சமீபத்தில் என்னைச் சந்திக்க வந்த நண்பர் நான் கைபேசியுடன் அவ்வப்போது மும்முரமாய் இருப்பதை ஸ்வாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எப்போதுமே அவர் சளசளவென்று பேசிக்கொண்டிருப்பார். நான் கேட்டுக் கொண்டிருப்பேன்;அல்லது அவர் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பேன். வழக்கத்திற்கு மாறாக அவ்வப்போது நான் இடைவெளி விட்டு கைபேசியை நோண்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவரை நான் உதாசீனப் படுத்துகிறேன் என்று அவர் நினைக்க இருந்த வாய்ப்பை நான் பொருட்படுத்தாமல் இருந்தது அவரை மிகவும் ஆச்சர்யப் படுத்தியது. எனக்கும் சற்று வியப்புத் தான். இதில் எப்படி இறங்கினேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். மேஜைக் கணினி வரையில் சற்று சுமாராகப் போய்க் கொண்டிருந்தது. ஆண்ட்ராய்டு கைபேசி வந்தவுடன் தான் சற்று அதீதமாகப் போய் விட்டது. முக நூல் அல்லது வாட்ஸ் அப்; ஒழிந்த நேரங்களில் யு ட்யூப்.
பாராயணம் செய்து கொண்டிருந்த அபிதான சிந்தாமணியை அவ்வப்போது புரட்டுகிறேன். ராமாநுஜாசார்யாரின் மஹாபாரதம் அப்படியே இருக்கிறது. பவர் என்னும் புத்தகம், மார்கோ போலோவின் பயணக் குறிப்புகள், நூலகத்திலிருந்து கொண்டு வந்த புயலில் ஒரு தோணி, உபநிடத சாரம், சாமி சிதம்பரனார் குறித்த புத்தகம், குற்றாலக் குறவஞ்சி, சம்பிரதாய பஜனை, ஜூலியஸ் சீசர், சித்தர் பாடல்கள், எ பியூட்டிபுல் மைண்ட், சமஸ்க்ருத பாடங்கள், பகவத் கீதை ............... படிக்க வேண்டியது சேர்ந்து கொண்டே போகிறது.
போதும் போதாததற்கு சன் டிவியில் குஷ்பூவின் பஞ்சாயத்து வேறு...
ஹூம் ....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக