ஞாயிறு, 27 மே, 2018

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை XI

அத்தியாயம் 30
“போகாதே; இங்கியே நான் அவனுக்கு நல்ல ஒரு காரியர் அமைச்சுத் தரேன்னு சொல்றேன். சென்னையிலேயும் என்னால அவனுக்கு ஏற்பாடு பண்ணித் தர முடியும்,” என்று சொல்லிக் கொண்டிருந்தார் இசை ஆசிரியை. என் மனைவி அதைப் பொருட்படுத்தத் தயாராக இல்லை. சீரான வகுப்புகள் இல்லை. காரணம் என்னவென்றால் ஏற்கெனவே ஒரு இசையாசிரியர் சொன்னபடி இசையில் – குறிப்பாகக் கர்நாடக இசையில்- மொத்தம் ஏழு படி நிலைகள் இருந்தால் ஆதித்யா ஏற்கெனவே அதில் ஆறாம் படியில் இருக்கிறான். வாய்க்கின்ற இசை ஆசிரியர்கள் ஐந்தாம் படியில் தான் இருக்கிறார்கள் எனும் போது அவர்களால் என்ன பெரிய பாடத்தைப் படிப்பித்து வைக்க முடியும்?
சென்னைக் கல்லூரியில் பெண்ணிற்கு சேர்க்கை கிடைத்தவுடன் வேறு தெரிவும் இல்லாது போயிற்று. எங்கள் முன் இருந்த தெரிவுகள்: 1. பெண்ணை புது டெல்லியிலேயே படிக்க வைப்பது. 2. சென்னையில் விடுதியில் தங்கிக் கொண்டு படிக்க ஏற்பாடு செய்வது. 3. என்னைத் தவிர்த்த குடும்பத்தையே சென்னைக்குப் பெயர்ப்பது. இதில் மூன்றாவது வாய்ப்பையே என் மனைவி தேர்ந்தெடுத்தாள். ஆதித்யாவின் இசையையும் கொஞ்சம் கவனிக்கலாம் என்கிற எண்ணம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதை விட விசேஷமாகப் பெரிய  இசைவாணரிடம் திரும்பப் போவது என்று தீர்மானித்தாள். இதற்குப் பெரிய சிந்தனை ஒன்றும் வேண்டியிருக்கவில்லை. அவரின் தொடர்பை முற்றிலுமாகக் கத்தரித்துக் கொள்ளவில்லை. ஏற்கெனவே கூறியிருந்தபடி மாதா மாதம் அவருக்குப் பணம் வேறு போய்க் கொண்டிருந்தது. டெல்லியில் ஒன்றும் வேலைக்காகவில்லை. எனவே இதற்குப் பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவைப் படவில்லை. என்னைப் பொறுத்தவரை பெரிய இசைவாணரிடம் செல்வதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்திருக்கிறேன். முதன் முதலில் விட்ட போதே தொலைத்துத் தலைமுழுகி இருக்க வேண்டும். என் மனைவி என் பேச்சைப் பொருட்படுத்தினாலும் வழக்கமான மனைவியர் போலவே அவளுக்கும், எனக்கு லோகாயத விஷய ஞானம் கிடையாது என்கிற எண்ணம்.
இசை ஆசிரியை மட்டும், “போகாதே. நான் சொல்றதைக் கேக்காம போற. அவன் ஒண்ணும் செய்ய மாட்டான். எங்க அப்பாகிட்ட சங்கீதப் பிதாமகர் விஷயத்தை வாங்கிண்டு அமுக்கி வெச்ச மாதிரி இவனும் உன் பிள்ளையை வெளியில் காமிக்காம அமுக்குவான். நீ அழுதுண்டே திரும்பப் போறே,” என்று கிட்டத் தட்ட சாபம் விடுவது போல் என் மனைவியும் குழந்தைகளும் கிளம்பும் வரை கூறிக் கொண்டேயிருந்தார். இது போதாதென்று என் மனைவி குழந்தைகள் கிளம்பிய பின் ஒரு நாள் தன்  கணவரை விட்டு என் குடும்பத்தினர் உண்மையிலேயே கிளம்பி விட்டார்களா என்று விசாரித்து வேறு வரச் சொன்னார்!
பெரிய இசைவாணர் வீட்டில் பெரிய வரவேற்பு. ஏதோ இழந்த பொருளை மீட்டுவிட்ட கோலாகலம் அவர்களின் நடத்தையில் தெரிந்திருக்கிறது. ஆதித்யாவைப் பொறுத்த வரை எப்போதும் எங்கேயும் யாரைப் பற்றியும் மனத் தடங்கல்கள் இருந்ததில்லை.பானக நரசிம்மர் மாதிரி. உள்ளே போகும் அவன் உய்த்துணரும் விஷயங்கள் எங்கே போகிறது யாருக்கும் தெரியாது. எனவே பெரிய பிரச்னைகள் இல்லை.

நான்கு வருடங்கள். இந்த நான்கு வருடங்களில் ஆதித்யாவின் தந்தி வாத்யத்துக்காக என் மனைவி கடுமையாக உழைத்தாள். பெரிய இசைவாணரிடம் ஒன்றும் நடக்காதென்கிற பட்டறிவு ஏற்கெனவே இருந்ததால் தினமும் ஐந்து அல்லது பத்து பாடல்கள் என்று நிர்பந்தப் படுத்தி ஆதித்யாவை வாசிக்க வைத்தாள். ஆதித்யா குளித்து விட்டு வரும் போது ஸ்வாமிக்கு விளக்கேற்றி நைவேத்யம் செய்து விட்டு தந்தி வாத்யத்தைத் தயார் செய்து  பாயையும் போட்டு வைத்திருப்பாள். பக்கத்திலேயே நான்கு முக்கியமான புத்தகங்கள் டி கே கோவிந்தராவ் ஸ்வரப் படுத்தி எழுதிய தியாகராஜர் முத்துஸ்வாமி தீக்ஷீதர் மற்றும் ஸ்யாமா சாஸ்திரி கீர்த்தனங்கள் அடங்கிய புத்தகங்கள் தயாராக இருக்கும். டி கே கோவிந்த ராவ் ஸ்வரப்படுத்திய வர்ண சாகரம் என்கிற புத்தகமும் இருந்தது. மற்ற வாக்கேயக்காரர்கள் புத்தகங்களிலிருந்தும் ஆதித்யா பாடல்களை எடுத்துக் கையாளுவான். 
ஆதித்யாவிடம் ஒரு பழக்கம். அவன் ஒரு பாட்டை வாசிப்பது என்று முடிவு செய்து விட்டானென்றால் நான் குறிப்பிட்டிருக்கும் இந்தப் புத்தகங்களில் அந்தப் பாடல் எந்தப் பக்கத்தில் இருக்கிறதோ அதைச் சரியாகப் பிரிப்பான். சரியாக அந்தப் பக்கத்தை உடனே எடுப்பான். புரட்டுவது என்கிற பேச்சு கிடையாது. அதை எடுத்து வைத்துக் கொண்டு பாடுவான். கிட்டத்தட்ட மூவாயிரம் கீர்த்தனைகளுக்கும் மேல். (இதில் மீண்டும் மீண்டும் வாசிப்பவையும் அடங்கும்). இது போல நான்கு வருடங்கள் வாத்யத்திலும் வாய்ப்பாட்டிலும் தனித்தனியாக அப்யாஸம் செய்தான் ஆதித்யா.
இந்த சமயத்தில் என் மனைவியும் மகளும் மிகவும் மகிழ்ச்சிகரமான எப்போதும் மலர்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கிற மகளும் அன்னையுமாக இருந்து வந்தனர். என் மகளுக்கும் சங்கீதம் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம். ஏற்கெனவே ஒரு வயலின் ஆசிரியரை வீட்டில் வந்து சொல்லிக் கொடுக்க அமர்த்தியிருந்தோம். அவள் வாசிக்கும் போதெல்லாம் ஆதித்யா அவள்  வாசிப்பதை உன்னிப்பாக கவனித்து அவள் தவறு செய்யும் போதெல்லாம் திருத்திக் கொண்டிருப்பான். அவளுக்குக் கோபமாக வரும். ஆதித்யா அதைப் பொருட்படுத்த மாட்டான். மகளுக்குமாய்ப் பாட்டிலும் பயிற்சி இருந்தால் தேவலை என்று நினைத்து அவளையும் பெரிய இசைவாணர் வகுப்புகளில் போட்டோம். அதற்கு தனி ஃபீஸ். ஓரிரு வகுப்புகளும் நடந்தன.
அந்த சமயத்தில் முகநூல் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருந்தது. நான் அதில் கொஞ்சம் செயலாக இருந்தேன். நிறைய நண்பர்களை சேர்த்துக் கொண்டேன். எனக்குத் தெரிந்தவர் ஒரு பத்து அல்லது பதினைந்து சதம். மிச்சம் எல்லாமே கர்நாடக சங்கீத சம்பந்தப் பட்டவர்கள். எவரெவர் தொடர்பெல்லாம் ஆதித்யாவிற்கு உபயோகமாக இருக்குமோ அவரவர் தொடர்பை  எல்லாம் ஏற்படுத்திக் கொண்டேன். சங்கீதம் மட்டுமல்லாது என் இலக்கிய முயற்சிகளை வெளிப்படுத்திக் கொள்ளவும் இதை ஒரு வடிகாலாக உபயோகப் படுத்திக் கொண்டிருந்தேன். இதில் என் மனைவியும் மகளும் கூட அவ்வப்போது பங்கு கொண்டிருந்தார்கள். அவர்கள் அதில் பெரிதாக ஒன்றும் பங்கு கொள்வதில்லை. ஏதாவது சாமி படம் போடுவார்கள்; அல்லது தெரிந்தவர் யார் பிறந்த நாளுக்காவது பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிப்பார்கள்.
இதில் பெரிய இசைவாணர் அவ்வப்போது ஏதாவது அள்ளித் தெளித்தாற் போல் ஏதாவது போடுவார். அல்லக்கைகளிடமிருந்து பாராட்டு மழை கொட்டும். இதைத் தவிர அவர் தன் வகுப்பு ஒலிப் பேழைகளை விற்று வந்தார். அது சம்பந்தமான அறிவிப்புகள் ஆன்லைனில் வாங்குவது சம்பந்தமான விபரங்கள் குறிப்பிடப் பட்டு வெளியாகும். இப்படி இருந்த போது ஒரு நாள் அவர் வர்க்க மூலம் கண்டு பிடிப்பதற்கான ஒரு சுருக்கு வழிக்கான சூத்திரத்தை விவரித்திருந்தார். அதற்கு ஒரே பாராட்டு மழை. கல்லூரியிலிருந்து திரும்பிய என் மகள் இதைப் பார்த்திருக்கிறாள். அவள் ஒரு பத்து நிமிடத்தில் தானாகவே ஒரு சூத்திரம் தயாரித்து ‘வர்க்க மூலத்தை இந்த சுருக்கு வழி மூலமாகவும் கண்டு பிடிக்கலாம்’ என்று உள்ளீடு செய்து விட்டாள். மறுபக்கத்தில் பயங்கர மௌனம். யாரும் எதையும் சொல்லிவிடாமல் பயங்கரமாக அமைதி காத்தார்கள்.
இதன் மறுநாள் பெரிய இசைவாணரிடமிருந்து என் மகளுக்குத் தொடர்ச்சியாக அலைபேசியில் வாட்ஸப்பில் வரிசையாகக் கேள்விகளாக வந்து கொண்டிருந்தன. ‘நீ எப்படிப் படிப்பாய்? தானாகக் கற்றுக் கொண்டாயா யாராவது சொல்லிக் கொடுத்ததா? எந்த நேரத்தில் படிப்பாய்? ஓய்ந்த வேளைகளில் என்ன செய்வாய்? எப்படி வர்க்க மூலத்திற்குப் புது சூத்திரத்தைக் கண்டு பிடித்தாய்?’ என்றெல்லம் குடைந்து குடைந்து கேள்விகள். என் மகளும் தோன்றியபடியெல்லாம் இந்தக் கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
சில நாட்களுக்குப் பின் என் பெண்ணிற்கு வகுப்புகளுக்கு முயன்றோம். பெரிய இசைவாணரிடமிருந்து பெரிய எழுத்தில் ‘நோ’ என்று ‘வாட்ஸப்பில்’ பதில் வந்தது! அவர் என் மகள் முகநூல் இட்டிருந்த பதிவை ஏதோ கர்வ பங்கம் ஆனாற் போல் உணர்ந்திருக்கிறார் போலிருக்கிறது. இதற்குப் பின் ஆதித்யாவிற்கு வகுப்புகள் கேட்டு என் மனைவி ‘வாட்ஸப்பில்’ ஒரு குறுஞ் செய்தி அனுப்பினாள். அந்தச் செய்திக்கும் ஒரு பெரிய ‘நோ’ தான். அன்று என் மனைவிக்கும் பெரிய இசைவாணருக்கும் இடையில் வாட்ஸப்பிலேயே ஒரு பெரிய வாக்குவாதம் நடைபெற்றது. அதில் அவர் ‘பெற்றோர் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். நான் சொல்வதில் 30% கூடக் கேட்பதில்லை என்றால் என்ன செய்வது?’ என்று எழுதியிருந்தார். இவர் என்ன சொல்லி நாங்கள் என்ன கேட்கவில்லை? இறைவனுக்குத் தான் வெளிச்சம். என் மனைவி மிகவும் தெள்ளத் தெளிவாக ‘நான் இத்துடன் வகுப்புகளை நிறுத்திக் கொள்கிறேன்’ என்று தீர்மானமாக எழுதி அனுப்பினாள். அத்துடன் பெரிய இசைவாணரின் சங்காத்தம் முடிவுக்கு வந்தது.
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்கிற கதையாக முகநூல் வாட்ஸப்பும் பெரிய தொல்லையாகத் தொடர்ந்தன. என் மனைவி போடுகிற படங்களை சூசகமாக எடுத்துக் கொண்டு ஏதாவது செய்வது என்று ஆரம்பித்திருந்தார்கள். திருவள்ளுவர் படம் போட்டால் திருக்குறளைப் பாடுவது, தஞ்சாவூர்க் கோயில் படம் போட்டால் தஞ்சாவூரில் போய்க் கச்சேரி செய்வது என்று ஆரம்பித்திருந்தார்கள். ஒரு முறை என் மனைவி மண்டை ஓட்டு மாலையுடன் கையில் அசுரனின் கொய்த தலையைப் பிடித்தவாறு நிற்கும் பத்ர காளியின் படத்தைப் போட்டிருந்தாள். உடனே அங்கிருந்து ‘தாயே! நான் என்ன குற்றம் செய்தேன்?’ என்று பொருள் படும் படியாக பதில்.
தினமும் வாட்ஸப்பில் என் மனைவி போடும் ஸ்டேட்டஸைப் பார்ப்பது என்றெல்லாம் ஆரம்பித்திருந்தது. இதைச் சூசகமாக எடுத்துக் கொண்டு எதையாவது செய்வது. நான் என் மனைவியை அவ்வப்போது மிதமாக எச்சரித்துக் கொண்டே வந்தேன். என் மனைவி உபயோகித்துக் கொண்டிருந்த ஆண்ட்ராய்ட் கைபேசியின் எண்ணும் என் பெயரில் தான் இருந்தது; முக நூல் கணக்கும் என் பெயரில் தான் இருந்தது என்பதால் நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. என் மனைவிக்கும் மகளுக்கும் 'நாங்கள் ஏதாவது விகல்பமில்லாமல் செய்து கொண்டிருப்பதை யாராவது பார்த்து ஏதாவது புரிந்து கொண்டால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?’ என்கிற எண்ணம்.
 இதெல்லாம் நடப்பதற்குக் கொஞ்ச நாள் முன்னர் தான் ஊரில் இல்லாத சமயங்களில் சகோதரிகளிடம் சங்கீதம் கற்றுக் கொள்ள என் பெண்ணை அறிவுறுத்தியிருந்தார் பெரிய இசைவாணர். சகோதரிகளில் ஒருவர் ஸ்கைப்பில் வகுப்பு எடுப்பதாக ஏற்பாடு. அந்த சமயத்தில் என் பெண் ஏற்கெனவே பைரவியில் அமைந்திருக்கும் அட தாள வர்ணத்தைக் கற்றுக் கொண்டிருந்தாள். இதைத் தெரிந்து கொண்ட சகோதரி எப்போது வகுப்பு என்று ஸ்கைப்பில் வந்தாலும் என் மகளை  இந்த அடதாள வர்ணத்தை மீண்டும் மீண்டும் பாட வற்புறுத்திக் கொண்டிருந்தாள். என் மகள் இந்தத் தொல்லை தாங்க முடியாமல் இந்த வகுப்புகளையே ஒழித்துக் கட்டினாள். இதற்கும் ஆதித்யாவிற்கும் என்ன தொடர்பு என்று வாசகர்கள் நினைக்கலாம். தொடர்பு இருக்கிறது. இதைப் பின்னர் தெரிவிக்கிறேன்.
 2016 இல் ஆதித்யாவிற்காக ஒரு புது குருநாதரைப் பாடுபட்டுப் பிடித்து அவரின் முயற்சியால் 12.3.2017 அன்று ஆதித்யாவின் கர்நாடக இசைக் கச்சேரி அரங்கேற்றம் சென்னையில் நடந்தது. இந்த அரங்கேற்றத்துக்காக நாங்கள் பட்ட பாடுகளை விவரிக்க ஆரம்பித்தால் அது இத்தொடரின் இரண்டாம் பாகமாக விரியும் என்பதால் அதைச் சொல்லாமல் விடுகிறேன்.
ஆனால் அந்த சமயங்களில் நடந்த ஒன்றிரண்டு கசப்பான  சம்பவங்களை விவரிக்காமல் இத்தொடர் முற்றுப்பெறாது.
அது……………

