என் பெயர் அஸ்வத். இரண்டு நாவல்கள்,
சில கட்டுரைகள் மற்றும் ஒன்றிரண்டு பேட்டிகள்; இது தான் என் இலக்கியப்பணி.
புது தில்லியில் வங்கிப் பணி புரிந்து வரும் நான் அவ்வப்போதைய நிகழ்வுகள் குறித்து
என் பதிவுகளை இங்கே
இட விரும்புகிறேன்.
மற்றவை அவ்வப்போது....
பேட்டிகள்
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பத்திரிகைகளுக்காக
அஸ்வத் எடுத்த பேட்டிகள் இவை.
முதலில் நாட்டுப்புறக் கலைஞர் கே.ஏ.க்குணசேகரன் அளித்த பேட்டி:
நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம் இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்கள். இவர் இல்லுமினாட்டி என்கிற உலகை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு ரகசியக் குழுவின் உறுப்பினர் என்றும் கிறிஸ்துவ மத மாற்றக் குழுக்களுக்கு உதவி செய்ய இறக்கி விடப்பட்டிருக்கிறார் என்றும் பேச்சு. இதற்கு பதிலாக எதிர் கோஷ்டியினர் இவர் பாஜகவின் பி டீம் என்று கழுவி ஊற்றுகிறார்கள். திரைப்பட நடிகர் கமலஹாசன் குணாதிசயக் கூறுகளை உன்னிப்பாக கவனிக்கும் எவரும் அவற்றில் காணப்படும் முரண்கள் இது போன்ற சந்தேகங்களுக்கு இடம் கொடுப்பதாகவே புரிந்து கொள்வார்கள். அவர் இயல்பு. 'உதயநிதியை சந்தித்தீர்களா?' என்று நிருபர் கேட்டதற்கு இவர் அளித்த பதில் இவரை எல்லோரும் பயங்கரமாக நையாண்டி செய்யக் காரணமாய் அமைந்து விட்டது. நல்ல நடிகர், நடனம் ஆடுபவர், சினிமாவின் சகல துறைகளையும் நுணுக்கமாக அறிந்தவர், பாடக் கூடியவர், பல மொழிகளிலும் உரையாடும் ஆற்றல் பெற்றவர், கடும் உழைப்பாளி போன்ற பல திறமைகளுக்கு சொந்தக்காரர். அரசியலில் இறங்கித்தான் பிரபல்யம் தேட வேண்டும் என்கிற தேவை இல்லாதவர் என...
தமிழ் இலக்கிய உலகின் துருவ நட்சத்திரம் ‘’ என் பெண்டாட்டி ஒரு நாள் அந்தப் பழனியோட ஓடிப் போயிட்டா மகனே.’’ ‘’யூமீன் யுவர் வொய்ப் அண்பரியாரி?’’ ‘’ஆமாம் மகனே’’ ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் ஹென்றிக்கும் அவன் தகப்பனாருக்கும் நடக்கும் உரையாடலாக வருபவை மேற்கூறிய வரிகள். இந்த நாவல் படித்த அனைவரும் மறக்க முடியாத வரிகள், ஷேக்ஸ்பியரின் யூ டூ ப்ரூட்டஸ்? என்கிற வரிகள் அல்லது வேத வியாஸரின் அஸ்வத்தாமா ஹதக் குஞ்சரஹ போன்று மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு ரசிக்கத் தக்க வரிகள். ஆரம்ப நாட்களிலிருந்து மேற் கூறிய நாவல் வரை ஜெயகாந்தனின் புனையுலகில் வளர்சிதை மாற்றத்தை சற்று உன்னிப்பாகக் கவனிக்கும் போது சில சுவாரஸ்யமான கூறுகள் நமக்குக் கிடைக்கின்றன. சிறுகதைகளின் இலக்கணத்தை வரைந்தவர் என்றாலும் சிறுகதைகளை செய்திகளைத் தெரிவிக்கும் ஊடகமாக மட்டும் பயன்படுத்தினார் என்று கருத வேண்டியிருக்கிறது. எதிர் மறையாக ஒரு கருத்திலிருந்து தான் சொல்ல வந்ததை நிறுவ...
பிற்கால சோழர்களில் ஆதித்த கரிகாலன் கொலையுண்டதும் சுந்தர சோழனுக்குப் பிறகு உத்தம சோழன் பட்டத்துக்கு வந்ததும் சரித்திர நிகழ்வுகள். ஆதித்த கரிகாலன் கொலையுண்டது பாண்டிநாட்டு சதிகாரர்களால் என்று கூறப்பட்ட போதிலும் அது இன்றுவரை துப்புத் துலங்காத மர்மமே. இந்த மர்ம வலைப் பின்னலில் நந்தினி என்று ஒரு கற்பனா பாத்திரம் - இந்த நந்தினியின் பிறப்பு என்கிற மர்மம். இந்த மர்ம முடிச்சைக் கொஞ்சங் கொஞ்சமாய் அவிழ்க்கும் சுந்தர சோழர், அநிருத்த பிரம்மராயர், செம்பியன் மாதேவி, மதுராந்தகன், கருத்திருமன் ஆழ்வார்க்கடியான் என்பன போன்ற எண்ணிறந்த கதாபாத்திரங்கள். மொத்தம் ஐந்து பாகங்கள். ஒவ்வொரு பாகமும் கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள் மீண்டும் மீண்டும் பிரசுரம் செய்தும் இன்றும் படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும் மகத்தான காவியத்தைத் தமிழில் எழுதியவ...
கருத்துகள்
கருத்துரையிடுக