இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
வெகுஜனப் பத்திரிகை ஒன்றை நான் வழக்கமாகப் படித்து வருகிறேன். மிகவும் பாரம்பரியமான பத்திரிகை அது. அதில் மிகவும் புகழ் பெற்ற கார்டூனிஸ்ட் ஒருவர் உண்டு. மிகவும் புத்திசாலித்தனமாக அவர் வரையும் கார்டூன்கள் மிகவும் உலகப் புகழ் பெற்றவை. ஒன்று இரண்டு வரலாற்று நூல்களையும் எழுதிய அவருக்கு அற்ப காரணுங்களுக்காக கல்தா கொடுத்தார்கள். அதே சமயம் மிகவும் சாமர்த்தியமான திரைப் பாடலாசிரியர் ஒருவர் எழுதிக்கொண்டிருந்த கதை த் தொடர் முடிய அதற்குப் பாராட்டு மழை. கிராமத்தைப் பற்றி கதை சொல்லிகளின் உதவியுடன் எழுதப்பட்ட இந்த  நெடுந்தொடரில் 'கிளிசே' மனிதர்கள்தான் உலா வருகிறார்கள். இந்த எழுத்தாளர் கடந்த 40 வருடங்களாக சென்னைவாசி. கிராமத்துக்கும் அவருக்கும் ஸ்நானப்ராப்தி கிடையாது. கட்டுரைகள் வன்முறை பற்றி சர்வ சாதரணமாக விவரிக்கின்றன. அந்தக்காலத்தில் மஞ்சள் பத்திரிக்கைகள்   கூட வெளியிடத் தயங்கும் கொடுமைகளை புலனாய்வு என்கிற பெயரில் வெளியிடுகின்றன. பக்கத்துக்குப் பக்கம் சினிமா. இப்போது  ஒரு பேட்டியில் ஒருவர் தெய்விக சிலைகளைச் செய்வதாகவும் ஆனால் தெய்வ நம்பிக்கை இல்லை என்றும் தொழிற்சாலைக...
66ஆம் சுதந்திர தினம் சுதந்திர தினத்தை இந்தியா எப்படிக் கொண்டடுகிறதென்று  தொலைகாட்சி வழியாகத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்பது நம் மரபாதலால் காலை எழுந்தவுடன் பெட்டியை ஆன் செய்தேன். மகாத்மா நாசர் 'சிக்னலில் நிற்காமல் போகிறார்கள்;வீதி பூராக் குப்பை; என்ன சுதந்திரம் வேண்டிக்கிடக்கிறது ' என்று புலம்பினார். தங்கர் பச்சன் 'விவசாயப் புரட்சி என்கிற பெயரில் விளை நி லங்களைப் பாழடித்து விட்டார்கள்' என்று அழுதார். ஷாலினி என்னும் மன நல மருத்துவர்- டிவியில் அடிக்கடி காணப்படுபவர்- அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஏற்பட்ட சமுக சிந்தனை மாற்றத்தால்  மட்டுமே இந்திய சுதந்திரம் கிடைத்ததே ஒழிய சுதந்திரப் போராட்டத்தால் கிடைக்கவில்லை என்று ஒரு ஒப்பற்ற கருத்தை வெளியிட்டார். இவர்கள் எல்லாம் நாட்டுக்கு இவர்களின் பங்களிப்பு இதுவரை என்ன என்று எண்ணிப் பார்த்துப் பின் இது போன்ற கருத்துக்களை வெளியிடுகிறர்களா என்று புரிந்து கொள்ள முடியவில்ல்லை. அவரவர் அவரவர் வேலையைப் பணம் வாங்கிக்கொண்டு செய்கிறார்கள். அவ்வளவே. அவரவர் ஜீவனோபாயத்துக்கான வேலைகளுக்கு மேல் என்ன செய்திருக்கிறார்கள்? சுதந்...