அத்தியாயம் 31

ஆதித்யா வாழ்க்கையைப் பற்றிய திரைக் கதை என் மனதில் அடிக்கடி ஓடிக் கொண்டிருக்கும். முதல் காட்சியில் அவன் பெரிதாக ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு அரங்கில் ‘தில்லானா’ ஒன்றைப் பாடிக் கொண்டிருக்கிறான். அவன் கச்சேரியின் இந்தக் கடைசிப் பாடலில் ‘டைட்டில்’ ஓடிக்கொண்டிருக்கிறது. நானும் என் மனைவியும் முன் வரிசையில் அமர்ந்து கொண்டு கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். என் நினைவு பின்னோக்கிச் செல்கிறது. என் மனைவியைப் பெண் பார்க்கும் படலம் திரையில் விரிகிறது. கையில் தம்புராவுடன் இதே தில்லானாவை என் மனைவி  பாடிக் கொண்டிருக்கிறாள்……. இது போன்ற பதப் படுத்தப் பட்ட காட்சிகளுடன் ஆதித்யாவின் வளர்ப்புக் கதை நகர்கிறது.
 கதையை விட உண்மை மிகவும் விநோதமானது என்பார்கள். விநோதமானது மட்டும் அல்லாது இரக்கமற்றதும் கூட. அரங்கேற்றத்துக்கான ஏற்பாடுகளை என் மனைவி தனியாளாக நாயாக அலைந்து செய்திருக்கிறாள். நான் டெல்லியில் இருந்தவாறு தொலைபேசியில் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தேன் இப்படி இருக்கும் போது –  அரங்கேற்றத்துக்கு ஒரு வாரம் இருக்கும் போது- திடீரென்று என் மனைவியிடமிருந்து உடனே கிளம்பி வரும்படி போன் வந்தது. அவள் பேசிய தொனியிலிருந்து அவள் மிகவும் பயந்து போயிருக்கிறாள் என்றும் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறாள் இன்றும் தெரிந்தது. நான் அலுவலகத்தில் அநுமதி வாங்கிக் கொண்டு போட்டது போட்டபடிக் கிளம்பிப் போனேன்.
என் பெண் பயிலும் கல்லூரியில் இன்னொரு பெண் படித்து வந்திருக்கிறாள். இந்தப் பெண்ணும் என் மகள் கொஞ்ச நாள் சங்கீதம் கற்றுக் கொண்டிருந்த சகோதரியிடம் பாட்டு கற்றுக் கொண்டிருக்கிறாள். அவள் யாருடைய தூண்டுதலின் பேரிலோ என் மகளிடம் வலிய வலிய பேச்சுக் கொடுத்து நட்பு கொண்டாடி இருக்கிறாள். அந்தப் பெண் எப்போதும் என் பெண்ணிடம் ‘பட்டப்படிப்பு முடிந்தவுடன் என்ன செய்வதாக உத்தேசம்’ என்று துளைத்தெடுத்திருக்கிறாள். என் மகளுக்கு யார் தூண்டுதலில் பெயரிலோ இந்தப் பெண் இப்படிக் கேட்கிறது என்று சந்தேகம். இதனால் அவள் இயற்கையிலேயே அமைந்த எச்சரிக்கை உணர்வுடன் அந்தந்த சமயங்களில் தோன்றுவதைச் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறாள் . இந்தப் பெண் தன் கைபேசியை வைத்து என் பெண்ணின் பேச்சுகளை ஒலிப்பதிவு செய்து யாருக்கோ அனுப்புகிறாள் என்கிற சந்தேகம் என் மகளுக்கு இருந்திருக்கிறது. என் பெண் அப்போதெல்லாம் கிண்டி ரயில் நிலையம் சென்று மின்சார ரயிலில் கல்லூரி செல்வது வழக்கம். கல்லூரியில் வழக்கமாக என் பெண் பரிசோதனைச் சாலையில் பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கும் போது இந்தப் பெண் தன் கைபேசியை அங்கு வைத்து விட்டு வெளியில் சென்று விடுவதுண்டாம். ஒரு நாள் என் மகள் பேச்சுவாக்கில் ‘இந்தப் பரிசோதனையின் வாதை ஒரு கத்தியை என்னில் செலுத்தினால் இருப்பதை விட அதிகமாகத் தான் இருக்கும்’ என்றிருக்கிறாள்.
மறுநாள் கிண்டி ரயில் நிலையத்தில் ஒரு ஆள் கையில் பையுடன் என் மகளை நெருங்கியிருக்கிறான். என் மகளிடம் ‘இன்னாருடைய மகள் தானே நீ? நான் உனக்கு உறவு முறை’ என்றிருக்கிறான். என் மகளும் விகல்பமில்லாமல் அவனுடன் பேசியிருக்கிறாள். அவன் சுற்று முற்றும் ஆட்கள் வரவே நகர்ந்து சென்று விட்டானாம். இதை என் மகள் என் மனைவியிடம் சொல்லியிருக்கிறாள். என் மனைவிக்கு பயம் பிடித்து விட்டது. என் குடும்பத்தை நன்கு அறிந்த யாரோ தான் என் மகளுக்குத் தீங்கு விளைப்பதற்காக ஆளை அனுப்பியிருக்கிறார்கள் என்று அவளுக்கு சந்தேகம். குறிப்பாக ஆதித்யா அரங்கேற்றத்தை நடக்க விடாமல் முடக்க வேண்டும் என்று  யாரோ முயற்சிக்கிறார்கள் என்று சந்தேகம். அப்போது தான் கொஞ்ச நாட்களுக்கு முன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு இளம் பெண்ணை ஒருவன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த விஷயம் ஊடகங்களில் பெரிதாக அடிபட்டுக் கொண்டிருந்தது. ஏற்கனவே நான் கூறியிருந்த படி முகநூல் வாட்ஸப் இவைகளில் நாங்கள் போடும் ஸ்டேஸ்களை சூசகமாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறார்கள் என்று சந்தேகம் இருந்த நிலை.
 என் மகளும் மனைவியும் அளவு கடந்த பீதியில்  இருந்தார்கள். எதைப்  பார்த்தாலும் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். அவர்களைத் தேற்றி அரங்கேற்றத்தை ஒப்பேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. இந்த மனக் கிலேசத்திலிருந்து என் மனைவியும் மகளும் இதெல்லாம் நடந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் தற்போதும் முற்றிலுமாக விடுபட முடியவில்லை என்பதை வைத்தே வாசகர்கள் இதன் வீரியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
 என்னைப் பொறுத்த வரை பயந்து சாவதை விட நேரான அணுகுமுறை தான் சரிப்பட்டு வரும். இதையே நான் என் மகளுக்கும் மனைவிக்கும் போதித்தேன். அதன்படி என் மனைவி அந்தப் பெண்ணின் அன்னையிடம் பேசினாள். இரண்டு பக்கத்திலும் உஷ்ணமான உரையாடல்கள். பின்னர் என் மகள் மிகவும் மனமுதிர்ச்சியுடன் தெளிவாகவும் சாந்தமாகவும் அந்தப் பெண்ணின் அன்னையிடம், “ஆண்ட்டி! என்ன நடக்கறதுன்னு உங்க பெண் கிட்டக் கேளுங்கோ. எங்களுக்கு அவள் செல்போனை வெச்சு ஏதோ திரிசமன் செய்யறதா சந்தேகம் இருக்கு. அவள் அதெல்லாம் ஒன்றும் செய்யலைன்னா நான் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன்” என்று பேசி விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டாள். இதன் பின்னர் என் மகளும் மனைவியும் கல்லூரியின் என் மகள் படித்த துறையின் தலைமைப் பேராசிரியரிடம் போய் நடந்த விஷயங்களைப் புகார் தெரிவித்து விட்டு வந்தனர். என் மனைவியின் வாதமெல்லாம் அவர்கள் பெயரில் குற்றம் இல்லை என்றால் அவர்களும் இது போன்றே புகார் தெரிவித்திருக்க வேண்டும் அல்லது சண்டைக்கு வந்திருக்க வேண்டும்; அதெல்லாம் ஒன்றும் செய்யாதிருந்ததிலிருந்தே அவர்கள் பக்கம் ஏதோ குற்றம் இருப்பதாய்த் தான் தோன்றுகிறது என்று. இது சிந்தித்துப் பார்த்தால் நியாயமாகத் தான் படுகிறது.
 இதெல்லாம் உண்மையா அல்லது என் மனைவியும் மகளும் தேவையில்லாமல் பயப்பட்டார்களா என்பதெல்லாம் இன்று வரை எனக்கு விளங்கவில்லை. எனவே அவர்கள் என்னிடம் கோர்வையாகச் சொன்ன பல சம்பவங்களை இங்கு சொல்லாது விடுகிறேன்.
(தொடரும்)
நன்றி : சொல்வனம் 
https://solvanam.com/2018/05/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F-11/

