கறக்கும் கோனார். அவரின் மனைவி பாப்பா. பாப்பாவின் தங்கை சின்னப் பொண்ணையும் அவரே மணந்து கொண்டார். இந்த வெங்கடாச்சலம் வைத்தது தான் என் வீட்டில் சட்டம். ஒரே தர்பார் தான். வரும்போதே 'ஜானகி அம்மா' (என் அன்னையின் பெயர்) என்று கத்திக் கொண்டே வருவார். பயந்து வரும். வெங்கடாச்சலம் பாப்பா இருவரும் டிபி வந்து இறந்து போனார்கள். இனி விஷயத்துக்கு வருகிறேன். மஞ்சு விரட்டு என்பது ஏதாவது திடலில் தானே நடக்க வேண்டும்? எங்கள் ஊரில் மாட்டுப் பொங்கல் அன்று வீதியிலேயே நட...