இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
காலச்சுவடு இதழில் கிருஷ்ணன் என்பவர் பெரியார் பற்றி ஒரு திறனாய்வு எழுதி இருந்தார் . அதற்கு என் பதிலாக நான் எழுதிய எதிர் வினையை அவர்கள் வெளியிடவில்லை. அதனால் என்ன? அந்த எதிர் வினை இதோ : அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். கடந்த மார்ச் இதழில் வெளிவந்த கிருஷ்ணன் அவர்களின் கட்டுரையையும் அதற்கான எதிர் வினையாக ஏப்ரல்  இதழில் வந்த கடிதங்களையும் கண்டேன். என்னுடைய எதிர்வினைகளை இங்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்: 1. பெரியார் குறித்த கிருஷ்ணனின் பார்வை, விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய கட்டுரை மற்றும் சேரன்மாதேவி குருகுலம் குறித்த  நூல் மதிப்பீடு இலங்கையில் முஸ்லிம்கள் நிலை பற்றிய கட்டுரை  எல்லாமே என் பார்வையில் ஒரு விஷயத்தையே குறிப்பதாய்த் தோன்றுவது நகை முரணே. 2. கிருஷ்ணன் என்னதான் புரட்சிகரமாகப் பூணூலை அவிழ்த்து ஏறிய முயன்றாலும் அதை மீண்டும் மாட்டுவதற்குத்தான் ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும். கமலஹாசனுக்கு இது தான் நடந்தது. பெரியாரின் சிஷ்யகோடிக்களுடன் தன்னையும் வலிந்து இணைத்துக்கொள்ள முயன்ற அவரை, 'முஸ்லிம் சகோதரர்கள் படம் பார்த்த பின் அண்டா அண...
சமீபத்திய கற்பழிப்பு சம்பவங்களுக்கான காரணங்களாக நான் நினைப்பவை : 1. பெண்களை போகப்பொருளாகச் சித்தரிக்கும் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள். 2. குடி. 3. மாநகரங்களுக்குக் குடிபெயரும் வேலையில்லா வாலிபர்கள். 4. பொதுமக்களைக் காப்பதற்குத் திராணியற்ற போலீஸ். 5. 'எவன் எக்கேடு கேட்டால் நமக்கு என்ன; எதாவது உதவி செய்யப்போய் நாம் போய் வம்பில் மாட்டிக்கொள்வானேன்' என்று நினைத்து ஒதுங்கும் பொது ஜன மனோபாவம்.