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை X

அத்தியாயம் 28
மும்பைக்கு குடிபெயர்ந்த போது எனக்கிருந்த பிரமிப்பும் திகைப்பும் டெல்லி வந்த போது எனக்கில்லை. வயதும் கூடி இளமையின் மயக்கங்கள் உதிர ஆரம்பித்திருந்த சமயம். குடும்பக் கவலைகளில் ஆழ்ந்திருந்தேன். பணம் படிப்பிற்கோ, பெண் திருமணத்திற்கோ போதாது என்று தோன்றிக் கொண்டிருந்தது. பையன் கவலை வேறு அரித்துக் கொண்டிருந்தது. பொதுத் துறையில் 29 வருடங்கள் பணியாற்றியிருந்த போதும் பெரிய அளவில் வேலை முன்னேற்றமோ பணப் பெருக்கமோ கிட்டவில்லை. பணத் தேவைகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. அதற்கு ஏற்றாற் போல் ஊதிய உயர்வுகள் இல்லை. வருகின்ற வருமானத்துக்குத் தகுந்த அளவில் செலவுகளைச் சுருக்கிக் கொள்ளும் மனப் பக்குவம் இல்லை.
டெல்லி மிகப் பெரிய ஊர். மும்பையை விட நிலப் பரப்பில் மிகப் பெரியது. தேசத் தலைநகர் வேறு. பாலங்களுக்கும் சாலைகளுக்கும் அரசு பணத்தைக் கொட்டுகிறது. விசாலமான சாலைகள். ஆங்காங்கே பெரிய பெரிய பூங்காக்கள். ஊர் பூரா சரித்திர இடிபாடுகள். இந்தியக் கட்டிடக் கலை பாரசீகக் கட்டிடக் கலை இணைந்த கலவையுடன் அற்புதமான சரித்திரச் சின்னங்கள்.
இந்த சமயத்தில் என் பெண் பத்தாம் வகுப்பு முடிந்து பதினோராம் வகுப்பிற்கு வந்திருந்த சமயம். அந்த வகுப்புகளுக்கே உரித்தான படிப்புச் சுமை கூடியது. ஆதித்யாவின் மீது எங்களுக்கிருந்த கவனம் கொஞ்சம் குறைந்தது போன்ற நிலை. அவனைப் பொறுத்த மட்டில் எல்லாவற்றிற்கும் தயார். புது டெல்லியின் குளிருக்கும் கலாச்சார மாறுபாட்டுக்கும் தன்னை நன்றாக மாற்றிக் கொண்டான். என்றாலும் சென்னையின் கடற்கரையையும் ஏனைய கலாச்சார விழுமியங்களையும் நினைத்து நாங்கள் எல்லோருமே ஏங்குகிற நிலை.
சங்கீதத்தைப் பொறுத்த வரைப் பெரிதாகக் கவலைப் பட ஒன்றுமில்லை. அவன் இணையத்தில் வழக்கம் போல் கேட்டுக் கொண்டும், பாடிக் கொண்டும், பாடல்கள் புனைந்து கொண்டும் இருந்தான். அவ்வப்போது மலை மந்திர் என்று பிரபல்யமாக விளங்கும் ஸ்வாமிநாத ஸ்வாமி கோயிலுக்கும் எப்போதாவது ஹுமாயூன் சமாதி அமைந்துள்ள கோட்டைக்கும் செல்வதுண்டு. பழைய கோட்டை என்றழைக்கப்படும் பரந்து பட்ட கோட்டைக்குள்ளும் சென்று பார்த்து வருவதுண்டு. ஆறு மாதத்தில் ஓரளவு செட்டில் ஆகி விட்டோம் என்று சொல்ல முடியும்.
சென்னையில் பெரிய இசைவாணர் கிட்டத் தட்ட கழற்றி விட்டு விட்டார். இந்த சமயத்தில் நடந்த ஒன்றிரண்டு நிகழ்வுகளைச் சொல்லத் தான் வேண்டும். இவற்றைச் சொன்னால் தான் பின்னால் நடந்த ஒன்றிரண்டு சம்பவங்களின் பின்னணி  புரியும். நாங்கள் பெரிய இசைவாணர் பெயர் வாங்கிய வாத்யத்தில் ஆதித்யாவை எப்படியாவது பழக்குவது என்று குறியாக இருந்தோம். ஆதித்யா சில சமயங்களில் வாய்ப்பாட்டிற்கும் பல சமயங்களில் ‘ஹவாயன் கிடார்’ வாசிப்பதற்குமாகப் பெரிய இசைவாணரின் வகுப்புகள் அபூர்வமாக நடக்கும் போது சென்று கொண்டிருந்தான். பெரிய இசைவாணர் வீம்புடன் வாத்யத்தில் ஆதித்யாவைப் பழக்க ஒரு முயற்சியும் எடுக்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு முறை வற்புறுத்திக் கேட்டபோது எங்களை அவர் உறவினரிடம் போய்க் கற்றுக் கொள்ளுமாறு கூறினார். இந்த உறவினரைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
இவர் நான் முதன் முதலில் ஆதித்யாவை அழைத்துச் சென்ற இசைவாணருடன் தங்கி இருந்தார். அவர்களுக்குள் என்ன உறவு என்று புரியவில்லை. குழந்தைப் பருவத்திலிருந்து இசைவாணர்கள்  குடும்பத்துடன் தான் தங்கியிருந்தார். ஆதித்யாவின் ஸ்வீகாரத்தைப் பற்றி இவர் எங்களிடம் பிரஸ்தாபித்ததைப் பற்றியும் நாங்கள் பயந்து ஓடி வந்ததைப் பற்றியும் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். இவர் தந்தி வாத்யத்தை மிகவும் அருமையாக வாசிப்பார். பெரிய இசைவாணருக்கு ஒரு படி மேல் என்று கூடக் கூறமுடியும். என்ன காரணத்தாலோ இவரைத் தந்தி வாத்யம் வைத்துக் கச்சேரி செய்ய இசைவாணர்கள் அநுமதிக்கவேயில்லை. பெரிய இசைவாணரின் முக்கியத்துவம் குறைந்து விடப் போகிறது என்று பயந்தார்களோ என்னவோ! அதனால் இவர் இசைவாணருடன் சேர்ந்து வாய்ப் பாட்டுத் தான் பாடிக் கொண்டிருந்தார்.
இவரிடம் ஆதித்யாவைக் கூட்டிக் கொண்டு செல்ல ஆரம்பித்தோம். இவர் மனைவி பெரிய இசைவாணரின் பழைய மாணவி. அவரும் தந்திக் கருவியை வாசிப்பார். முதல் வகுப்புக்குச் சென்ற போது “நல்லது; இவர் ஆதித்யாவை நன்னா முன்னுக்குக் கொண்டு வருவர்” என்றார். இப்போது திறந்திருப்பது புதுக் கதவா அல்லது பழைய வழிக்கே கொண்டு போகப் போகிற சுழல் கதவா என்கிற நிச்சயம் இல்லாமல் தான் போனோம். ஒரு சில வகுப்புகள் நடந்தன. நாளாக நாளாக அவர் ஆதித்யா பாடவும் தான் தந்தி வாத்தியம் வாசிக்கவும் தான் குறிப்பாக இருப்பதாகத் தெரிந்தது. நானும் என் மனைவியும் அவர்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பின் கூடத்தில் உட்கார்ந்திருப்போம். இவர்களுக்கு வேறு அறையில் வகுப்பு நடக்கும். அந்த அறையில் பார்வையில் படுகிற மாதிரி ஒரு மடிக் கணினி திறந்து வைக்கப் பட்டிருக்கும். பாடுகின்ற ராகங்களையும் பாடல்களையும் ஒன்று பதிவு செய்துக் கொண்டிருக்க வேண்டும். அல்லது ‘லைவ் ரிலே’யாக யாருக்கோ சென்று கொண்டிருக்க வேண்டும். இந்தக் குடும்பத்தின் மர்ம நடவடிக்கைகளால் எங்களால் இது போன்ற சந்தேகங்கள் எழுவதை விலக்கி வைக்க முடியவில்லை.
இந்த வகுப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் துவங்கின. அந்த நண்பர் பின்னர் ‘ஸ்கைப்பில்’ வகுப்பு எடுக்கிறேன் என்று ஆரம்பித்தார். எங்களுக்கும் சௌகரியமாக இருந்தது. அவர் வீட்டுக்குச் செல்வதற்கான வண்டிச் சத்தத்தையாவது மிச்சம் பண்ணலாமென்கிற எண்ணம். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு நாள் அவர் அவசரமாக ‘ஸ்கைப்’ வகுப்புகளுக்கு அழைத்தார். அன்றோ மறுநாளோ அவருக்குக் கச்சேரி இருந்தது என்று நினைக்கிறேன். வகுப்பு ஆரம்பித்ததும் அவர் ஒரு ராகத்தில் ஆலாபனை செய்ய ஆரம்பித்தார். செய்து கொண்டிருக்கும் போது ஆதித்யா உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவன் குறுக்கிட்டு, “நீ (நிஷாதம்) வில் நாட் கம் இன் திஸ் ராகா” என்றான். அவர் உடனே மறுபடி மறுபடி அந்த ராகத்தை மிகவும் அதிர்ச்சியுடன் திருப்பித் திருப்பிப் பாடிச் சரி செய்ய முயன்று கொண்டிருந்தார். அவ்வளவு தான். தொலைந்தது. அன்றுடன் இவரின் வகுப்புகள் முடிவுக்கு வந்து விட்டன. பிள்ளை பெரிய அண்ணாவியாக இருக்கும் போது நாங்கள் என்ன தான் செய்வது?
மேற் கூறிய காரணங்களால் நான் புதுடெல்லி வேலையை ஒப்புக் கொண்டு வந்தவுடன் என் மனைவி குடும்பத்தைப் பெயர்த்துக் கொண்டு புதுடெல்லி வந்து விடுவதென்று முடிவு செய்தாள். படிப்போ சங்கீதமோ டெல்லியில் பார்த்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம். ஏனென்றால் சென்னையில் ஒன்றும் பெரிதாக நடந்து விடவில்லை.
டெல்லியில் தாயாதி முறையில் எனக்கொரு தூரத்து உறவினர் உண்டு. பத்திரிக்கையாளர். காந்தியவாதி. கட்டை பிரம்மச்சாரி. அன்றைய அரசியல்வாதிகள் அனைவரையும் அந்தரங்கமாக அறிந்தவர் என்றாலும் தனக்கென்று எதுவும் சேர்த்துக் கொள்ளாமல் நாடோடி மாதிரி வாழ்ந்து வந்தார். இவரின் உறவினர்கள் புதுடெல்லியில் பணியாற்றி வாழ்ந்து வந்தார்கள். இவர்களில் ஒருவர் தந்தி வாத்ய விற்பன்னர். பொதுத்துறை ஒன்றில் பணியாற்றி வந்தார். அவருடன் தொடர்பினைப் புதுப்பித்துக் கொண்டோம். அப்போது பத்திரிக்கையாளர் காலமாகி சில வருடங்கள் ஆகியிருந்தது. அவர் ஆதித்யாவிற்கு வகுப்புகள் எடுப்பது என்று ஏற்பாடு செய்து கொண்டோம். ஆதித்யா அவரிடம் ‘ஹவாயன் கிடார்’ வகுப்புகளுக்குச் சென்று வர ஆரம்பித்தான். அவர் தன் தந்தி வாத்யத்தில் வாசிப்பார். ஆதித்யா தன் கிடாரில் வாசிப்பான் என்று போய்க் கொண்டிருந்தன வகுப்புகள்.
ஒரு ஆசிரியரை விட்டு விட்டு இன்னொரு ஆசிரியரிடம் செல்லும் போது புது ஆசிரியர் ‘லம்போதர லகுமிகரா’ என்று ஆரம்பிப்பார். பழைய ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததெல்லாம் சரியாக வராது புது ஆசிரியருக்கு. ‘பாடாந்தரமே வேற; எல்லாத்தையும் மாத்தணும்’ என்று ஆரம்பிப்பார். இதற்காக பல இசை ஆசிரியர்கள் வெளியிட்டுப் பிரபலமாக விளங்கி வரும் புத்தகங்களிலும் இவர்கள் பழுது சொல்லுவார்கள். வேத அத்யயனம் போன்று பன்னெடுங்காலமாக வாய் மொழியாகவே இசையும் கற்பிக்கப் பட்டு வருவதால் பாட பேதங்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தற்போது எல்லாமே அச்சில் வந்து விட்டதால் இவற்றுள் ஒரு பொதுப்படையான பாடாந்திரத்துக்கு எல்லோரும் கூடி வர வேண்டாமா? இது நிற்க.
