தொல்வெளியிலிருந்து தொடரும் இசை XI
அத்தியாயம் 30 “போகாதே; இங்கியே நான் அவனுக்கு நல்ல ஒரு காரியர் அமைச்சுத் தரேன்னு சொல்றேன். சென்னையிலேயும் என்னால அவனுக்கு ஏற்பாடு பண்ணித் தர முடியும்,” என்று சொல்லிக் கொண்டிருந்தார் இசை ஆசிரியை. என் மனைவி அதைப் பொருட்படுத்தத் தயாராக இல்லை. சீரான வகுப்புகள் இல்லை. காரணம் என்னவென்றால் ஏற்கெனவே ஒரு இசையாசிரியர் சொன்னபடி இசையில் – குறிப்பாகக் கர்நாடக இசையில்- மொத்தம் ஏழு படி நிலைகள் இருந்தால் ஆதித்யா ஏற்கெனவே அதில் ஆறாம் படியில் இருக்கிறான். வாய்க்கின்ற இசை ஆசிரியர்கள் ஐந்தாம் படியில் தான் இருக்கிறார்கள் எனும் போது அவர்களால் என்ன பெரிய பாடத்தைப் படிப்பித்து வைக்க முடியும்? சென்னைக் கல்லூரியில் பெண்ணிற்கு சேர்க்கை கிடைத்தவுடன் வேறு தெரிவும் இல்லாது போயிற்று. எங்கள் முன் இருந்த தெரிவுகள்: 1. பெண்ணை புது டெல்லியிலேயே படிக்க வைப்பது. 2. சென்னையில் விடுதியில் தங்கிக் கொண்டு படிக்க ஏற்பாடு செய்வது. 3. என்னைத் தவிர்த்த குடும்பத்தையே சென்னைக்குப் பெயர்ப்பது. இதில் மூன்றாவது வாய்ப்பையே என் மனைவி தேர்ந்தெடுத்தாள். ஆதித்யாவின் இசையையும் கொஞ்சம் கவனிக்கலாம் என்கிற எண்ணம் என்று சொல்லித் தெரி...