நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம் இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்கள். இவர் இல்லுமினாட்டி என்கிற உலகை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு ரகசியக் குழுவின் உறுப்பினர் என்றும் கிறிஸ்துவ மத மாற்றக் குழுக்களுக்கு உதவி செய்ய இறக்கி விடப்பட்டிருக்கிறார் என்றும் பேச்சு. இதற்கு பதிலாக எதிர் கோஷ்டியினர் இவர் பாஜகவின் பி டீம் என்று கழுவி ஊற்றுகிறார்கள். திரைப்பட நடிகர் கமலஹாசன் குணாதிசயக் கூறுகளை உன்னிப்பாக கவனிக்கும் எவரும் அவற்றில் காணப்படும் முரண்கள் இது போன்ற சந்தேகங்களுக்கு இடம் கொடுப்பதாகவே புரிந்து கொள்வார்கள். அவர் இயல்பு. 'உதயநிதியை சந்தித்தீர்களா?' என்று நிருபர் கேட்டதற்கு இவர் அளித்த பதில் இவரை எல்லோரும் பயங்கரமாக நையாண்டி செய்யக் காரணமாய் அமைந்து விட்டது. நல்ல நடிகர், நடனம் ஆடுபவர், சினிமாவின் சகல துறைகளையும் நுணுக்கமாக அறிந்தவர், பாடக் கூடியவர், பல மொழிகளிலும் உரையாடும் ஆற்றல் பெற்றவர், கடும் உழைப்பாளி போன்ற பல திறமைகளுக்கு சொந்தக்காரர். அரசியலில் இறங்கித்தான் பிரபல்யம் தேட வேண்டும் என்கிற தேவை இல்லாதவர் என...
கருத்துகள்
கருத்துரையிடுக