வர்ணங்களிலிருந்து ஆரம்பித்தார் புது குரு. ஆதித்யா அவர் தந்தி வாத்யக் கருவி என்பதால் ‘ஹவாயன் கிடார்’ அவர் முன்னிலையில் வாசிப்பது என்று ஆரம்பித்தான். அவருக்கு நீண்ட நாட்களாக இசைத் துறையில் இருந்ததால் பெரிய இசை வாணரைத் தெரிந்திருந்தது. நாங்கள் இருந்த குடியிருப்புக்குப் பக்கத்தில் சைக்கிள் ரிக்ஷா தூரத்தில் அவர்கள் குடியிருப்பு இருந்ததால் என் மனைவி வழக்கம் போல் கூட்டிச் சென்று வருவது என்று ஆரம்பித்தாள்.
புது குருவிற்கு ஆதித்யாவைத் தவிர வேறோர் சிஷ்யனும் இருந்தான். அந்தப் பையன் ஆதித்யாவைக் காட்டிலும் இன்னும் சற்று முதிர்ந்தவன் வயதில். திருமணம் ஆகியிருந்தது. வேலை பார்த்து வந்தான். டெல்லியில் உள்ள ஒரு நாட்டிய மணியின் பிள்ளையாம். அதனால் புது குரு மிகவும் ஜாக்கிரதையாக அந்தப் பையனுக்கு வகுப்பு எடுத்து வந்தார். அந்தப் பையனிடம் என்ன சொல்லி வைத்திருந்தாரோ புது குரு தெரியவில்லை. எங்களிடம் பேசுவதற்குப் பெரிதாக அவன் முனைப்புக் கட்டவில்லை. அல்லது சுபாவமே அது போலவோ என்னவோ!
ஆதித்யா வந்தவுடன் ‘வாம்மா கண்ணா! ஆபோகி வர்ணத்தை வாசிச்சுரு,’ என்பார் புது குரு. ஆதித்யாவும் மிகுந்த கீழ்ப்படிதலுடன் வாசிப்பான். இது போல் வகுப்புகளில் வர்ணத்தைத் தொடர்ந்து வர்ணம். ஆபோகியை விட்டால் காம்போதி. காம்போதியை விட்டால் கல்யாணி. கல்யாணியை விட்டால் பேகடா. இப்படி எத்தனை நாள் நடந்தது தெரியுமா? இரண்டு வருடங்கள்! யாராகிலும் இதை நம்ப முடியுமா? இந்த இரண்டு வருடங்களில் ‘டொய்ங் டொய்ங்’ என்று வாசித்துக் கொண்டிருந்த அந்த இன்னொரு மாணவன் நன்றாகவே இனிமையாக வாசிக்க ஆரம்பித்து விட்டான். எங்கு போனாலும் இதே மாதிரிப் படுத்துகிறார்களே இதை எந்த தெய்வத்திடம் முறையிடுவது?
நாளாக நாளாக இந்தப் புது குரு நாங்கள் அங்கு உட்காரக் கூடாது என்று ஆரம்பித்தார். எங்களிடம் ஆதித்யாவின் திறமைகள் ஒன்றைப் பற்றியும் பாராட்டு விதமாகப் பேசாதவர் நாங்கள் இல்லாத போது வாய்ப் பாட்டாகப் பாடச் சொல்லி விஷயத்தை வாங்க முயல்வது புரிந்தது. இத்தனைக்கும் பெரிய இசைவாணரிடம் நாங்கள் பட்ட பாடுகளை அவரிடம் சொல்லித் தான் வகுப்பில் ஆதித்யாவைச் சேர்ந்திருந்தோம். பொதுவாக எல்லோருக்குமே நாங்கள் ஆதித்யாவிடம் கண்டிப்பாக நடந்து கொள்ளவில்லை அவன் ஆகாத்தியங்களை அனுமதிக்கிறோம் என்கிற எண்ணம். இது உலக இயற்கை. தன் குழந்தைகள் அதிகப் பிரசங்கித்தனமாய்ப் பேசினால் அது புத்தி சாதுர்யத்தின் வெளிப்பாடு; அதுவே இன்னொருவர் குழந்தை செய்தால் அது அழிச்சாட்டியம்; பேயறையாக அறைந்து அடக்க வேண்டும் என்று தான் உலகம் கருதுகிறது. குறிப்பாக ஆதித்யா விஷயத்தில் நாங்கள் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லோரிடமும் மிகவும் வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருந்ததால் அது கிட்டத்தட்ட ஒரு சமூகப் பிரச்னை ஆகிக் கொண்டிருந்ததை எங்களால் உணர முடிந்தது.
புது குரு பெரிய இசைவாணரிடம் பழைய தொடர்பைப் புதுப்பித்துக் கொண்டு ஆதித்யா குறித்துப் பேசியிருக்கிறார் என்கிற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. இவரிடமும் ஆதித்யா இயற்றிய இயற்றிக் கொண்டிருந்த அனைத்துப் பாடல்களின் பிரதிகளைக் கொடுத்து வைத்தோம். ஒரு புண்ணியமும் இல்லை. அவர் என்ன எழுதியிருக்கிறான் என்று நான்கு வரி கூடப் படித்துப் பார்க்கவில்லை. தன் பெருமை! தன் ஜம்பம்! வேறொன்றும் பேசக் கூடாது. மூச்!
இந்த புது குருவால் ஒரு குறிப்பிட்ட நன்மை விளைந்தது. மத்திய அரசின் கலாச்சாரத் துறைக்கான உதவித் தொகைக்கு ஆதித்யாவை விண்ணப்பிக்க வற்புறுத்தினார். அவரின் வழிகாட்டுதலிலும் பரிந்துரையின் பேரிலும் ஆதித்யாவிற்கு அந்த உதவித் தொகை இரண்டு வருடம் கிடைத்தது. அந்த பணம் புது குருவிற்கு ஃபீஸ் கொடுக்க உதவியாக இருந்தது. அந்த இரண்டு வருட முடிவில் ஆதித்யாவை வாத்யத்தை வாசிக்க அழைத்திருந்தது அந்த மத்திய அரசு கலாச்சாரத் துறை. அதன் பிரகாரம் ‘கன்னாட் ப்ளேஸு’க்கு அருகில் இருந்த பெரிய மைதானத்தில் ஆதித்யாவின் அரை மணி நேரக் கச்சேரி நடைபெற்றது.
இத்துடன் ஆதித்யாவின் வாய்ப் பாட்டுக் கச்சேரி ஒன்றையும் ஏற்பாடு செய்தேன். மயூர் விகார் விநாயகர் ஆலயத்தில் இடம் கொடுத்து உதவினார்கள். கச்சேரி அருமையாக அமைந்தது. அது குறித்து ஒரு மதிப்புரை வெளியாகப் புது குரு ஏற்பாடு செய்தார். இந்தப் புது குருவின் புண்ணியத்தில் இந்த மதிப்புரையில் முதன் முதலாக ‘ஆட்டிஸம்’ என்கிற வார்த்தை இடம் பெற்றது. எல்லோரும் நாங்கள் இல்லாத போதும் எங்களின் பின்னாலும் பேசிக் கொண்டிருந்த வார்த்தையை பொது வெளியில் முரசறைந்த பெருமை இந்தப் புது குருவையே சாரும்.
புது டெல்லியில் அவ்வப்போது வாய்ப்பாட்டுக் கச்சேரிக்கும் வாய்ப்பாட்டு வகுப்புகளுக்கும் அவ்வப்போது ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். அந்த அநுபவங்கள் வழக்கமானவை என்றாலும் ஸ்வாரஸ்யமானவை.
அது…………
அத்தியாயம் 29
புது டெல்லி மிகப் பெரிய ஊர்ஷாங்காய்க்குப் பின் மிகப் பெரிய ஊர் இது தான் என்கிறார்கள்நகர் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்று நான்காகப் பிரிந்திருக்கிறதுமத்திய டெல்லி வேறு தனிதமிழர்கள் என்றால் முக்கால் பேர் அரசு அலுவலகங்களிலும் தனியார் துறைகளிலும் வேலை பார்ப்பவர்கள் தாம்கால்வாசிப் பேர் பஞ்சம் பிழைக்க வந்து இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டவர்கள்அந்தந்த இடங்களில் தென்னகக் கோயில்கள் அமைந்திருக்கின்றனஎல்லாமே பிள்ளையார் கோயில்கள்ஒன்றிரண்டு இடங்களில் பெருமாள் கோயில்களும் உண்டுமலை மந்திர் என்று பிரபலமாக வழங்குகிற ஸ்வாமி நாத ஸ்வாமி கோயிலும் சிறு குன்றில்  ராமகிருஷ்ணபுரம் என்கிற பகுதியில் அமைந்திருக்கிறதுமூல விக்ரகம் அப்படியே அச்சு அசலாக ஸ்வாமி மலை மூலவரைப் போன்றே அமைந்திருக்கிறது.
ஒன்றிரண்டு சபாக்களும் உண்டுதன்னார்வலர்களால் நடத்தப் படுவதுஆங்காங்கே இருக்கும் தமிழர்கள் தான் இசை ரசிகர்கள்நீண்ட வருடங்களாக இசை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களும் கொஞ்ச பேர் உண்டுடெல்லிப் பல்கலையில் கர்நாடக சங்கீதத்துக்குத் தனித் துறை இயங்கி வருகிறதுஅவற்றில் ஆசிரியர்களும் மாணாக்கர்களும் உண்டுஇவையெல்லாம் இருந்தாலுமே கர்நாடக இசைக்கான பெரிய சந்தை இங்கு கிடையாதுமும்பையையும் புது டெல்லியையும் ஒப்பு நோக்கும் போது மும்பையில் கர்நாடக இசை நடவடிக்கைகள் சற்று அதிகம் தான்ஏனென்றால் அங்கு தமிழ் ஜனத் தொகையும்– குறிப்பாக தமிழ் பேசுகிற பாலக்காட்டுக் காரர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகம்ஆங்காங்கே தீவு தீவாக இருக்கும் சில இடங்களில் நாம் தமிழ் மணத்தை நுகர முடியும்புது டெல்லியில் இது கம்மி தான்.
என்றாலும் கர்நாடக சங்கீதத்தையும் போஷிப்பதற்கு அரசு எந்திரங்கள் உண்டுயாராவது ஒரு அமைச்சர் அல்லது கலாச்சாரத் துறையின் செயலர் கர்நாடக சங்கீத ரசிகராக இருந்து விட்டால் அவரை வைத்து ஸ்பான்ஸர்களைப் பிடிப்பது எளிதாக இருந்ததுநான் இங்கு வந்த புதிதில் கிடார் வாசிப்பதற்கான ஆசிரியரைத் தேர்வு செய்த கையுடன் வாய்ப் பாட்டிற்கும் ஆசிரியரைத் தேட ஆரம்பித்தேன்அத்துடன் ஆதித்யா கச்சேரி செய்வதற்கான வாய்ப்புகளையும் தேட ஆரம்பித்தேன்என் பழைய வேலையில் இருந்த சக ஊழியர் ஒருவர் ஏற்கெனவே டெல்லியில் பணியாற்றியவர் என்பதால் அவர் தனக்குத் தெரிந்த ஒரு செல்வாக்கான நபரிடம் தொடர்பு கொள்ளச் சொல்லியிருந்தார்மொழியின்  பெயரில் நடத்தப் படும் மன்றத்தின் செயலாளராக அந்தச் செல்வாக்கு மிக்கவர் பணியாற்றி வந்தார்.    
அவருடன் தொடர்பு கொண்டு இரண்டு  மூன்று முறை தொலைபேசியில் உரையாடினேன்அவரிடம் நான் உதவியை எதிர்பார்த்து நின்றிருந்தது அவருக்கு ஸ்வாரஸ்யப் படவில்லைஅவர் பணியாற்றி வரும் மன்றம் சகலரையும் உள்ளடக்கியது என்பதால் அவர்கள் பார்வையெல்லாம் எல்லோரையும் திருப்திப் படுத்துகிற வகையில் தான் அமைந்திருந்ததுவருடா வருடம் தேர்தல் நடக்கிற ஜனநாயக அமைப்பு வேறுபட்டிமன்றம் வைப்பார்கள்சினிமா திரையிடுவார்கள்சென்னையிலிருந்து குழுக்களை வரவழைத்து நாடகம் நடத்துவார்கள்இப்படிப் போய்க் கொண்டிருந்த இடத்தில் கர்நாடக சங்கீதத்தில் போய் ஊறி விழ அவர்கள் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.
இவருக்கு பலமுறை தொலைபேசியில் அழைத்த நிலையில் இவரை நேரில் மன்றத்திலேயே சந்திக்கும் வாய்ப்பு வந்ததுவிடுவானேன் என்று அங்கு அவரைச் சந்தித்து மீண்டும் ஆதித்யாவைப் பற்றிப் பிரஸ்தாபித்து அவனுக்கு ஏதாவது பாடுவதற்கு வாய்ப்பு வழங்க வற்புறுத்தினேன். ‘இதேதடா பெரிய ரோதனையாகப் போய்விட்டது?’ என்று அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்இதை உடனே முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நிர்பந்தம் அவருக்குதானும் பெரிதாகப் பட்டுக் கொள்ளாமல் அங்கிருந்த வயதான ஒரு வரை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தார்அந்த முதியவர் தன் பொறுப்பில் கர்நாடக சங்கீதத்துக்கான ஒரு அமைப்பை நடத்தி வந்தார்.  
