இடுகைகள்

செப்டம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாட்சப் III

இப்படிப் பட்ட சந்தர்ப்பத்தில் நானும் காதலாய் ஒரு குழுமத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.எல்லாம் ஆருயிர் நண்பர்கள். பலதரப் பட்டவர்கள். இரண்டு  மூன்று கணக்காயர்கள். இரண்டு மூன்று வக்கீல்கள். பேராசிரியர் ஒருவர். விஞ்ஞானி ஒருவர். சர்வதேச விற்பனைத் தலைவர் ஒருவர். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. வழக்கமான வாழ்த்துச் செய்திகள், விடியோக்கள், சாமி படங்கள், கர்ப்பகிருஹத்தில் ஆசிர்வதிக்கும் நல்ல பாம்பு போன்ற வினோத சம்பவங்கள், வேலைக்காரியுடன் கள்ள உறவு மற்றும் மனைவி புடவையைத் தோய்ப்பது போன்ற சாகா வரம் பெற்ற ஜோக்குகள் இத்யாதி இத்யாதி....... இதில் ஒரு குறிப்பிட்ட வகை  அடக்கம். அது ஒரு பொது எதிரியைக் கண்டு பிடிப்பது.பொது எதிரி குழுவுக்கு குழு மாறுபடும். ஒரே குழுமத்தில் கூட இரண்டு மூன்று எதிர் எதிர் நிலைகள் இருக்கலாம். அது ஆரம்பித்த கொஞ்ச நாட்களுக்குப் பின் புரிந்து விடுமாதலால் ஒருவருக்கொருவர் ரொம்ப சண்டையில்லாமல் மழுப்பி விடுவார்கள். இதையும் மீறி எல்லாருக்கும் பொது எதிரிகள் சிலர் உண்டு. அவர்கள் பட்டியல் வருமாறு: 1. அரசியல் வாதிகள். 2. போலீஸ்காரர்கள். 3. அரசு ஊழியர்கள். ...