ஜோக்கர்
நேற்று டெல்லி தமிழ் சங்க நூலகத்திற்கு இரவல் புத்தகம் மாற்றுவதற்காகச் சென்றேன். தற்செயலாக ஜோக்கர் திரைப் படம் திரையிடுகிறார்கள் என்கிற அறிவிப்பைப் பார்க்க நேர்ந்தது. பெரிதாகச் செய்ய ஒன்றுமில்லையாதலால் படத்தைப் பார்த்து வைப்போமே என்று போய் அரங்கில் உட்கார்ந்தேன். இந்தப் படம் இயக்கிய தம்பி ராஜு முருகனின் 'வட்டியும் முதலும்' என்கிற புத்தகத்தை ஏற்கெனவே படித்திருந்தேன் என்பதால் அவர் மீது மதிப்பிருந்தது. தவிரவும் இப்படம் சமீபத்தில் தேசிய விருது வாங்கி இருந்த அறிவிப்பை பார்த்த ஞாபகம். தம்பியின் வட்டியும் முதலும் என்கிற புத்தகம் நடைச் சித்திரம் வரிசையில் வந்தது. அருமையான பதிவுகள் உள்ள குறிப்பிடத் தகுந்த படைப்பு. அதில் வருகின்ற மாந்தர்கள் இன்னும் என் நினைவில் உலா வருகின்றனர். குறிப்பாக மனைவி இன்னொருவனைக் காதலித்து அவனுடன் ஓடிப் போன பின்பும் அவளை மன்னித்து காதலனுடன் வாழ அனுமதித்த திருநா அண்ணன். இது நிற்க. படத்தைப் பொறுத்தவரை நேரடியாக அழுத்தமான செய்தி சொல்லும் படமாகத் தெரிந்தது. அதிகார வர்க்கத்தினரும் ஆளும் கட்சிகளும் செய்யும் அராஜகங்களுக்கு சவுக்கடி கொடுக்கிறது படம். குறிப்பாக மோடிய...