முதியவருக்கு அப்போதே எண்பது வயதிருக்கும் என்று நினைக்கிறேன்பார்ப்பதற்கு ஒல்லியாகச் சருகு போல் இருந்தார்நான்கு முழ வேட்டி வெள்ளைச் சட்டையுடன் சாதாரணமாக இருந்தார்வேட்டி சட்டையில் நீர்க் காவிநல்ல மலர்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தார்ஆதித்யாவைப் பற்றி மிகவும் ஆர்வமாக விசாரித்தார்பின்னர் அவர்களின் அமைப்பு ஒரு பாட்டுப் போட்டி நடத்துவதாகவும் அதில் ஆதித்யாவைக் கலந்து கொள்ளச் செய்யுமாறும் அறிவுறுத்தினார்அதன் படி அந்தப் போட்டியில் ஆதித்யா பங்கெடுத்தான்.
    நான் தங்கியிருந்த இடத்திலிருந்து 20 கி.மீ தள்ளியிருந்த ஒரு இடத்தில் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தது அந்த விநாயகர் கோயில்அங்கு தான் அந்தப் போட்டி நடைபெற்றதுமொத்தம் நாற்பது ஐம்பது பேர் இருப்பார்கள்குழந்தைகளையும் சேர்த்துத் தான்அங்கு நீதிபதிகளும் இருந்தார்கள்ஆதித்யா முறை வந்தவுடன் ‘ராம கதா சுதா‘ என்கிற மத்யமாவதி ராகத்தில் அமைந்த பாடலைப் பாடினான்நீதிபதி ஒரு இடத்தில் கற்பனை ஸ்வரம் பாடச் சொன்னார்ஆதித்யா வழக்கம் போல் வேறோர் இடத்தில் தான் ஸ்வரம் எடுத்துப் பாடினான்அவன் பாடும்போது மயான அமைதி நிலவியதுபாடி முடித்தவுடன் கூரை பிய்த்துக் கொண்டு போகுமளவிற்கு எல்லோரும் கைத் தட்டினார்கள்அவனுக்கு அந்தப் போட்டியின் முதல் பரிசை– தம்புராவை– அறிவித்து விட்டார்கள்அந்த நிகழ்ச்சியின் அமைப்பாளரான முதியவர் பின்னர் என் மனைவியைக் கூப்பிட்டு ஆதித்யாவைப் பற்றிப் பேசச் சொன்னார்அவரும் கூடியிருந்தவர்களிடம் ஆதித்யா பற்றி விளக்கினார்இது இத்துடன் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இந்த அமைப்பின் விழா ஒன்றில் பல பெரிய மனிதர்களை அழைத்து பேசச் சொல்லி அவர்கள் முன்னிலையில் பரிசுகள் கொடுப்பதாக ஏற்பாடுஅதற்கு ஒரு நாள் குறித்திருக்கிறார்கள்இப்படி இருக்கும் போது முதியவர் ஒரு நாள் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்தன்னுடைய வீட்டில் பரிசு தயாராக இருப்பதாகவும் வந்தால் வாங்கிக் கொண்டு போய் விடலாம் என்றும் சொன்னார். ‘சரிவிழா நிகழ்ச்சி நடக்கவில்லைரத்தாகி விட்ட்து போலிருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டு நாங்கள் நால்வரும் கிளம்பிப் போனோம். ‘வேகு வேகு’ வென்று நல்ல ‘சுள்ளென்ற வெய்யிலில் அங்கே விசாரித்து இங்கே விசாரித்துத் தெரிந்து கொண்டு அவர் வீட்டில் போய் நின்றோம்அவர் எங்களைப் பார்த்தவுடன் தன் பிள்ளையை விட்டுத் தம்புராவை எடுத்து வரச் சொல்லி எங்களிடம் பெருந்தன்மையான புன்னகையுடன் ‘எடுத்துண்டு போங்கோநல்ல ஆகி வந்த தம்புரா’ என்று நீட்டினார்நாங்களும் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்அது ஒரு பழைய தம்புராஅதன் மீது பழைய அங்கவஸ்திரம் ஒன்று போர்த்தி இருந்ததுகாயலாங் கடைக்காரர் கூட வாங்க யோசிப்பார்தந்திகள் ஒன்றிரண்டு வேறு இல்லைஉபயோகிப்பதற்காக மராமத்து செய்ய வேண்டுமென்றால் கூட இரண்டு மூவாயிரம் ரூபாய் செலவழித்தால் தான் முடியும்போகும் வழியிலெல்லாம் என் மனைவி பொருமிக் கொண்டே வந்தாள்.
என் மனைவி அத்துடன் இதை விடுவதாக இல்லைஅவளுக்கு பொங்கிப் பொங்கி வந்ததுஅப்போது ஆதித்யாவிற்கு வாய்ப் பாட்டிற்காக ஒரு வித்வாம்ஸினியிடம் ஏற்பாடு செய்திருந்தோம்இசை ஆசிரியை ஓய்வு பெறும் தருவாயில் இருந்தார்ஏற்கெனவே தந்தி வாத்யக்கார தூரத்து உறவினரிடம் கிடார் வகுப்புகளுக்காகச் சென்று கொண்டிருந்தான் ஆதித்யாஅது போதாது என்று வாய்ப்பாட்டிற்கு இந்தப் பெண்மணியிடம் போய்க் கொண்டிருந்தான்நல்ல தாட்டியான உடல்வாகுபாடிப் பாடிப் பண்பட்ட காத்ரமான குரல்பதவியில் இருந்ததாலும் வித்வத்தாலும் இயல்பில் வந்த அதிகார தோரணைஅவரே சங்கீதத்தில்  இரண்டாம் மூன்றாம் பரம்பரையைச் சேர்ந்தவர்அவரின் உறவினர் அந்தக் காலத்தில் மிகவும் தேர்ந்தெடுத்த வித்வானாக இருந்திருக்கிறார்அவருடைய ஸ்வரக் கோர்வைகளையும்  பாடல்களையும் சங்கீதத்தில் பெரிய பிதாமகராகக் கருதப்பட்ட ஒரு வித்வான் அப்படியே கவர்ந்து கொண்டு இவரைப் போட்டு அமுக்கி விட்டார் என்பார் அந்த வித்வாம்ஸினிஎன் மனைவி வீட்டிற்கு வந்தவுடன் எங்கள் உறவுக்காரரான தந்தி வாத்யம் வாசிப்பவரிடமும் மேற்குறித்த இசை அரசியிடமும் ஃபோனில் பொருமித் தள்ளி விட்டாள்சபையில் வைத்து முதல் பரிசு புதுத் தம்புராவைக் கொடுப்பதாகத் தான் வழக்கம்இவர் என்னவோ பழைய தம்புராவைத் தலையில் கட்டி விட்டார் என்று புலம்பித் தள்ளி விட்டாள்நானும் என் பங்கிற்கு வழக்கமாக மிருதங்கம் வாசிக்கிறவரிடம் ஃபோனில் ‘என்ன இந்த மாதிரிச் செய்து விட்டாரேடெல்லியில் இது தான் வழக்கமா?’ என்று கேட்டேன்மிருதங்கக்காரருக்கு தர்ம சங்கடம்ஊர்க்காரரையும் விட்டுக் கொடுக்க முடியவில்லைஎங்களையும் சமாதானப்படுத்த முடியவில்லை.   
    நான்கு நாள் கழித்து முதியவர் எனக்குப் போன் செய்தார். “ஏதோ புத்தி பிசகி நடந்துனுட்டேன்மன்னிச்சிடுங்கோஃபங்ஷன் அன்னிக்குப் பழைய தம்புராவை எடுத்துண்டு வந்து கொடுத்திட்டுப் புதுத் தம்புராவை வாங்கிண்டு போயிடுங்கோ” என்றார்அதன் பிரகாரமே பழைய தம்புராவை கொடுத்து விட்டுக் காத்திருந்தோம் நிகழ்ச்சி நடந்த இடத்தில்அவர் எங்களைக் கூட்டிக் கொண்டு போய்ப் புதுத் தம்புராவைக் காண்பித்தார்நிகழ்ச்சியில் பிரமுகர் கையால் ஆதித்யாவிற்கு வாத்யத்தை வாங்கிக் கொடுத்து மிகவும் மரியாதையாக அனுப்பி வைத்தார்வாய்ப் பாட்டு ஆசிரியை எங்களிடம் “வாயுள்ள பிள்ளை பிழைக்கும்” என்றார் பாராட்டு முகமாக.
    இசை ஆசிரியை அருமையாகப் பாடுவார்ஆதித்யாவின் திறமையைக் கண்ணுற்று மாய்ந்து போனார்இது போன்ற ஒரு திறமையை வெளிச்சத்துக்குக் கொண்டு வராத இசைவாணர்களைக் கரித்துக் கொண்டிருந்தார்அந்த நாளைய சங்கீதப் பிதாமகர் எப்படித் தன் உறவினரான வித்வான் வெளிச்சத்துக்கு வராமல் அமுக்கினாரோ அது போன்றே ஆதித்யாவையும் அமுக்கி விட்டார்கள் என்று மாய்ந்து போனார்அவரிடம் கொஞ்ச நாட்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருந்தனஎன் மனைவி வழக்கம் போல் ரிக்ஷாவை அமர்த்திக் கொண்டு வகுப்புகளுக்குக் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள்.
    அப்படி ஓடிக் கொண்டிருந்தால் எப்படிஆசிரியைக்கு ஆதித்யாவைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டு முன்னுக்குக் கொண்டு வரவேண்டுமெறிருந்ததுஎன் மனைவி இவரிடமோ உறவுக்கார தந்தி வாத்தியக் கலைஞரிடமோ பிடிகொடுத்துப் பேசத் தயக்கமிருந்ததுபெரிய இசைவாணரின் செல்வாக்கையும் பெயரையும் நேரில் கண்டிருக்கிறோம்நாளை சென்னை போகும் போது எப்படியும் அவர் மனம் மாறி ஆதித்யாவைக் கொஞ்சம் முன்னுக்குக் கொண்டுவர முயலலாம்தவிரவும் டெல்லியில் இருப்பவர்களின் செல்வாக்கு சென்னையில் எப்படி எடுபடப் போகிறது என்கிற சந்தேகமும் இருந்தது.
    இதனால் பெரிய இசைவாணருக்கு மாதம் ரூ 4000/= வீதம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தோம்அவருக்கு நாங்கள் கொடுத்துக் கொண்டிருந்தது குறைவோ என்னவோ என்று என் மனைவிக்குச் சந்தேகம்அதனால் வகுப்பும் இல்லாமல் ஒன்றும் இல்லாமல் சும்மா அனாமத்தாக அவருடைய வங்கிக் கணக்கிற்கு இந்தப் பணம் போய்க் கொண்டிருந்ததுமனிதர் கொஞ்சம் கூட அசையவில்லை. ‘ஸ்கைப்பிலாவது வகுப்பு எடுக்கலாம் என்று கூட முனையவில்லைஎந்தவிதக் குற்றவுணர்வுமில்லாமல் பணத்தை வாங்கி வாயில் போட்டுக் கொண்டிருந்தார் மனிதர்.
    டெல்லியின் இசையாசிரியர்களுக்கு ஆதித்யாவின் முழு கட்டுப்பாடு வேண்டியிருந்ததுஅதை நாங்கள் கொடுக்கத் தயாராக இல்லை என்றவுடன் அவர்கள் ஆதித்யாவிற்குப் பெரிதும் முன் முயற்சி எடுக்கத் தயங்கினார்கள்.
    வாய்ப் பாட்டு ஆசிரியையின் நடவடிக்கைகள் கொஞ்சம் விநோதம் தான்திடீரென்று ஒரு நாள் ‘ஆதித்யாவின் ஜாதகத்தைக் கொண்டு வந்து கொடு’ என்றார் எதற்கு என்று புரியவில்லைகொடுத்த பிறகு பலமுறை கேட்டுப் பார்த்தும் எதற்காக ஜாதகத்தைக் கேட்டார்யாராவது ஜோசியரிடம் காண்பித்தாரா என்று சொல்லாமல் கழுத்தறுத்தார்இது போதாதென்று ஒரு நாள் அவர் மும்முரமாக பூர்வி கல்யாணி ஆலாபனை செய்து கொண்டிருந்தார்கொஞ்சம் ஏதோ மாறிவிட்டார் போலிருக்கிறதுஆதித்யா திடீரென்று “யூ ஆர் சிங்கிங் கமனாஸ்ரமம்” என்றான்அதற்குப் பின் வகுப்புகளுக்குக் கூட்டிச் சென்றால் அவர் பாட மாட்டார்ஆதித்யாவை மட்டும் பாடச் சொல்லிவிட்டு அனுப்பி விடுவார்.
    இரண்டு வருடங்கள் இப்படியே ஓடி விட்டனஇரண்டாம் வருட முடிவில் என் பெண் சென்னைக் கல்லூரியின் நுழைவுத்தேர்வில் தேர்வு பெற்றுப் பொறியியல் படிப்பிற்கு ஆயத்தமானாள்குடும்பத்தை மீண்டும் சென்னைக்குப் பெயர்க்க வேண்டிய நிர்பந்தம்.
    அது…………….

