விமர்சனம்

1

தண்டிக்கும் இந்துக் கடவுளரும்
மன்னிக்கும் இயேசு கிறிஸ்துவும்
      
         துக்ளக் ஆண்டு விழாவில் ஒரு வாசகர் திரு சோவைக் கேட்டார். ‘கிறிஸ்துவ மதம் தமிழ் நாட்டில் வேகமாய்ப் பரவி வருகிறது. காரணம் என்ன? ‘ என்று. இதற்குச் சோவின் பதில் ஓரளவிற்குச் சாத்வீகமாய்த் தான் இருந்தது. கிறிஸ்துவர்கள் மத மாற்றத்தில் ஈடுபடுவது உண்மை தான், அதற்காக மதம் மாறுகிற எல்லோரும் பணத்துக்காகத் தான் மதம் மாறுகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. என்கிற ரீதியில் அமைந்திருந்தது சோவின் பதில்.
    எனக்குக் கிறிஸ்துவிடத்திலும் கிறிஸ்துவத்தினிடத்திலும் தீராத காழ்ப்புணர்ச்சி சிறு வயதிலிருந்தே ஆழப் பதிந்து விட்டது. நான் படித்த மிஷினரி  பள்ளிகள் இதற்குக் காரணம். என் ஜாதிப் பின்புலத்தையும் அவர்கள் ஏளனம் செய்தார்கள் இந்துக்  கடவுள்களை நிந்தித்தார்கள்.  ஆசிரியர்களுடன் இந்து மாணவர்களும் நாத்திகர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு என்னை இந்து மதத்தின் குறியீடாக முன்னிறுத்தி தண்டிக்க முயன்றனர். மிகவும் பயந்த சுபாவம் உள்ள நான் பல சமயங்கள் இவற்றிற்குப் பணிந்தும் ஓரிரண்டு சமயங்களிலும் எதிர்த்து வந்த துண்டு. நான் குறிப்பிட்ட வகுப்புத் தோழர்களில் முஸ்லீம்களும் அடக்கம்.
             பள்ளியில் ஆசிரியர்களும் ஆசிரியைகளும் கிறிஸ்துவையும் கிறிஸ்துவ மதத்தையுமே முன் நிறுத்துவார்கள்.  ஹிட்லர் என்று ஒரு ஆசிரியர். சரித்திர ஆசிரியர். வகுப்பு ஆரம்பிக்கு முன் இந்து மதத்தையும் கடவுள்களையும் இழிவுபடுத்தி விட்டுத் தான் வகுப்பையே ஆரம்பிப்பார் எல்லாவற்றிற்கும் என்னிடம், ‘’ என்னடா ஐயரே! என்ன சொல்றே ‘’என்பார்.
    என் சகோதரர்களுக்கும் இது நடந்திருக்கிறது. மனப் பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்ட என் மூத்த அண்ணனும் இதில் அடக்கம். மனப்பிறழ்வின் ஆரம்ப காலத்தில் அவன் ஒரு கிறித்துவ ஆசிரியரின் பெயரை மிகவும் வன்மத்துடன் உச்சரித்துக் கொண்டிருந்தான்.
    கல்லூரி நாட்களில் இது போன்ற நபர்கள் உதிர்ந்து விட்டனர் என்றாலும் கிறித்துவப் பாதிரிமார்கள் ஒரு ராஜ்ஜியத்தையே கோலோச்சுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் உலகமும் அதில் அவர்கள் அனுபவிக்கும் வசதிகளும் சொல்லில் அடங்கா. பண்டைய பண்ணை அடிமைகள் போல் அவர்களுக்கும் வெவ்வேறு தளங்களில் அடிமைகள் உண்டு. அவர்களுக்கும் ஜாதி சண்டைகள் அடிக்கடி எழும்பும். அது விளிம்புக்கு வந்து உடனே அடங்கி விடும்.
    இதெல்லாம் போய் வேலையென்று வந்த பின் நான் பழகிய சந்தித்த கிறிஸ்துவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்துவை என்னிடம் விற்க முயன்றிருக்கின்றனர். அவர்களிடம் நான் பெற்ற அனுபவங்கள் பல.
