செவ்வாய், 20 அக்டோபர், 2015

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன் மறைந்தார்

என் நாவல் நல்லூர் மனிதர்களுக்கு விரிவான விமர்சனம் எழுதி இருந்தார். அதற்கு முன்னாலேயே நான் அவரின் விமர்சனங்களைப் படித்திருந்ததால் அவர் மீது எனக்குப் பெரும் மதிப்பு இருந்தது. அதனால் நான் அவரின் விமர்சனத்தைப் பெரிய கௌரவமாக நினைத்தேன். 1993இல் டெல்லி சென்றிருந்த போது மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்தேன். 'வாட் ப்ரிங்க்ஸ் யு ஹியர்?' என்றார் முதலில் சந்தேகமாக. ஏதாவது சகாயம் கேட்கப் போவதாக எண்ணியிருக்கலாம். ஆரம்ப சந்தேகம் தெளிந்ததும் 'கல கல'வென்று பேச ஆரம்பித்து விட்டார். தி க சியிலிருந்து தஞ்சை பிரகாஷ் வரை எல்லோரைப் பற்றியும் மிக வெளிப்படையான விமர்சனங்கள். மௌனியையும் சி சு செல்லப்பாவையும் கூட விட்டு வைக்கவில்லை. சுமார் மூன்று மணி நேரங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.
பின்னர் 1999இல் என் இரண்டாம் நாவல் 'ஒரு தேவதையும் சில வண்ணத்துப் பூச்சிகளும்' விமர்சனக் கூட்டம் சென்னையில் நடந்தபோது அவரை அழைத்தேன். எந்த பிரதி பலனும் எதிர்பாராது வந்திருந்து ஒரு விரிவான விமர்சனத்தை வழங்கினார். பின்னர் இதே நாவலைப் பற்றி படித்துறையில் விரிவான விமர்சனம் எழுதினார்.
உண்மையான நேர்மையான விமர்சகர் மறைந்து விட்டார். க நா சுவிற்க்குப் பின்னர் தமிழ்ச் சூழலில் இயங்கி வந்த ஒரு பெரிய விமர்சனக்  கை மறைந்தது.
பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு அஞ்சலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...