வெள்ளி, 30 மார்ச், 2018

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை IX

அத்யாயம் 26

சார் நாங்கள்லாம் டான்ஸுக்கு வாசிக்கறத்துக்குத் தான் இஷ்டப்படுவோம்அதில   காசும் கொஞ்சம்கூடசம்பாவனையை முதல்லியேகொடுத்துடுவாபிராக்டிஸ் கரெக்டா நடக்கும்சொன்னா சொன்ன டைம் தான்அதே மாதிரிகச்சேரின்னா ஆறுலேருந்து எட்டுன்னா சரியா அந்த ‘டைம்’ தான்அநாவசியப்பேச்சே கெடையாது” என்பார் அந்த வயலின் வித்வான்.
அவர் பிள்ளையையும் தற்போதுமுன்னுக்குக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்அதைப் பற்றிப்பேசிக் கொண்டிருக்கும் போது கூறினார்: “எல்லாரும் சான்ஸ் குடுக்கறதார்ந்தா பணம் கேக்கறான்கள் சார்இவ்வளவு வருஷமா   வயலின் வாசிச்சுண்டிருக்கேன்எனக்கே இந்த நிலைமை.பெரிய சபான்னா கிட்டயே போக முடியாதுசின்ன சபாக்காரன்கள்  பண்ற அழும்பு  தாங்க முடியலை சார்” என்றார்கச்சேரிகளில்கூட்டம் கம்மிஎல்லோரும் காஸட்டுகள் ஒலிப் பேழைகள் என்று ஆரம்பித்துப் பின்னர் ஐபாடில் கேட்க ஆரம்பித்து சாவகாசமாக இப்போது யுட்யூபில் கேட்கஆரம்பித்து விட்டார்கள்வரும்படியும் குறைந்து விட்டதுஇன்றைக்கும்கச்சேரிகளுக்கு பழைய நினைப்புகளில் செல்பவர்கள் ஐம்பது அறுபது வயதைக்கடந்தவர்களேஅவர்களும் உச்சாணிக்கிளையில் உட்கார்ந்து கொண்டிருக்கும்ஒரு இருபது முப்பது பிரபல வித்வான்களின் கச்சேரிகளுக்குச் செல்வார்களேஒழிய புது ஆட்களைப் புறக்கணிப்பார்கள்.
வேறோர் சமயத்தில் “வெளிநாட்டில் கச்சேரிகளுக்கு நிறைய சான்ஸ் வருகிறதேநீங்கள் அதற்கெல்லாம் முயற்சி செய்ய வேண்டியது தானே?” என்றேன்.
சார்அந்த அநியாயத்தை ஏன் கேக்கறேள்இந்த வெளிநாட்டு சான்ஸெல்லாம் கச்சேரிகள்ல இல்லைஅதெல்லாம் பெரிய வித்வான்களுக்குத்  தான்.  நம்ம போனா நாள் பூராக் கத்துக் கொடுத்துண்டு உட்கார்ந்திருக்கணும்பரவாயில்லைபணமாவது வருமேன்னு பாத்தா அதுவும் கிடையாதுஇதை ஏற்பாடு செய்யறவாஇங்க இருக்காஅவா பேசற ஃபீஸ் அங்க ஒரு மணி நேரத்துக்கு அறுபது டாலர்எங்க கையில கொடுக்கறது எவ்வளவு தெரியுமாஒரு மணி நேரத்துக்கு அறுநூறு ரூபாகேட்டா நம்மூர் மதிப்பில உங்களுக்கு அவ்வளவு தானே ஊரில கிடைக்கும்னு ஆர்க்யூ பண்றா சார்”   என்றார் அவர் வெறுப்புடன்.
இதே விஷயத்தை வேறோர் வயலின் வித்வானிடம் பேசிக் கொண்டிருந்தேன்அவர்   இசை வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர்வயலினைப் பொறுத்த மட்டில்இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர்அவர் தந்தை நல்ல பிரபல வித்வான்இவர்கள் வாழ்க்கையைக் குறைந்த பொருளாதாரத் தேவைகளுக்கானஅடித்தளத்தைச் செம்மையாக அமைத்துக் கொண்டிருப்பவர்கள்தந்தை வானொலி நிலையத்தில் பணியாற்றியவர்பிள்ளை பள்ளியில் வயலின் கற்றுக்கொடுத்து வருகிறார்கட்டுப்பாடும் ஒழுக்கமும் உள்ளவர்கள்.   கர்நாடகசங்கீதத்தின் மேல் அளவற்ற நன்றியுணர்ச்சி இவர்களுக்கு உண்டு. “தியாகராஜஸ்வாமிகள் தான் சார் சோறு போடறார்” என்பார் அடிக்கடிஅவர்   சொன்னார் வெளிநாட்டில் நடக்கற விஷயங்கள் ஒண்ணும் வெளியில சொல்ற மாதிரி இல்லைஇங்கேயிருந்து போறவங்க அங்கே இருக்கிற ‘ஸ்பான்ஸர்’ யார்வீட்டிலேயாவது தான் தங்குவாங்க. ‘ஸ்பான்ஸர்‘ எல்லாம் வேலைக்குப் போறவங்ககாலம்பற போனா ராத்திரி தான் திரும்புவாங்கவீட்டிலே இவங்க நாள்பூராஅடிக்கிற கூத்து……… அதுனால ஆதித்யாவுக்கு   ஏதாவது அந்த மாதிரி சான்ஸ்வந்தாக் கூட தனியா அனுப்பறதெல்லாம் உசிதமில்லை  பாத்துக்கங்க” என்றார்இது அவர் கேள்விப் பட்டிருக்கும் விஷயம் என்பதால் இதில் உண்மை எவ்வளவு சதவீதம் கற்பனை எவ்வளவு சதவீதம் என்று புரிந்து கொள்ள   முடியவில்லைஎன்றாலும் நிறைய வருடங்கள் இந்தியாவில் கட்டுப் பெட்டித் தனமாக வாழ்ந்துவிட்டு வெளிநாடு செல்பவர்களுக்கு அவிழ்த்து விட்டாற் போல் ஆகி விடுகிறது என்பதை உய்த்துணர முடிகிறது என்பதையும் சொல்லத் தான் வேண்டும்இது நிற்க.
அறக்கட்டளையால் நடத்தப் பட்டு வரும் கச்சேரிகளைப் பற்றிச் சென்றஅத்யாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்இந்தக் கச்சேரிகள் வாரா வாரம் நடக்கும்இதற்கென்று தனியான அறங்காவலர்கள் உண்டுஅதில் சில வித்வான்களும் அடங்குவர்அவர்கள்   கச்சேரிகளில் பெரிதாகத் தலையிட்டுக் கொள்ளமாட்டார்கள்கச்சேரிகளை   நிர்வகிக்கிற ஒன்றிரண்டு வித்வான்கள் உண்டுஅவர்கள் ஒரு நாள் இரண்டு நாள் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளுக்கு மனுசெய்திருக்கிறவர்களைக் கூப்பிட்டு நேர்காணல்   ஒன்றை நடத்துவார்கள்பாடச்சொல்லிக் கேட்டு விட்டுத் தேர்தெடுப்பார்கள்இதே   போல் வயலின் மிருதங்கம்வாசிப்பவர்களுக்கும் தேர்வு நடக்கும்தேர்வானவர்களைத்   தகுந்த விதத்தில்பாட்டு வயலின் மிருதங்கம் என்று பொருத்திக் கச்சேரி நாளை   அறிவித்து விடுவார்கள்குழந்தைகள் அன்று போய் கச்சேரியை வழங்க வேண்டியது தான்வருட முடிவில் சிறப்பாகப் பாடிய குழந்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகளை  வழங்குவார்கள் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
இதற்கு நிகழ்ச்சிகளை நிர்வகிப்பதற்கென்று ஒரு மேலாளர் உண்டுஇவர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்மிருதங்கம் வாசிப்பவர்அரசுத்துறை எதிலோ எழுத்தாளராக வேலை பார்த்து வந்தார்சங்கீதத்தில் ஆர்வம்காரணமாக இதில் இறங்கினார்   என்று நினைக்கிறேன்முதன் முறையாக யார் மூலமாகவோ அவர் அறிமுகம் கிடைத்து அவர் நடத்தும் அன்னமாச்சார்யாஆராதனையில் ஆதித்யா ஒன்றிரண்டு பாடல்கள்   பாட வாய்ப்பு வழங்கினார்அந்த நிகழ்ச்சியில் அவர் ஒவ்வொரு பாடல் முடிந்தவுடனும் அதற்கான நீண்ட விரிவுரையை வழங்கினார்அவருடைய சங்கீதத் தோய்வு மிகவும் ஆச்சர்யமாக இருந்ததுஅவர் என்னிடம் அறக்கட்டளைக்கு   கச்சேரிக்காக மனு செய்யுமாறுகூறினார்.
அதன்படி நான் மனு செய்தவுடன் நேர்காணலுக்கு அழைத்தார்கள்நேர்காணல்   செய்தவர் ரொம்பவும் பிரபலமாகாதிருந்த வித்வாம்ஸினிபெரிய பிரபலம்ஆகாதிருந்தவர்கள் பொதுவாக சங்கீதம் கற்றுக் கொடுப்பது என்று ஆரம்பித்துநல்ல வரும்படி உள்ளதால் மும்முரமாக இறங்கி விடுவார்கள்பிரபலம்அடையாமல் இருப்பதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லைஅந்தமாமியின் பையனும் பெண்ணும் சங்கீதம் கற்றுக் கொண்டிருந்தார்கள்மருந்தீஸ்வரர் கோயில் கச்சேரியில் மாமியின் பையன் தான்   ஆதித்யாவுக்கு வயலின் வாசித்தான்.