அரசு உடனடியாகச  செய்ய வேண்டிய தற்போதய டாப் 10 பணிகள் : 1. பூரண மதுவிலக்கை உடனடியாக அமல் செய்தல் . 2. மாநிலம் முழுவதும் நடக்கும் மணல் கொள்ளையை முற்றிலுமாக ஒழித்தல். 3. காவேரியை நம்பி இராமல் நீர் ஆதாரங்களை பலப்படுத்துதல். 4. விளை நிலங்களை பிளாட் போட்டு விற்கும் அவலத்தைத் தடுத்து நிறுத்துதல் . 5. பள்ளிக் கட்டணங்களை முறைப்படுத்தி கட்டுக்குள் வைத்திருத்தல். 6. செயற்கை உரங்களை முற்றிலுமாக ஒழித்து இயற்கை உரங்களை ஊக்குவித்தல் . 7. சினிமாவில் அரிவாள் கலாச்சாரத்துடன் வரும் படங்களைத்  தடை செய்தல். 8. சினிமா ஹீரோக்களின் சம்பள விகிதங்களை நெறிப்படுத்தி கட்டுக்குள் வைத்திருத்தல் . 9. மாற்று எரிசக்தி ஆதாரங்களைக் கட்டாயமாக்கி ஊக்குவித்தல். 10. கேரளாவுக்குக் கடத்தப்படும் மணல் மற்றும் அரிசி அநீதியை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுதல் 
படம்
ஆங்கிலக் கல்வி மோகம் தலைவிரித்தாடுகிறதே....   தமிழ் ஆசான்  தி.வே. கோபாலய்யருடன்  ஒரு நேர்காணல் ஆசிரியர் அழகப்பன் பெயரால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் தொல்காப்பியர் விருது பெற்ற திரு.தி.வே.கோபாலய்யர். கடந்த நாற்பத்தேழு வருடங்களாகத் தமிழ் தொண்டாற்றி வரும் ஆசான். எண்பது வயதிலும் தளராது உழைத்து வரும் இவ்விளைஞர் 23 நூல்களைப் படைத்தவர். ஆறு புத்தகங்கள் அச்சேறக் காத்திருக்கின்றன. தமிழ் இலக்கண மரபுச் சொல் அகரவரிசை அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. கூர்மையான நினைவாற்றல், தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய திடமான கருத்துக்கள், வயதைப்பொருட்படுத்தாது உழைத்துக் கொண்டிருக்கிற முனைப்பு, தம் சாதனைகளைப் பற்றிய பெருமித உணர்வு இல்லாத அடக்கம் இவைதான் தி.வே.கோபாலய்யர்.     15 ஆண்டுகள் தஞ்சையில் தமிழ் ஆசிரியராகவும், 15 ஆண்டுகள் திருவையாறு தமிழ்க் கல்லூரிப் பேராசியர் ஆகவும் பணியாற்றிய இவர் 1979ம் ஆண்டிலிருந்து புதுச்சேரி வாசி. பிரஞ்சுக் கலை நிறுவனத்துக்காகத் தமிழ்ப் பணி ஆற்றி வருகிறார்.     மருந்துக்குக் கூடத் தற்கால அலங்காரம் பிரதிபல...

