இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதுரா விஜயம்

மதுரா விஜயம் வெளியே “ஜெய விஜயீ பவ!” என்கிற கோஷம் விண்ணைப் பிளந்தது. கங்காதேவிக்கு ஒரு ஆச்சர்யமும் எதிர்பார்ப்பும் இல்லை. படை வீட்டில் அமர்ந்து கொண்டு தான் சற்று முன் பூஜை செய்திருந்த பவானி அன்னையின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சங்கம குலகுருவான கிரியா சக்திப் பண்டிதர் வயது முதிர்ந்த பிராயத்தில் அவளுக்கு அளித்த பிரதிமை அது. நல்ல சிற்பியின் கை வேலைப்பாடு அந்தச் சிலையில் மிளிர்ந்தது. அமர்ந்த நிலையில் இருந்த அந்த ஐம்பொன்னால் ஆன சிலை தவழ்ந்த புன்முறுவலுடன் திருத்தமாக அமைக்கப்பட்டிருந்தது. கையில் வில்லும் பாசங்குசமும் அபய ஹஸ்தமும் கொண்டிருந்த அருமையான சிலை. கிரியா சக்திப் பண்டிதர் குருநாதர் விஸ்வநாதனிடம் சொல்லி அனுப்பினாராம்: “பிராண பிரதிஷ்டை செய்து விட்டேன். என் யோக சக்தி எல்லாம் இதில் இறக்க விட்டேன். வீட்டுக்கு விலக்கான நேரம் தவிர மற்ற காலங்களில் தவறாமல் பூஜை செய்யச் சொல்லு. கங்கா போகின்ற இடங்கள் எல்லாம் ஜயமாகவே இருக்கும். கங்காவின்...