இடுகைகள்

நளினி ஜமிலா - ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை

இந்தப் புத்தகத்தை இன்று காலை ஆரம்பித்தேன் . ஒரே மூச்சில் படித்து முடித்தேன் . வழக்கமாக ஆண்களுக்கு உள்ள ஆர்வம்தான் . அந்தக்காலத்தில் சாவியில் ‘ என் பெயர் கமலா ’ என்று புஷ்பா தங்கதுரை தொடர்ச்சியாக எழுதினார் . அது அதிர்வலைகளை எழுப்பிதோ என்னவோ நிறைபேர் ( பெண்கள் உட்பட ) அதைப் படிப்பதில் ஆர்வம் காட்டினர் . அதற்குக் கிடைத்த வரவேற்பை புஷ்பா தங்கதுரையும் சாவியும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர் . அதை நிறைய புனைவுகள் சேர்த்து எவ்வளவு நீட்ட முடியுமோ அவ்வளவு நீட்டினார்கள் . போதாதென்று தொடர் முடிந்த கையுடன் புஷ்பா தங்கதுரை ‘ மீண்டும் கமலா ’ என்று வேறொரு தொடரை ஆரம்பித்து விட்டார் . சமூகப் பணிக்கு சமூகப் பணியுமாச்சு ; சர்குலேஷனுக்கு சர்குலேஷனுமாச்சு என்கிற நிலைமை . அதில் இருந்த அநுதாபத்திலும் சமூகப் பொறுப்புணர்விலும் பொதிந்திருந்தது பாலியல் வக்கிரங்களுக்குத் தீனி போடும் முயற்சி ஒன்றுதான் . உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழில் ஏற்கனவே நூல்கள் வந்திருக்கிறதா தெரியவில்லை . வந்திருந்து நான் படிக்காமல் இருந்திருக்க...