    ஒரு பெண்மணி அலுவலகத்தில் சாமி கும்பிடும் போது வீம்புக்காக பைபிளைப் பிரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். அவர் என்னிடம் ஒரு நாள் வந்து, ‘’இன்னிக்கு தேவ இசை இருக்கு. கட்டாயம் வாங்க’’ என்றார். ‘’அதில் அப்படி என்ன விசேஷம்’’ என்றேன்.’’ஒரு லேடி பாடுறாங்க பாருங்க... அவ்வளவு அருமையாய்ப் பாடுறாங்க. அவங்க கூட பிராமின் தான். பின்னாடி கிறிஸ்டியன் ஆகி ஊழியத்துக்கு வந்துட்டாங்க’’ என்றார். அவர் வார்த்தையில் பெருமையும், என்னை மனந் திருத்துவதற்கான உள்நோக்கமும் பொதிந்திருந்தன. பிராமணப் பெண் கிறிஸ்துவ மதம் தழுவியதை அந்த அம்மையார் தன்னையும் அறியாமல் கிறிஸ்துவ மதத்திற்கு வழங்கப்பட்ட  ஞானஸ்நானம் என்று ஒப்புதல் வழங்கியதைப் போல் இருந்தது என்று எனக்குத் தோன்றியது.
    இன்னொரு சக ஊழியர்; வார வழிபாடு நாட்களில் நைவேத்யம் செய்யப்பட்ட சுண்டலை உண்ண மாட்டாரென்பதால் அவருக்கு மட்டும் தனியாக எடுத்து வைப்பார்கள் அலுவலகத்தில். இது மிகவும் விநோதமாய் இருந்தது எனக்கு. அவரிடம் இது ஏன் என்று கேட்டேன். அவர் சொன்னார்; ‘’பாருங்க.... உருவ வழிபாடு அசுத்தம்; அதனால் அதற்குப் படைக்கப்பட்ட உணவை  உண்பவன் நரகத்திற்குத் தான் செல்வானென்று பைபிள் சொல் லுது’’
    நான் கேட்டேன்;
    ‘’கிறிஸ்து உலகில் தோன்றி எவ்வளவு நாளாகுது?’’
அவர் கூறினார்;
    ‘இரண்டாயிரம் வருடத்துக்கும் மேல்’
    ‘’அதுக்கு முன்னாலே உலகத்திலே குறிப்பா, இந்தியாவிலே எல்லாரும் உருவ வழிபாடு தான் செஞ்சிருக்காங்க. உங்க கணக்குப் படி அவுங்க எல்லோரும் நரகத்துக்குத் தான் போயிருக் காங்கங்கறீங்களா?’’
    அவரால் பதில் சொல்ல முடியவில்லை. இதே நண்பர் என்னிடம் புருஷ சூக்தத்தின் ஆங்கில மொழியாக்கத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிய்த்துப் போட்டு அது கிறிஸ்து வத்தைத் தான் குறிக்கிறது என்று வாதிட்டார். நான் கூறினேன்;
    ‘’ரொம்ப சௌகரியமாப் போச்சு. இனி மேல் சர்ச்களில் புருஷ சூக்தத்தை  ஓதத் சொல்லி விடலாம். உங்களுக்கும் ஆள் சேரும்’’
    இதே நண்பர், வேறோர் சமயம் மிகவும் பரபரப்பாக வந்தார். ஒரு பிராமணப் பையன் தினமும் பைபிளைப் படித்துக் கொண்டிருந்தானாம்;இயேசு நாதர் அவனுக்குத் தரிசனம் கொடுத்தாராம். அவன் மனம் திரும்பி ஊழியத்துக்கு வந்து விட்டானாம். அவர்கள் பெற்றோர் இதை ஆரம்பத்தில் வன்மையாக எதிர்த்தார்களாம்.ஆனால் அந்தப் பையன் பைபிள் படிக்கும் போது அவன் மீது ஓர் ஒளி பரவுவதை கண்டு அப்படியே விட்டு விட்டார்களாம்.
    நான் கேட்டேன்;
    ‘’அதெல்லாம் சரி,;இயேசு நாதர் செய்தது சரியாகத் தோன்றவில்லையே; இத்தனை நாளும் இவ்வளவு விசுவாசத்துடன் நீங்கள் நல்ல கிறிஸ்துவராய் இருந்து வருகிறீர்கள்; உங்களை விட்டு விட்டு அவர் ஏன் வேற்று மதத்து ஆள் ஒருவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் தரிசனம் கொடுக்க?’’