ஆதித்யா அவர் முன் பாடிய பாடல் இப்போது நினைவுக்கு வரவில்லை.                        அவர் இடையில் நிறுத்தச் சொல்லி விட்டு ஏதோ இடத்தில் ஸ்வரம் பாடச் சொன்னார் என்று   நினைக்கிறேன்அவன் அதைப் பொருட்படுத்தாமல் தன் வழியில் பாடித் தனக்கு   வேண்டிய இடத்தில் ஸ்வரம் பாடி முடித்தான்அந்த அம்மையார் மையிட்ட விழிகளால்  என்னை உறுத்துப் பார்த்து என்னிடம் “இஸ் ஹி ஆல் ரைட்?” என்றார்நான் என்னத்தைச் சொல்லதர்ம சங்கடமாய்ப் புன்னகைத்தேன்தேர்வாவதில் பிரச்னை இல்லாமல் சுமூகமாகவே முடிந்தது.
அந்த சபாவில் ஆதித்யா தொடர்ந்தாற் போல் நான்கைந்து வருடங்கள் பாடினான்ஆரம்பத்தில் ஏதோ ஐந்நூறு ரூபாயோ என்னவோ வசூலித்தார்கள் என்றுநினைக்கிறேன்.   கச்சேரி செய்ய அருமையான இடம்அவர்கள் சென்னையின்பிரதான சாலை ஒன்றில் அமைந்திருந்த பெண்கள் கல்லூரி ஒன்றின் திறந்தவெளி அரங்கை வாடகைக்கு எடுத்திருந்தார்கள்அல்லது கல்லூரி நிர்வாகத்தினர் இலவசமாக அநுமதித்திருந்தார்களோ என்னவோகூட்டம் என்றால் கச்சேரிசெய்கிறவர்களின் உறவுக்காரர்கள் மற்றும் நண்பர்கள் தான்எங்களைப்பொறுத்தவரை நாங்கள் கணவன் மனைவி பெண் இவர்களே   ரசிகர்கள்எப்போதாவது உறவினர்களோ நண்பர்களோ தலை காட்டுவதுண்டுநிகழ்ச்சியின் நீதிபதிகள் பின்னால் தனியாக அமர்ந்திருப்பார்கள்நிகழ்ச்சிஇரண்டு பிரிவாக இருக்கும்முதல் பிரிவில் ஒரு மணி நேரமும் இரண்டாம் பிரிவில்ஒன்றரை மணி நேரமும் குழந்தைகள் கச்சேரி செய்வார்கள்எனவே போனஸாகமுதல் நிகழ்ச்சிப் பார்வையாளர்கள் இரண்டாவதற்கும் இரண்டாம் நிகழ்ச்சிரசிகர்கள் முதல் நிகழ்ச்சிக்கும் அமர்ந்திருப்பது உண்டு.
ஆதித்யா ஆரம்ப நாட்களில் முதல் நிகழ்ச்சியில் தான் பாடிக் கொண்டிருந்தான்.   அதற்குக் குழந்தைகள் தான் பக்க வாத்யம் வாசிப்பார்கள் என்பதால் ஒன்றிரண்டு   சமயங்களில் அவர்கள் ஒத்திகைக்காக எங்கள் வீட்டிற்கு வருவதுண்டுஒரு முறை ஒரு தெலுங்குப் பெண்மணி தன்னிடம் ஒன்பது வருடங்கள் மிருதங்கம் கற்றுக்   கொண்டிருந்த ஒரு பையனைக் கூட்டிக் கொண்டு வந்தார்அந்தப் பையன்கொஞ்சம்  மிரண்டு போய்த் தான் வந்தான்வாசிக்கும் போது குருவின்முகத்தையே பார்த்துக்   கொண்டு சந்தேகமாக வாசித்துக் கொண்டிருந்தான்ஆதித்யா பாடிக் கொண்டிருந்த போது ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு பாடலில் அப்பெண்மணி ஏதோ தாளத்தை வைத்துக் கொண்டு குறுக்கிட முயன்றார்ஆதித்யா அனுமதிக்கவில்லைசத்தம் போட்டு அவரை அடக்கி விட்டான்தனிஆவர்த்தனத்துக்கு ஆதித்யா கண்ட சாபு தாளத்தில் அமைந்த   பாடலுக்கு இடம் விட நிச்சயித்திருந்தான்அந்த அம்மையார் தன் சிஷ்யன் அதில் தனி வாசிக்கமுடியுமா என்கிற நிச்சயம் இல்லாததால் ஆதி தாளத்திலேயே – ஆதி தாளம் வரும் பாட்டிலேயே – அமைத்துக் கொள்ள வற்புறுத்தினார்அதற்கு வேறு ஆதித்யாவிடம் தனிப் பஞ்சாயத்துதர்ம சங்கடம் தான்என்ன செய்வது?
இன்னொரு கச்சேரியில் ‘மகுவா நின்னே கோரி’ என்கிற வர்ணத்தை எடுத்தான்.   நாராயண கௌளையில் அமைந்த வர்ணம்நாராயண கௌளை ராகத்தை யாரும்   அவ்வளவு எளிதாகப் பாடி விட மாட்டார்கள்ஏனென்றால் கரணம் தப்பினால் மரணம்   என்பது போல் கொஞ்சம் பிறழ்ந்தால் கேதார கௌளைக்குச்சென்று விடும்இந்தக்   கச்சேரியில் வயலின் வாசித்த பெண் ஆதித்யாவை பரிசோதனை செய்து தேர்வு செய்த இசைவாணியின் மகள். ‘இஸ் ஹி ஆல் ரைட்?’ என்று கேட்டவருடைய மகள். நாராயண கௌளை வர்ணத்தின் போது சும்மா வில்லை வைத்து வயலினில் ஸ்ருதி மட்டும் போட்டுக் கொண்டுஉட்கார்ந்திருந்ததுஇந்தக் கச்சேரி பற்றி பெரிய இசை வாணரிடம் பேசிக்கொண்டிருந்தபோது  நாராயண கௌளையைப் பற்றிக் கூறினோம்அவர்ஆச்சர்யப்பட்டுப் போனார். ‘பெரிய வித்வானகள் கூட ட்ரை பண்ண மாட்டா. வெரிகுட் ஆதித்யா’ என்றார்.    பின்னொரு முக்கியமான கச்சேரியில் இதே ராகத்தில்ஆதித்யா விருத்தம் ஒன்றைப்   பாடி விட்டு வயலின் காரர் முறைக்காகக் காத்திருந்தான்அவர் அதைத் தவிர்த்து   மேலே பாடச் சொல்லி விட்டார்பெரியஇசை வாணர் சொன்னது சரி தான்.
ஆதித்யா நன்றாகப் பாடினாலும் கச்சேரி சோபிக்காமல் போவதற்குக் காரணம்பக்க  வாத்யம் வாசிக்கின்ற குழந்தைகள் சொதப்பி விடுவது தான் என்பதை உணர்ந்து   கொண்ட அமைப்பாளர் எங்களை அடுத்த கச்சேரிக்குக் கூப்பிடும்போது பக்க   வாத்தியங்களை எங்களையே ஏற்பாடு செய்து கொள்ளச் சொல்லிவிட்டார்இந்த   சபாவிலும் எங்கள் தலையில் தான் செலவு விழுந்தது என்றாலும்ஒரு ஆறுதல்கச்சேரி சோபிக்குமோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கவேண்டாம்.
இந்த சபாவின் ஆண்டு விழாவிற்கான பரிசுகளை யார் யாரோ குழந்தைகள் தட்டிக் கொண்டு போனார்கள்எங்களுக்குக் கொஞ்சம் வருத்தம் தான் என்றாலும்பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இருந்ததுகாரணம் என்னவென்றால்ஆதித்யா எப்போதும் பரிசோதனை செய்து கொண்டேயிருப்பதால் கச்சேரிகள்வாச்சான் பிழைச்சான்’ தான்.   நிறைய கச்சேரிகள் எடுக்கும்ஒன்றிரண்டு பரிமளிக்காமல் போய் விடும்சங்கீதத்தில் இருக்கும் வித்வான்கள் சற்றுஉன்னிப்பாக கவனித்தால் தான் அவன் இசையின்   உன்னதத்தை உணர முடியும்இன்னொன்று அவன் யாரிடமும் இவற்றைக் கற்றுக்  கொள்ளாமல் தானாகப் பாடுகிறான் என்பதுஅதை இன்று வரை நான் இத்தொடரின்  ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தது போல் உலகம் நம்பவில்லைஇனி மேலும் நம்பப் போவதில்லை.
ஒரு ஆறுதல் அறுபத்து மூவர் உற்சவத்தில் வழங்கும் நீர்மோர் போல் இச் சபாவருடா வருடம் இருபது குழந்தைகளுக்கு சிறிய பரிசுகளை வழங்குவது உண்டுஅதில் ஒரு முறை ஆதித்யாவிற்கும் மற்ற குழந்தைகளுடன் பரிசினைவழங்கினார்கள்இந்தப் பரிசை    வழங்கியவர் நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த எங்களை வீட்டு வாசலில் இரண்டு மணி நேரம்  நிற்க வைத்திருந்த பிரபல வித்வான் தான்அவர் அந்த விழாவில் தன் சுருதி சேராத குரலில் ‘பாரோ கிருஷ்ணய்யா’ என்று பாடி முடித்துக் குழந்தைகளுக்குப் பரிசை வழங்கினார்ஆதித்யா அவரிடம் பரிசை வாங்கும் போது அவரின் கரம் பிடித்துக் குலுக்கினான்அவரும் “ஆஹாங்” என்று சிரித்துக் கொண்டே அவனுடன் கை குலுக்கினார்.
ஷண்முகப் பிரியாவைக் குறிப்பிட்டிருந்தேன்அன்று இந்தசபாவில் ஆதித்யா   ஷண்முகப் பிரியாவில் ‘ஆண்டவனே…’ என்கிற பாபநாசம் சிவனுடைய கீர்த்தனையைப் பாடினான்அவன் அன்று பாடிய நிரவலிலும் கற்பனா ஸ்வரத்திலும் பொறி   பறந்ததுபதிவில் உள்ள தரக் குறைவைப் பொறுத்துக்கொண்டு வாசகர்கள் அதைக் கேட்டு ரசிக்கக் கோருகிறேன்அதற்கான கண்ணி இதோ:
அதே கச்சேரியில் மோகன ராகத்தில் பவனுத என்கிற கீர்த்தனையில் மின்னல்வேக   ஸ்வரம் போட்டிருந்தான்அதற்கான கண்ணி இதோ:
http://www.mediafire.com/file/1b1bxvqh1hyk8v8/Bhavanutha%20Mohanam%20Aditya%20Mohan%2012.3.2009.wpl

