இடுகைகள்

டிசம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை IV

படம்
அத்தியாயம் 13 பாண்டிச்சேரி சென்ற பிறகு ஆதித்யாவிற்கு அங்கே பெரிய வாய்ப்பு ஒன்றுமில்லை என்று தெரிந்தது. சிறிய ஊர். ஃபிரெஞ்சு காலனியாக இருந்ததாலோ என்னவோ தமிழ் நாட்டின் இசை மற்றும் கலாச்சாரக் கூறுகளின் நிழல் தான் இருந்தது. ஜனங்கள் மிகவும் சாத்வீகமானவர்கள். எளிமையானவர்கள். அங்கு திராவிட இயக்கங்கள் தமிழ் நாட்டில் செலுத்தி வந்த எதிர் கலாச்சார விழுமியங்கள் அவ்வளவாக இல்லை என்று தான் கூற வேண்டும். ஆந்திரா போல், கர்நாடகம் போல் மக்கள் பெருமளவில் தேசீயத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகத் தானிருந்தனர். பிராமணர்கள் மற்ற ஊர்களை விட அங்கு கம்மி தான். என்றாலும் கோயில்களில் ஆன்மீகமும் தெய்வீகமும் பக்தியும் மற்ற ஊர்களைப் போலவே குறைவில்லாமல் தான் இருந்து வந்தன. இசையைப் பொறுத்தவரை அரசுப் பள்ளி ஒன்று இருந்தது. அங்கு வாத்யங்கள் இசைப்பதற்கும் பாட்டு பயிற்றுவிப்பதற்கும் பாடத் திட்டங்கள் இருந்தன. மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு வந்தனர். தவிரவும் ‘ஜவஹர் யுவ கேந்திரா’ என்கிற மத்திய அரசு அமைப்பில் இசை போன்ற கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. ஒரு சங்கீத சபா இருந்தது. தன்னார்வலர் ஒருவர் நடத்தி வந்தார். எப்போதாவது பிரப...

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை III

படம்
அத்தியாயம் 11 பாண்டிச்சேரிக்கு செல்வதற்கு முன்பே ஆதித்யாவிற்குப் பள்ளியில் பிரச்னைகள் ஆரம்பித்திருந்தன.  பதின் பருவத்தின் நுழைவாயிலில் இருந்தான்.  அவன் பள்ளி நடவடிக்கைகளைப் பற்றி நாங்கள் பெரிதாக ஆராயப் புகுந்ததில்லை.  ஏதாவது புது வம்பு வந்து விடப் போகிறதே என்கிற பயம்.  அவனும் ஏதாவது நகைச் சுவையாகப் பண்ணிக் கொண்டிருப்பான்.  ஒருமுறை வீட்டில் உபயோகமற்றுக் கிடந்த கூலிங்கிளாஸ் ஒன்றை எடுத்து மாட்டிக் கொண்டு சென்றுவிட்டான்.  அதைத் தொடர்ச்சியாக தினமும் மாட்டிக் கொண்டு செல்வது என்று ஆரம்பித்தான்.  பள்ளியில் கழற்றுவதேயில்லை.  சக மாணவர்கள் கிண்டல்களையும் பொருட்படுத்துவது இல்லை.  பள்ளியில் எங்களைக் கூப்பிட்டு அனுப்பினார்கள்.  நாள் பூரா கூலிங்கிளாஸைப் போட்டுக் கொண்டிருக்கிறான் என்றும் மாணவர்களுக்குப் பெரிய கவனச்சிதறல் ஏற்படுகிறது என்றும் சொன்னார்கள்.  அதை ஒளித்து வைத்து, ஒளித்து வைத்து ஒழித்துக்கட்டினோம். வனவிலங்குகளைப் பார்ப்பதற்கு சஃபாரி செல்லும் ஒரு குடும்பம் பற்றிய விளம்பரப் படம் ஒன்று நினைவுக்கு வருகிறது.  காட்டில் காரில் போய்க்...