டாகடர் கே. ஏ, குணசேகரன் பேட்டி

படம்
கவனிப்பைப் பெறுகிறது தலித் இலக்கியம்..... - டாகடர் கே. ஏ, குணசேகரன் பேட்டி   புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை தலைவராய்ப் பணியாற்றி வரும் டாக்டர். கே.ஏ. குணசேகரன் நாட்டுப் புறப் பாடல்கள், நடிப்பு, நாடகம், நாவல் என்று பன் முகங்களில் தம் ஆளுமையை வெளிப்படுத்தி வருபவர். தன்னானே என்கிற முதல் தமிழ் நபுற ஒலி நாடாவை வெளியிட்டுப் பரவலான கவனிப்பைப் பெற்றவர். சிவகங்கையில் படித்த போது கவிஞர் மீராவால் அடையாளம் காணப்பட்டவர். ஆரம்ப காலத்தில் முற்போக்கு இயக்கங்களால் பெரிதும் பேணப்பட்ட இவர் இன்றும் பல்வேறு இயக்கங்களுடனும் சித்தாந்தங்களுடனும் தொடர்பு கொண்டு தீவிரமாக இயங்கி வருகிறார்.     கடுமையான உழைப்பாளி. படிப்பாளி .தலித்தாகப் பிறந்ததால் தாம் பெற்ற அடிகளையும் வலியையும் வடு என்கிற நாவலில் வெளிப்படுத்தி இருக்கிறார். மிகுந்த முனைப்புடன் இயங்கும் இவரை இவர் இல்லத்தில் சந்தித்து உரையாடிய உரையாடல் மிகவும் மனந்திறந்தும் பரிவுடனும் அமைந்து நிறைவு தந்தது .தாம் பெற்ற வலிகளை ஏற்படுத்தியவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி தொனிக்காது இவர் உரையாடலை அமைத்துக் கொண்ட நயத்தக்க நாகரிகம் ர...

புதுமைப் பித்தன் எனும் எரிமலை

படம்
    ‘கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதான் ஐயா பொன்னகரம்’ என்று முடியும் சிறுகதை எந்தவித சிறுகதைக் கோட்பாடுக்கும் உட்படாதது. இருந்த போதிலும் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எழுதிய மகத்தான உத்திகள் கொண்டு எழுதப்பட்ட கதைகளெல்லாம் பெறாத கவனிப்பை இது பெற்றது. இந்தக் கதையை எழுதியவர் சிறு வயதிலேயே மரணம் அடைந்த புதுமைப் பித்தன் என்னும் சொ. விருத்தாசலம்.     மணிக்கொடியில் வேலை பார்த்தவர். மணிக்கொடி எழுத்தாளர்களின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர். எழுதுவதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்தவர். வாசன் இயக்கிய ஔவையார் திரைப்படத்தின் கதை கொத்தமங்கலம் சுப்புவால் எழுதப்பட்டது. இதே படத்திற்குப் புதுமைப்பித்த னும் கதை எழுதினார். அது நிராகரிக்கப்பட்டது. இவரின் கற்பனையில் உதித்த கதைக்கரு தான் பின்னர் ஏ.பி. நாகராஜனால் இயக்கப்பட்டு வெளிவந்த சரஸ் வதி சபதம் என்கிறார்கள்.     மரபை மறுக்கும் அங்கதம், வாழ்க்கையில் நலிவுற்றவர்கள் பால் பரிவு. ஜாதி இந்துக்களிடம் வெறுப்பு, பணத்தின் மேலும், பணம் படைத்தவர்கள் மீதும் வன்மம், இதுதான் புதுமைப்பித்தன்.     கடவ...

ஜெயகாந்தன்

படம்
தமிழ் இலக்கிய உலகின் துருவ நட்சத்திரம்     ‘’ என் பெண்டாட்டி ஒரு நாள் அந்தப் பழனியோட ஓடிப் போயிட்டா மகனே.’’     ‘’யூமீன் யுவர் வொய்ப் அண்பரியாரி?’’     ‘’ஆமாம் மகனே’’     ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் ஹென்றிக்கும் அவன் தகப்பனாருக்கும் நடக்கும் உரையாடலாக வருபவை மேற்கூறிய வரிகள். இந்த நாவல் படித்த அனைவரும் மறக்க முடியாத வரிகள், ஷேக்ஸ்பியரின் யூ டூ  ப்ரூட்டஸ்? என்கிற வரிகள் அல்லது வேத வியாஸரின் அஸ்வத்தாமா ஹதக் குஞ்சரஹ போன்று மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு ரசிக்கத் தக்க வரிகள்.     ஆரம்ப நாட்களிலிருந்து மேற் கூறிய நாவல் வரை ஜெயகாந்தனின் புனையுலகில் வளர்சிதை  மாற்றத்தை சற்று உன்னிப்பாகக் கவனிக்கும் போது சில சுவாரஸ்யமான  கூறுகள் நமக்குக் கிடைக்கின்றன.     சிறுகதைகளின் இலக்கணத்தை வரைந்தவர் என்றாலும் சிறுகதைகளை செய்திகளைத் தெரிவிக்கும் ஊடகமாக மட்டும் பயன்படுத்தினார் என்று கருத வேண்டியிருக்கிறது. எதிர் மறையாக ஒரு கருத்திலிருந்து தான் சொல்ல வந்ததை நிறுவ...

இமயம்

படம்
    ஐந்தரை அடி உயரமே உள்ளவர். இந்த உயரக் குறைவை அவரைத் திரையில் கண்ட எவரும் உணரவில்லை. மாறாக ஒவ்வொரு படத்திலும் அவர் விஸ்வரூபம் எடுத்ததைத்தான் பார்த்திருக்கிறார்கள். கப்பலோட்டிய தமிழ னில்  யாருமே சிவாஜியைக் காணவில்லை. சிதம்பரம் பிள்ளையைத் தான் கண்டார்கள். கட்டபொம்மன் என்கிற குறுநில மன்னன் வெள்ளையரை எதிர்த்தவன் - விடுதலைச் சரித்திரத்தின் சின்னமாக உருவானது சிவாஜியால் தான். பாசமலரின் ராஜசேகரன், அன்றைய முதலாளிகளுக்கு ஆதர்சம். வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்த ஜெமினி வாசன், கதறிக் கதறி அழுதாராம். அவர் இளமையும், அன்னையும்  அவர் வாழ்க்கையில் முன்னுக்கு வரப்பட்ட சிரமங்களும் நாடகத்தின் ஊடே அவர் எண்ணத் திரையில் நிழலாடிக் கொண்டே இருந்திருக்கின்றன.     நாடக உலகின் பிதாமகர் டி.கே. ஷண்முகம், ஔவையாராக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர்.கிழவியின் தோற்றம் வெண்டுமென்பதற்காக முன்னிரு பற்களைப் பிடுங்கிக் கொண்டவர். ஔவையாராய் கூன் போட்டுக் கூன் போட்டு கூன் அவரிடம் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அவர் ஒரு நாடகம் பார்த்த பொழுது ராமபிரானின் அன்னையாக நடித்த நடிகையின் ...

சுஜாதாவின் பன்முகம்

படம்
                          சுஜாதா முதன் முதலில் வெளிச்சத்துக்கு வந்தது நைலான் கயிறு தொடர்கதையின் மூலமாகத்தான். அது வரையிலும் துப்பறியும் கதைப் பக்கம் அவ்வளவாக யாரும் சென்றதில்லை. தமிழ் வாணன் நிறைய சங்கர்லால் கதைகளை எழுதியிருக்கிறார். பி.டி.சாமி எழுதுவார். தமிழ்வாணன், பி.டி.சாமி போன்றவர்களின் கதைகளில் துப்பறியும் கதை என்று சொல்லிக் கொண் டாலும் துப்பறியும் கூறுகள் கம்மி தான்.     இப்படிப்பட்ட கால கட்டத்தில் சுஜாதா ஒரு புது வரவாக தமிழ் தொடர் உலகத்தில் அடியெடுத்து வைத்தார். இவரின் அனிதா இளம் மனைவியில் தான் முதன் முதலில் கணேஷ் என்கிற வழக்கறிஞர் கதாபாத்திரம் அறிமுக மானது பின்னர் வந்த ப்ரியாவில் தான் முதல் முதலில் வசந்த் அறிமுக மானார்.     சொற் சிக்கனம், என்றாலும் கருத்துருவை முழுமையாகக் கண்முன் கொண்டு நிறுத்தும் சாமர்த்தியம், மெலிதான அங்கத நகைச்சவை, அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆவலைத் தூண்டு விதத்தில் கதையை நகர்த்திச் செல்லும் பாங்க...

