இடுகைகள்

மே, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரஜினிகாந்தின் அரசியல்

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று சூடாக தொலைக்காட்சியில் விவாதங்கள் நடந்து வந்து இப்போது சற்று ஓய்ந்திருக்கிறது.மத்திய அரசு மாட்டிறைச்சித் தடைக்கு சுற்றறிக்கை அனுப்பியதும் கவனம் திரும்பி விட்டது. இப்போது இந்துத்துவாவிலிருந்து கைபர் கணவாய் வரை சந்திக்கு இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி அவ்வப்போது இந்த வெடியைக் கொளுத்தி விட்டுப் போகிறது வழக்கம் தான் என்பதால் ஆச்சர்யப் பட எதுவும் இல்லை தான். ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வரும் வாய்ப்பு இல்லை என்று தான் தோன்றுகிறது. இது போன்ற அறிவிப்புகளை அவர் தன்  படம் வெளிவரும் சமயம் பரபரப்பை ஏற்படுத்துவதற்காகத் திட்டம் போட்டுச் செய்கிறார் என்று சிலர் குற்றம் சாட்டுவது பிழை என்றும் இதை அவரின் முடிவெடுக்க முடியாத நிச்சயமற்ற தன்மை என்றும் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அரசியலுக்கு வர விரும்பும் ஒருவர் முப்பது வருடங்களாக ஆண்டவனிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்.  மாறாக அவர் முடிவு எடுத்து விட்டதாகக் கருதலாம். ஆனால் அதில் அவரின் எதிர்பார்ப்பாக தோன்றுவதெல்லாம்- தன் முக்கியத்துவம் குறைந்து விடக்  கூடாது. க...