    அவர் மௌனம் சாதித்தார். இதெல்லாம் நான் கூறுவதற்குக் காரணம் நம்பிக்கைகளில் பல சமயங்களில் பொதிந்திருந்கும் அபத்தங்களுக்கு இந்து மதம் தான் மொத்த குத்தகை என்று பலர் நிறுவ முயலுவதை எதிர்ப்பதற் காகவே.
    திருமணத்திற்கு முன் ஏன் மனைவி ஒரு கம்பெனியில் வேலை செய்தார். அவருடன் பணி யாற்றிய பெண்மணி நாங்கள் புதுச்சேரியில் இருந்த போது எங்களுடன் இருக்க வந்திருந்தார் மும்பையிலிருந்து. இரட்டைப் பிள்ளைகளுடன் வந்திருந்த அவர் கோவாவைச் சேர்ந்த கொங்கணி பேசும் கிறிஸ்துவர் ஏதோ வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அவர்கள் வேளாங்கண்ணி செல்ல வேண்டி, என்னிடம் உதவி கோரினார் நானும் ‘ சரி... நாமும் இந்த சாக்கில் போகிற வழியில் ஒன்றிரண்டு கோயில்களை பார்த்து வரலாம்’ என்று என் குடும்பத்துடன் கிளம்பினேன். கார் வைத்துக் கொண் டோம். செலவினை சரி பாதியாக பிரித்துக் கொள் வதாய்ப் பேச்சு.
    நல்ல வெய்யிலில் வேளாங்கண்ணி சென்றடைந்தோம் வேளாங்கண் ணியைப் பற்றி எனக்கும் செரிந்து கொள்ளக் கொஞ்சம் ஆவல் உண்டு. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்று கூறுவார்கள் என்பதால் ஆவல். என் மனைவியின் தோழி மிகவும் ஆவலாய் எங்களுக்கு எல்லா வற்றையும் சுற்றிக் காட்டினார். நான் சுற்றி வருகையில் பலபேர் முடியிறக்குவதைக் கண்ணுற் றேன். உப்பு மிளகு வாங்கிப் பலர் போட்டனர். பலர் கண் ,காது, கால் போன்றவற்றின் தகரப் பிரதிமைகளை வாங்கிக் காணிக்கையாகச் செலுத்துவதையும் பார்த்தேன். அங்கேயே பொங்கல் இடுவதற்கு ஏதுவாக அலுமினியப் பாத்திரங்களைப் பலர் வாடகைக்கு விட்டுக் கொண்டிருந்தனர்.
    இந்தப் பழக்கங்களை பார்த்த போது இதெல்லாம் நாம் வழக்கமாய் மாரியம்மன் கோயில்களில் செய்யும் வழக்கங்கள் அல்லவா என்று தோன் றியது. அத்துடன் வேளாங்கண்ணியில் ஆதியில் இருந்தது ஒரு மாரி யம்மன் கோயில் என்றும் நாளாவட்டத்தில் அது கிறிஸ்துவக் கோயிலாய்ப் பரிணா மம் அடைந்தது என்றும் எங்கோ படித்திருந்தது நினைவுக்கு வந்தது.
    கோயில் தரிசனம் முடிந்து காணிக்கை செலுத்துவதற்காகப் பாதிரியார் ஒருவரிடம் எங்களையும் வற்புறுத்திக் கூட்டிக் கொண்டு போனார் அம்மை யார்.அந்தப் பாதிரியார் அறைக்கு முன் ஒரு பெரிய ஹாலில் பல பக்தர்கள் காணிக்கையாய்ச் செலுத்திய பல்வேறு பொருட்களைக் கண்காட்சி போன்று வைத்திருக்கிறார்கள். அதையும் பெருமை பொங்க அம்மையார் எங்களுக்குக் காண்பித்தார் பாதிரியாரைப் பார்த்து விட்டு ஊர் திரும்ப காரில் ஏறினோம்.