அத்தியாயம் 27

2010 கொஞ்சம் சோதனையான வருடமாக அமைந்தது. ஆதித்யா தொடர்ந்து பாடல்களைக் கேட்டுக் கொண்டும் பாடிக் கொண்டிருந்ததில் தூக்கம் வராமல் தவித்தான். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாக இருபத்து நான்கு மணி நேரமும் விழித்திருந்தான். அப்போது பாடல் வரிகளையும் சமஸ்கிருத சொற்றொடர்களையும் தொடர்ச்சியாக முணுமுணுத்துக் கொண்டிருந்தான். எங்களுக்குக் கவலையாக இருந்தது. என்ன வற்புறுத்தியும் செய்தும் அவனைத் தூங்க வைக்க முடியவில்லை.
யாரோ சொன்னார்கள் என்று ஒரு மனநல நிபுணரிடம் நேரம் வாங்கிக் கொண்டோம். இவர் ஒரு பிரபல மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவ மனையில் மருத்துவம் பார்த்து வருகிறார். அங்கு போய் பதிவு செய்து கொண்டு அவரைப் பார்த்தோம். அவர் பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் நகரின் வேறொரு பகுதியில் அவரின் க்ளினிக் உள்ளது என்றும் அங்கே முதலில் சைக்காலஜிஸ்டைப் பார்த்துப் பரிசோதனைகள் செய்து அதன் பின்பே அவர் பார்ப்பார் என்றும் கூறினார். பின் அவர் சொல்படியே முதலில் அந்த சைக்காலஜிஸ்டிடம் நேரம் வாங்கிக் கொண்டு ஆதித்யாவுடன் போனோம். அவர் ஒரு சிறிய பெண். காது கேட்காத வாய் பேசவியலாத குறைப்பாட்டுடன் பிறந்தவர் என்று தெரிந்தது. அவரால் பேச முடிந்ததே தவிர வார்த்தைகள் ஸ்பஷ்டமாக இல்லை. காதுகளில் கேட்கும் கருவி அணிந்து கொண்டிருந்தார். அவரைப் பார்க்கும் எவருக்குமே அவர் காது கேட்காத வாய் பேச முடியாதவர் என்றும் அதற்கான விஷேடப் பள்ளியில் நீண்ட நாள் பயிற்சி எடுத்த பின்னரே இந்த அளவிற்கு வந்திருக்கிறார் என்றும் எளிதாகக் கூறி விட முடியும். இந்தப் பெண் அந்த மருத்துவருடைய மகள். உலகில் எப்படியெல்லாம் ஒவ்வொருவர் குழந்தை குட்டிகளைக் காப்பாற்றுகிறார்கள்? எப்படியெல்லாம் பிழைக்கிறார்கள்? அந்தப் பெண் இதற்கான பயிற்சி பெற்றிருந்தாலும் தன் அரைகுறைப் பேச்சில் புரிந்து கொண்டு எப்படி ஒரு நோயாளி குறித்த அறிக்கையைத் தயார் செய்ய முடியும்? என்ன நம்பகத் தன்மை அவரின் அறிக்கையில் இருக்கும்?
இந்த மருத்துவர் அடுத்த நாள் இரவு எட்டு மணிக்கு அறிக்கையை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். சரியாக எட்டு மணிக்குச் சென்று காத்திருந்தோம். ஒருவரும் இல்லை. கொஞ்சம் சாவகாசமாக உதவியாளர் வந்து பெயர்களைக் குறித்துக் கொண்டார். மருத்துவர் பத்து மணி வாக்கில் வந்தார். இது அங்கு வழக்கம் போலிருக்கிறது. எட்டு மணிக்குப் பெயரைப் பதிவு செய்தவர்கள் கிளம்பி விட்டார்கள். எல்லோரும் மீண்டும் பத்து மணிக்குத் தான் திரும்பி வந்தார்கள். கூட்டம் அம்மி விட்டது. பொறுமையாகக் காத்திருந்து மருத்துவர் வந்து எங்களின் முறை வந்த பின் ஆதித்யாவுடன் சென்று சந்தித்தோம். அவர் பொறுமையாக நாங்கள் சொல்வதையெல்லாம் கேட்டு விட்டு ஆதித்யாவிடமும் சில கேள்விகள் கேட்டார். பரிசோதனைகள் செய்து விட்டு “இது எல்லாருக்கும் வர்றது தான். பெரிசாக் கவலைப் படறத்துக்கு ஒண்ணும் இல்லை. நான் ஒரு மருந்து ‘பிரிஸ்க்ரைப்’ பண்றேன். கொடுங்கோ. சாந்தமாயிடுவான். நன்னாத் தூங்குவான்” என்றார்.
எங்களுக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. “சைட் இஃபக்ட்ஸ் இருக்குங்கறாளே டாக்டர்?” என்றேன்.
“நான் கொடுக்கறது பாயிண்ட் ஃபைவ் எம்ஜி தான். பேபி டோஸ். சங்கீதக்காராளே எங்கிட்ட நிறைய பேர் வர்றா. எடுத்துக்கறா. சொன்னா நம்ப மாட்டேள்” என்றார்.
அவர் கொடுத்த மருந்துகளில் ஒரு வாரத்தில் ஆதித்யா இயல்புக்கு வந்து விட்டான். இதை எதற்கு இங்கு குறிப்பிடுறேன் என்றால் மருத்துவர் மருந்து என்று பெரிய அளவில் நாங்கள் செல்லவில்லை என்று விளக்குவதற்காகவே. ஆரம்ப நாட்களில் எங்களின் உறவினர் வற்புறுத்தலால் ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்த சம்பவத்தை முன் அத்யாயம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறேன்.
இந்த சந்தர்ப்பத்தில் பெரிய இசைவாணரின் வகுப்புகள் சுத்தமாக நின்று போயிருந்தன. அவருக்கு ஆதித்யாவிற்கு வகுப்புகள் எடுப்பதில் சுத்தமாக ஆர்வம் இல்லை. இரண்டு சகோதரிகளுக்கு மட்டும் ஊக்கமாக வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் வற்புறுத்திக் கேட்டபோது ஆதித்யா அப்போதைக்கு பெரிய சகோதரியிடம் வகுப்புகளுக்குச் செல்லப் பணித்திருந்தார். எப்படி! ஆதித்யாவிற்குப் பின்னர் வகுப்புகளில் சேர்ந்தவர்கள். ஆதித்யாவை விட வித்வத் குறைந்தவர்கள். ஆதித்யா ஸ்வரம் போட்டால் எதிர் ஸ்வரம் போடத் தெரியாது அவன் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களிடம் ஆதித்யாவிற்கு வகுப்புகள்! என் மனைவி அதையும் கர்ம சிரத்தையாக செய்து கொண்டிருந்தாள். இது எவ்வளவு நாள் ஓடும்?
இதே போல் பெரிய இசைவாணரின் இன்னொரு மாணவனிடம் வகுப்புகளுக்குச் செல்லப் பணித்தார் பெரிய இசைவாணர். அவர் வீட்டிற்கும் ஆதித்யா கொஞ்ச நாள் போய்க் கொண்டிருந்தான். இந்த சிஷ்யர்கள் பெரிய இசைவாணரை விட மேட்டிமைத் தனத்துடன் நடந்து கொள்வார்கள். சகோதரிகளிடம் ஸ்வரப் படுத்திய சாகித்யங்கள் அனைத்தையும் வாங்கிக் கொள்ளச் சொல்லி பெரிய இசைவாணர் எங்களிடம் சொல்லியிருந்தார். அவர்களிடம் கேட்டதற்கு ஏதோ பத்து கீர்த்தனங்களின் நகல்களை வேண்டா வெறுப்பாகக் கொடுத்தார்கள். என் மனைவிக்கு இருந்த வெறுப்பில் முதன் முறையாக தழைந்து போகாமல் இது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டு சகோதரர்களின் அன்னையைத் தொடர்பு கொண்டார். “ சார் சொன்னது எழுபத்தஞ்சு கீர்த்தனைகளுக்கு மேலே. எல்லாத்தையும் உங்ககிட்ட வாங்கிக்கச் சொல்லியிருக்கார். நீங்க பத்து தான் கொடுத்திருக்கேள். நான்  சார் கிட்ட இவ்வளவு தான் கொடுத்திருக்கேள்னு சொல்லிவிடவா?” என்றிருக்கிறாள். என்ன மாயம்! மீதமனைத்தும் விசையை அழுத்தினாற் போல் வந்து சேர்ந்தன.
இது இப்படியென்றால் அந்த இன்னொரு மாணவன் என் மனைவிக்கு ஒரு நாள் போன் செய்து ஏன் வகுப்புகளுக்கு வரவில்லை என்று கத்தியிருக்கிறான். என் மனைவி கொஞ்ச நாள் முயன்று பார்த்து விட்டு பின்னர் இது பிரயோஜனப் படாது என்று விட்டிருந்தாள். குறிப்பாக இதே மாணவனுக்கு மறுநாள் கச்சேரியென்றால் முதல் நாள் கட்டாயம் ஆதித்யா வகுப்பு இருந்தாக வேண்டும். ஸ்வரம் கணக்குகளில் பயிற்சி வேண்டும் போலிருக்கிறது. யார் குரு யார் சிஷ்யன்? பின்னொரு சமயம் இதே மாணவன் கச்சேரிக்கு என் பெண் பின்னால் அமர்ந்து கொண்டு தம்புரா போட வேண்டும் என்று வற்புறுத்தினான். என் மனைவிக்கு “இது ஏதடா புது வம்பு? என்று தோன்றியது. ‘அவளுக்கு அதெல்லாம் சரிப்படாது ; கூச்ச சுபாவி’ என்று மறுத்து விட்டாள்.
இதே சமயத்தில் நண்பரின் வற்புறுத்தலுக்கிணங்க பிரபல வித்வான் ஒருவரைச் சந்தித்தோம். நல்ல அருமையாகப் பாடுகிறவர். பாடாந்தரமும் உழைப்பும் மேன்மையானவை. அவர் மரபை எதிர்க்கும் கருத்துகளுக்காக ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருப்பவர். அவர் கச்சேரியை ஒன்றிரண்டு சமயங்களில் நானும் என் மனைவியும் கேட்டிருக்கிறோம். ‘நின்ன நெர நம்மினானுரா’ என்கிற பந்துவராளிக் கீர்த்தனையை ஒரு கச்சேரியில் விஸ்தாரமாக ஆலாபனை, நிரவல் கற்பனாஸ்வரம் என்று பாடினார். எனக்கும் என் மனைவிக்கும் கண்ணீரே வந்து விட்டது. ஏற்கெனவே நடனப் பள்ளியின் இயக்குநர் எங்களுக்கு அவரின் பெயரைச் சிபாரிசு செய்தார். அப்போது நாங்கள் ஏதோ தயக்கத்தில் அவரிடம் செல்லவில்லை.
மைலாப்பூரின் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் சாதாரண அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருந்தார். அவர் மனைவியும் சங்கீத வித்வாம்ஸினி. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் மும்முரத்தில் ‘நைட்டி’யுடன் இருந்தார். நாங்கள் போனபோது நானே அலுவலகம் செல்கிற அவசரத்தில் இருந்தேன். அதனாலோ என்னவோ இந்த முயற்சியின் பலிதத்தின் மேல் நம்பிக்கையின்மையும் ஆயாசமும் சோர்வும் எனக்கு இருந்தன. அவர் மிகவும் இனிமையாகத் தான் பேசிக் கொண்டிருந்தார். அவர் மனைவி ஆதித்யாவைச் சற்று உற்று நோக்கி விட்டு “இந்த மாதிரிக் குழந்தைகளுக்கு ஆலாபனை பண்ண வராதும்பாளே  ?” என்றார். ஆதித்யா அப்போதெல்லாம் குறைவில்லாமல் ஆலாபனையும் செய்து கொண்டிருந்தான்.
ஆதித்யா அவர்களின் முகத்தையே பார்க்காது ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். வித்வான் கரகரப்ரியா ராகத்தில் ‘ராமநீ  சமானமெவரு’ என்கிற கீர்த்தனையை ஆரம்பித்துப் ‘ பலுக்கு பலுக்கு’ என்கிற இடத்தில் ஸ்வரம் பாடி நிறுத்தினார். ஆதித்யா எதிர் ஸ்வரம் பாடினான். இருவரும் மாற்றி மாற்றி ஸ்வரம் பாடினார்கள். ஆதித்யா பின்னலான ஸ்வரக் கட்டுகளுடன் பாடி விட்டு முத்தாய்ப்பாக முடித்து வைத்தான். வித்வானின் மனைவி “கணக்குப் போடறான் யார்!” என்று மூக்கின் மேல் விரலை வைத்தார். சரிதான். இன்னொரு வேடிக்கை. எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை.  வழக்கமாக எதிர்பார்ப்புடன் உட்கார்ந்து ஏதாவது நடக்காதா என்று எதிர் நோக்குகிற நான் அன்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அலுப்பில் சடாரென்று எழுந்திருந்தேன். ‘எனக்கு ஆஃபீஸீக்கு நேரமாச்சு. கிளம்பறோம்’ என்று கூறி விட்டு அவர்கள் பதிலை எதிர்பார்க்காமலேயே மனைவி பையனை இழுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். என்னை அவரிடம் கூட்டிச் சென்ற நண்பர் நான் அது போல் அவசர கதியில் கிளம்பியதற்காகப் பின்னால் என்னிடம் கோபித்துக் கொண்டார். இந்தக் கதை இத்துடன் முடிந்தது.
இதே வித்வானை நான் பின்னாளில் புதுடெல்லி வந்த பிறகு ஒரு முறை தொடர்பு கொண்டேன். அப்போது அவர் பேருந்துகளில் பாடுவது அடித்தள மக்கள் வசிக்கும் இடங்களில் பாடுவது என்று ஆரம்பித்திருந்தார். கச்சேரிகளில் எதற்கு வர்ணம் முதலில் பாடுவது வயலின் காரர் முதலில் ஆலாபனை செய்த பிறகு பாடகர் ஆலாபனை செய்யலாமே என்றெல்லாம் புரட்சிகரமாக  ஆரம்பித்திருந்தார். எல்லோரும் திக்பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில இடங்களில் கண்டனங்கள்; பல இடங்களில் பாராட்டு மழை. அப்போது நான் புதுடெல்லி வந்து கொஞ்ச நாட்கள் ஆகியிருந்தன. ஆதித்யாவிற்கு ஆலாபனைப் பகுதியில் கொஞ்சம் முன்னேற்றம் வேண்டுமோ என்று எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. ஆதித்யாவிற்கே தெரியும் என்றாலும் அவனுக்கு யாராவது ஒரு தூண்டுகோல் தேவை என்று தோன்றிக் கொண்டிருந்தது. என்னால் அவனுக்கு ஆலோசனைகள் வழங்க முடியும். அவனுக்குப் பெரிய சவாலை அளிக்க முடியாது. அது ஒரு குருவால் மட்டுமே சாத்தியம் என்பதால் இந்த சமூக செயற்பாட்டாளரை-விளிம்பு நிலை மனிதர்களுக்கான வித்வானைத்- தொடர்பு கொண்டேன்.
அவர் ஆரம்பத்தில் என்னைத் தெரிந்த மாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை அல்லது எங்களை நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. நான் “ஆலாபனைல கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் தேவைப்படறது சார்” என்றேன். அவர் உடனே, “அதையெப்படி நீங்க சொல்ல முடியும்? அவனுக்கு எது தேவை எது தேவையில்லைங்கறதை குரு தானே தீர்மானிக்கணும்?” என்றார் கோபமாக. பெற்றோருக்கு ஒரு பாத்யதையும் கிடையாது போலிருக்கிறது. நான் பேச்சிழந்து நின்றேன்.
“எனக்கு சுத்தமா டைம் இல்லை. அதுனால என்னால முடியாது” என்று கூறி இதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.
கொஞ்ச நாள் கழித்து எங்களுக்கு வித்வானை அறிமுகப் படுத்திய நண்பருடன் தற்செயலாகத் தொடர்பு கொண்டபோது என் மனைவி அவரிடம் இதைப் பற்றிப் பிரஸ்தாபித்திருக்கிறான். அந்த நண்பரும் வித்வானைத் தொடர்பு கொண்டு “என்ன இப்படி பேசிட்டேளாமே?” என்று விசாரித்திருக்கிறார். அதற்கு அவர் “அந்த மாதிரி ஏன் பேசினேன்னு தெரியலை. அதுக்குப்பறம் எனக்கு ஆதித்யாவைப் பத்திக் கனவு வந்தது” என்றிருக்கிறார். அவர் என்ன சொல்ல வந்தார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அவரின் தற்போதைய கொந்தளிப்பான மனநிலைக்கும் இந்த சம்பாஷணைக்கும் தொடர்பு இருப்பதாய் நான் கருதியதால் மறுபடி அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை.
2011 இல் நான் தற்போதைய பணியை ஏற்றுக்கொண்ட பிறகு புது டெல்லிக்குக் குடி பெயர்ந்தோம். அது…
***
நன்றி : சொல்வனம் 

https://solvanam.com/?p=51962

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...