இடுகைகள்

ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை V

படம்
அத்தியாயம் 17 “இது தான் பையனா?” என்றார் அந்த மனிதர். குட்டையாய் மாநிறமாய் இருந்தார். இடுப்பில் எட்டு முழ வேட்டி பனியன் அணிந்து கொண்டிருந்தார். குளிக்கவில்லை போலிருக்கிறது. “எங்கேர்ந்து வர்றேள்? பாண்டிச்சேரிலேந்து வர்றேளாக்கும்” என்றார். “ஆமாம்” என்றேன் பொத்தாம் பொதுவாக. நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ள தனி வீடு. அந்தக் காலத்து வீடு. வாசல் தாழ்வாரம் நல்ல விசாலமாக இருந்தது. அதில் ஒரு மூங்கில் நாற்காலிகளும் ஒரு டீபாயும் இருந்தது. டீபாயில் அன்றைய நாளிதழ் காகிதங்கள் இறைந்து கிடந்தன. எங்களை நிற்க வைத்துக் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தவர் நாங்கள் பார்க்க வந்த இசையாசிரியையின் கணவர் என்று அநுமானிக்க முடிந்ததே ஒழிய அவர் அறிமுகம் செய்து கொள்ளவெல்லாம் மெனக்கெடுவதாய் இல்லை. வீட்டிற்குள்ளிருந்து மெல்லிய இசை ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. மகுடிக்கு மயங்கிய நாகம் போல் ஆதித்யா அதை நோக்கி ஓட யத்தனித்தான். அவனை அவர் மிகவும் முரட்டுத்தனமாய்த் தடுத்து நிறுத்தி விட்டு, அங்கே உள்ளேயிருந்து எட்டிப் பார்த்த பெண்ணை கையால் சைகை செய்து அழைத்தார். அவளிடம் “போய் ஒரு நோட் புக் எடுத்துக்கொண்டு வா” எ...