ஹிக்கின்ஸ் பாகவதர்AIR இன்றைய வின்டேஜ் கச்சேரியின் ஸாஸ்த்ரிய தரத்துக்கு பக்கவாத்ய ஜாம்பவான்களே சாக்ஷி.. பரஸ் ராகத்தில் ஆரம்பம்.. ஸாஸ்த்ரிகள் க்ருதி நீலாயதாக்ஷி,
பின்னர் தாரிணி தெலுசுகொண்டி, உடன் தொடர்ந்த ரகுபதே ராமா.. இரண்டும் ஸ்வாமிகள் ஜெம்ஸ்..
தொடர்ந்து ஶ்ரீ காமாக்க்ஷி எனும் சுப்பராய ஸாஸ்த்ரியாரின் வசந்தா க்ருதி.. என்ன சுகம்.. மெயின் கலிகியுண்டே கதா.. கீரவாணியில்.. பூரண திருப்தி..
வி. தியாகராஜன் ஸார் வயலின். பக்க வாத்ய வயலின் இலக்கணம் புரிந்தவர்.. திருப்பாற்கடல்,
தக்க்ஷிணாமூர்ததி,
தியாகராஜன்.. இவர்களது பக்க வாத்ய உயர் பங்களிப்புகள் பதிவு செய்யப்படாமலேயே விட்டு விடுகிறார்கள் என்பது என் மனக்குறை...
என்றும் மேடைச்சிங்கம் திருச்சி ஸங்கரஐயர் மிருதங்கம்.. கஞ்சிரா உலகின் உச்ச நக்ஷத்ரங்கள் இருவர்.. நாகராஜன் மற்றும் ஹரிஷங்கர்.. இன்று நாகராஜன் ஸார்.. மிருதங்த்தை மிஞ்சி (அதிலும் சங்கரஐயர்) பலே வாங்கினார்..
யதுகுல காம்போதியில் க்க்ஷேத்ரக்ஞர் பதம் தொடர்ந்தது..
மந்தாரியில் பட்ணம் சுப்ரமணிய ஐயர் தில்லானாவுடன் நிறைவு.... மீண்டும் மிருதங்க- கஞ்சிரா சுநாத பிரவாகம்
பிதாமகர் கே.வி.என்..
வியர்வையில் விளைந்த வெள்ளை முத்து ஹிக்கின்ஸ் பாகவதரின்சொற்ப ஜீவ காலம் கர்நாடக இணைப்பு எவ்வளவு இழப்பு!!!
என் பெயர் அஸ்வத். இரண்டு நாவல்கள், சில கட்டுரைகள் மற்றும் ஒன்றிரண்டு பேட்டிகள்; இது தான் என் இலக்கியப்பணி. புது தில்லியில் வங்கிப் பணி புரிந்து வரும் நான் அவ்வப்போதைய நிகழ்வுகள் குறித்து என் பதிவுகளை இங்கே இட விரும்புகிறேன். மற்றவை அவ்வப்போது....
சனி, 9 ஜூன், 2018
ஜான் பி ஹிக்கின்ஸ் - பாலசுப்பிரமணியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சவலைப் பிள்ளை
நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம் இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...
-
இந்தப் புத்தகத்தை இன்று காலை ஆரம்பித்தேன் . ஒரே மூச்சில் படித்து முடித்தேன் . வழக்கமாக ஆண்களுக்கு உள்ள ஆர்வம்தான் . அந்தக்காலத்த...
-
மதுரா விஜயம் ...
-
பிற்கால சோழர்களில் ஆதித்த கரிகாலன் கொலையுண்டதும் சுந்தர சோழனுக்குப் பிறகு உத்தம சோழன் பட்டத்து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக