இடுகைகள்

நவம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் நாட்டின் சிறு பத்திரிக்கைகளும் பெரிய சஞ்சிகைகளும்

தமிழ் நாட்டின் இலக்கிய போக்குகளை நாம் அவதானிப்பதற்கு சிறு பத்திரிக்கைகள் மற்றும் பெரிய சஞ்சிகைகள் என்கிற இரு பெரும் கால்வாய்களை புரிந்து கொண்டாக வேண்டும். சிறு பத்திரிக்கையை நடத்துகிறவர்களோ அல்லது அதில் எழுதுகிறவர்களோ என்னவோ தங்களின் தலைக்குப் பின் ஒளி வட்டம் தோன்றியது போல் பெரிய சஞ்சிகைகளையும்  அதன் ஸ்ருஷ்டி கர்த்தாக்களையும் இகழ்ச்சியாகப்  பார்ப்பதும் பேசுவதும் நடந்து வருகிறது. இதன் காரணங்கள் பல இருந்தாலும் எனக்குத் தோன்றும் பிரதான காரணம் ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் பார்த்தால் பத்ராதிபர்கள் எல்லோரும் தஞ்சாவூர்க்காரர்களாக இருந்திருக்கிறார்கள். தஞ்சாவூர்க்காரர்கள் என்றால் தஞ்சாவூரிலிருந்து ஆரம்பித்து சென்னை வரை என்று பொருள் கொள்ளலாம். திருநெல்வேலிக்காரர்கள் பிரமாதமான எழுத்தாளர்களாக இருந்தபோதிலும் தஞ்சாவூர்க்காரர்களிடம் கை  கட்டி வேலை  செய்கிறவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இது போன்ற ஒரு போக்கு ஆழமான காழ்ப்புணர்ச்சியை திருநெல்வேலிக்காரர்களிடம் உண்டு பண்ணியிருப்பதில் பெரிய ஆச்சர்யம் இல்லை. ஒன்றிரண்டு கட்டுரைகளில் சுப்ரமணிய பாரதியாரே சுதேசமித்திர...