தி.ஜா.வின் எழுத்துலகம்

படம்
    ஜானகிராமனின் மாஸ்டர் பீஸ் என்று மோகமுள் அழைக்கப்படுகிறது. தரத்தில் மட்டுமல்லாது கனத்திலும் பெரிய நாவல். மோகமுள் படித்தவர்கள் கும்பகோணம் போனால் துக்காம்பாளையம் தெரு எது என்று கேட்காமல் திரும்ப மாட்டார்கள். அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய நாவல்.     ரேழியுள்ள வீடுகளும் நடு முற்றங்களும் காவேரியும் வெற்றிலை சீவலும் செவலை மாடும் கர்நாடக சங்கீதமும் வேறெங்காவது இவ்வளவு பிராதான்யம் பெற்றிருக்குமா சந்தேகமே. அதுவும் அந்தப் பெண்கள்! 'அன்பே ஆரமுதே' டொக்கி எதிராஜு படம் போடுகிறது போல் கோலம் போடுகிறாள். 'அம்மா வந்தாளின்' அலங்காரத்துக்கு வரும் கனவுகள் நிஜ வாழ்க்கை வண்ணங்களையும் சித்திரங்களையும் தோற்கடிக்கின்றன. 'மோக முள்ளின்' யமுனாவோ கேட்கவே வேண்டாம். டொக்கியின் வார்த்தையில், ‘ மல்லிகைப் பூவால் ஜோடிச்ச கை தான் அது; எலும்பாலும் சதையாலும் வனையப் பட்டதன்று ‘செம்பருத்தி நாயகியை நினைக்கும் போதெல்லாம் செம்பருத்திப் பூ தான் நினைவுக்கு வருகிறது. அவ்வளவு கவர்ச்சிகரமான எழுத்து.     'ஜானகிராமனுக்குப் பெண்களையே தெரியாது;அறிந்ததில்லை' என்றார் அம்பை ஒரு முறை. ...

மகத்தான எழுத்தாளர் கல்கி

                                     பிற்கால சோழர்களில் ஆதித்த கரிகாலன் கொலையுண்டதும் சுந்தர சோழனுக்குப் பிறகு உத்தம சோழன் பட்டத்துக்கு வந்ததும் சரித்திர நிகழ்வுகள். ஆதித்த கரிகாலன் கொலையுண்டது பாண்டிநாட்டு சதிகாரர்களால் என்று கூறப்பட்ட போதிலும் அது இன்றுவரை துப்புத் துலங்காத மர்மமே. இந்த மர்ம வலைப் பின்னலில் நந்தினி என்று ஒரு கற்பனா பாத்திரம் - இந்த நந்தினியின் பிறப்பு என்கிற மர்மம். இந்த மர்ம முடிச்சைக் கொஞ்சங் கொஞ்சமாய் அவிழ்க்கும் சுந்தர சோழர், அநிருத்த பிரம்மராயர், செம்பியன் மாதேவி, மதுராந்தகன், கருத்திருமன் ஆழ்வார்க்கடியான் என்பன போன்ற எண்ணிறந்த கதாபாத்திரங்கள்.            மொத்தம் ஐந்து பாகங்கள். ஒவ்வொரு பாகமும் கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள் மீண்டும் மீண்டும் பிரசுரம் செய்தும் இன்றும் படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும் மகத்தான காவியத்தைத் தமிழில் எழுதியவ...

தண்டிக்கும் கடவுளும் மன்னிக்கும் கடவுளும்

து க்ளக் ஆண்டு விழாவில் ஒரு வாசகர் திரு சோவைக் கேட்டார். ‘கிறிஸ்துவ மதம் தமிழ் நாட்டில் வேகமாய்ப் பரவி வருகிறது. காரணம் என்ன? ‘ என்று. இதற்குச் சோவின் பதில் ஓரளவிற்குச் சாத்வீகமாய்த் தான் இருந்தது. கிறிஸ்துவர்கள் மத மாற்றத்தில் ஈடுபடுவது உண்மை தான், அதற்காக மதம் மாறுகிற எல்லோரும் பணத்துக்காகத் தான் மதம் மாறுகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. என்கிற ரீதியில் அமைந்திருந்தது சோவின் பதில். மேலும்.......