இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை தொடர் குறித்து சொல்வனத்தின் மதிப்புரை

அஸ்வத் எழுதிய ‘தொல்வெளியிலிருந்து ஓர் இசை’ – கட்டுரைத் தொடர் முடிவு குறித்து: தமிழிலக்கியத்தில் முற்றிலும் புது வகைக் கருத்துகள், சிந்தனைகளைக் கொடுக்கும் பல கட்டுரைத் தொடர்களைச் சொல்வனம் வெளியிட்டு இருக்கிறது. இவை எவை போலவும் இல்லாத ஒரு அபூர்வமான கட்டுரைத் தொடர் அஸ்வத் நாராயணன் எழுதிய  ‘தொல்வெளியிலிருந்து ஓர் இசை’ என்பது.  இதை எப்படி வகை பிரிப்பது என்று துவக்கத்திலிருந்து இறுதி வரை எங்களுக்கு ஓர் முடிவின்மைதான் இருந்திருக்கிறது. இது கர்நாடக இசை பற்றியது, ஒரு இளம் மேதை பற்றியது, சிறுவனாக இருந்ததிலிருந்து இளைஞனாக வளர்ந்த நிலை வரை ஓர் இளம் ஜீவன் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது, இன்னும் சிறிது அவலச் சுவை வேண்டுமெனில் நம் கலைப் பரப்பில் என்னென்ன விதமான கசப்புகள் நிலவுகின்றன  என்றும் சுட்டுவதாகவும்  இதை நாம் பார்க்கலாம். ஒரே நேரம் பண்டை உலகத்தின் சுவடுகளை இன்றும் சுமந்திருக்கும் நம் பண்பாடு, கலை, சிந்தனை வெளியிலும் சஞ்சரித்து, இன்றைய பெருநகரங்களின் கடுமை நிறைந்த வெளியிலும் உலவி, அரூபமான கலையின் நுட்பங்களிலும் திளைத்து வந்திருக்கிற கட்டுரை இது. கட்டுரையாள...

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை XIII

படம்
அத்தியாயம் 34 என் தந்தை 92 வருடங்கள் வாழ்ந்தார். ஒழுக்கத்தாலும் கட்டுப்பாட்டினாலும் இளைஞனைப் போல் வாழ்ந்து மறைந்தார். சுகமோ துக்கமோ எல்லாவற்றையும் விழுங்கியவர். அதிகம் பேசுகிறவர் அன்று. அளவாகத் தான் பேசுவார். கடைசியில் 92 ஆம் வயதில் வந்த சிறுநீர் அடைப்பு அவரைக் கிட்டத்தட்ட ஒரு மாதம் படுக்கையில் தள்ளியது. நாங்கள் அருகில் இருந்து கவனித்து வந்தோம். காலையில் செய்தித்தாள் வந்து விட்டதா என்று வினவுவார். வந்தால் மூக்குக் கண்ணாடியை அணிவித்து பேப்பரைப் பிடித்துக் கொள்வோம். அவர் படுத்த மேனியிலேயே தலைப்புச் செய்திகளாய் மேய்ந்து விட்டுப் போதும் என்பார். இறப்பதற்கு கொஞ்ச நாள் முன்னர் அவர் நினைவு எப்படி இருக்கிறது என்று பரிசோதிப்பதற்காகக் காதில் ‘அப்பா! ‘ஹைனஸ்’ (எங்கள் ஊர் மன்னர்) இருக்காரா?’ என்று வினவினேன். ‘இல்லை போயிட்டான்; மூணு மாசம் ஆய்டுத்து’ என்றார். அவர் நினைவு கடைசி வரையிலும் அவ்வளவு துல்லியமாக இருந்தது. என் அன்னை விருத்தாப்பியத்தில் இருந்த போது என் வீட்டிற்கு ஒரு நண்பர் வந்திருந்தார். நாஸ்திகர். பிராமணர்கள் மீது காழ்ப்புணர்ச்சி உண்டு. ஜெயகாந்தனைக் கொண்டாடுவார். ஜெயகாந்தன் எழுத்துக்க...