தொல்வெளியிலிருந்து தொடரும் இசை VII
அத்தியாயம் 24 “ இந்தக் குழந்தை வேறு ஒரு சிந்தனையுமில்லாமல் இசையிலேயே மூழ்கிக் கிடக்கிறானே இவன் கதி ?” என்று என் மனைவி ஆற்றாமையில் ஒரு நாள் பெரிய இசைவாணரிடம் கேட்டிருக்கிறாள் . அதற்கு அவர் , “ நாம ரோடில நடந்து போயிண்டிருக்கற போது ஒருத்தன் குடிச்சிட்டு விழுந்து கிடந்தான்னா அவனைத் தாண்டிப் போயிண்டிருப்போம் . அப்படி நெனைச்சுக்க வேண்டியது தான் ” என்றிருக்கிறார் கிராதகத்தனமாக . என் மனைவி எதார்த்தமாகக் கேட்ட கேள்விக்கு எவ்வளவு அரக்கத்தனம் இருந்தால் ஒரு மனிதன் இப்படி பதில் சொல்ல முடியும் ? இதைச் சொல்லி என் மனைவி அழுத போது நான் இதற்காகத் தானோ என்னவோ கடவுள் இந்த மனிதருக்கு சந்தான சௌபாக்கியத்தைத் தரவில்லை என்று நினைத்துக் கொண்டேன் . இந்த மனிதர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டபோதும் குழந்தைகள் இல்லை . இவர் உறவினர் இசைவாணர் திருமணமாகியிருந்தும் குழந்தைகள் இல்லை . அவருக்குப் பின்னர் மணமுறிவும் ஆகி விட்டது . “ ஆதித்யா எங்களுக்கெல்லாம் மேலே ” என்று சொ...