    காரில் வரும் வழியில் எல்லாம் அம்மையார் என் மனைவியிடம் ,’’உங்கள் கிருஷ்ணனும்ராமனும் சுத்த உதவாக்கரை’’ என்றெல்லாம் பேசிக் கொண்டு கிறிஸ்துவ மதத்தின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறிக் கொண்டும் வந்தார். இதன் தொடர்ச்சியாக ஒரு இந்துப் பையன் அவர்கள் குடும்பத்தில் ஒருவரை மணம் செய்ததைக் கூறினார். அந்தப் பையனின் அம்மா திருப்பதியில் வேண்டுதல் இருப்பதால் மணமக்களை வற்புறுத்தித் திருப்பதி அழைத்துச் சென் றாராம். அவர்களுடன் பெண் வீட்டுக் காரர்களும் சென்றனராம். பெண் வீட்டுக்காரர்களும் பெண்ணும் பையனும் அங்கே போய் நன்றாகக் குடித்துக் கும்மாளம்  போட்டார்களாம். மிகவும் பெருமையுடன் இதை அவர் விவரித்தார். இன்றும் அவர் என் மனைவியுடன் அவ்வப்போது தொடர்பு கொள்கிறார். என் மனைவிக்குத் தான் விட்டுப் போய் விட்டது.
    வாழ்நாள் பூராவும் நாத்திகம் பேசிக் கொண்டிருந்த பெரியார்தாசன் திடீரென்று முஸ்லீம் ஆகி விட்டார்.உடனே முஸ்லீம் அமைப்புகள் ‘’இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் உண்மையான கடவுள் யார் என்பதை ‘’என்று ஊர் பூரா போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவத் கீதையுடன் குரானையும் ஓதச் செய்த மகாத்மா காந்தியின் மூத்த மகன் தந்தை மேல் கொண்டிருந்த காழ்ப்பால் முஸ்லீமாக மாறிய போது மௌல்வி மகாத்மா காந்திக்கும் கடிதம் எழுதினாராம்.
    ‘’இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் எது உண்மையான மதம்’’ என்று. அவ்வளவு பெரிய மனிதரை தன் சிறுபிள்ளைத் தனத்தால் புண்படுத்து கிறோமே என்கிற குற்றவுணர்வு கூட இல்லை அந்த மௌல்விக்கு.
    தொலைக் காட்சியைத் திறந்தாலே எண்ணற்ற சானல்களில் எண்ணற்ற மத போதகர் கள் சாத்தான்களை ஓட்டுகிறார்கள்; வியாதியை சொஸ்தமாக்கு கிறார்கள். யேசுகிறிஸ்து போல் வேடமணிந்த ஒரு நபர் இந்து மதத்தின் பேரில் விஷத்தைக் கக்குகிறார். இன்னொரு குடும்பம் ஆன்மிகத்தை மொத்த குத்தகை எடுத்துக் கொண்டு சுவிசேஷம் செய்கிறது. சூலங்களும் வேல்களும் வைத்துக் கொண்டு இந்துக் கடவுள்கள் நேர்த்திக் கடன் செலுத்தாத ஜீவன் களை தண்டிக்கின்றன. இந்த ஜீவன்களை கரையேற்றவும் அவற்றின் பாவங் களை மன்னிக்கவும் இயேசுநாதருக்கும் அவரின் மதத்தைப் பரப்புபவர்களுக் கும் அளவற்ற பணமும் தேவையாயிருக் கின்றன.
    பல்வேறு நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், ஜாதி, துவேஷிக்கும் நாத்திகர்கள், புரிந்து கொள்ள முடியாத பல சிந்தனைகள் ஒருபுறம்.
    எளிமையான, சடங்குகள் குறைவான, பாவங்களை மன்னிக்கிற, மிகவும் நாகரீகமான, நல்ல வசதி படைத்த இயக்கம் இனனொரு புறம்.
    பாவம் இந்து மதம்!
    வாழ்க மதச் சார்பின்மை!








அஸ்வத் எழுதிய மற்ற
விரிவான கட்டுரைகளைப் படிக்க
இங்கே கிளிக் செய்யவும்........


மகத்தான எழுத்தாளர் கல்கி

 
தி.ஜாவின் எழுத்துக்கள் 

சுஜாதாவின் பன்முகம் 

இமயம் 

 ஜெயகாந்தன்

புதுமைப்பித்தன் எனும் எரிமலை 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...