வியாழன், 9 ஏப்ரல், 2015

ஜெயகாந்தன் மறைந்து விட்டார். ஒரு சீரிய சிங்கம் சிங்காதனத்திருந்து மறைந்து விட்டது. ஜீவா மறைந்த செய்தியைக் கேட்டதும்  ஜெயகாந்தன் தன் எதிர்வினையை இப்படி எழுதுகிறார்: "'அப்படியா' என்றேன் .'என்ன அதிர்ச்சியாக இல்லையா?' என்றபோது 'இப்போதுதான் அதை உள்வாங்கிக்கொண்டிருக்கிறேன்' என்றேன். போய் ஒரு திரைப்படத்தில் உட்கார்ந்தேன்.படத்தில் என் கவனம் செல்லவில்லை. ஜீவா பற்றிய நினைவுகளே என் மனதில் நிழற்படமாய் ஓடிக்கொண்டிருந்தது."
இதே நிலை தான் எனக்கும். செய்தியைப் பார்த்ததிலிருந்து  அவர் நினைவுகளே மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஈ வே ரா முன் சிங்கம் போல் கர்ஜித்தவர். எம் ஜி யார் உச்சத்தில் இருந்தபோது அவரை வைத்து 'சினிமாவுக்குப் போன சித்தாளு' நாவலை எழுதியவர். எவருக்கும் தலைவணங்காத தன்மானம் கொண்டவர். சினிமாக்காரர்கள் அவர் நாவலைக் காப்பி அடித்தபோது 'அடிச்சுட்டுப் போறாங்க. போனாப் போகட்டும்' என்று பெருந்தன்மையாக அனுமதித்தவர். ஆன்மிக ஆளுமைகள் மீதும் பாரம்பரிய மதத்தின் மீதும் அளவற்ற மதிப்பும் பாசமும் வைத்தவர். ஓங்கூர் சித்தரால் கட்டி அணைக்கப் பட்டு ஆசிர்வதிக்கப் பட்டவர். பொருளாதார சிந்தனை கொஞ்சம் கூட இல்லாதவர். கம்பாசிடர் ஆக, வண்டி இழுப்பவராக, ஆபிஸ் பையனாக, சித்தாளாக, ரயிலில் கரி அள்ளிப் போடுகிறவராக சகல வேலைகளையும் பார்த்திருக்கிறார். அத்துடன் சிந்தனையையும் வளர்த்துக் கொண்டே வந்திருக்கிறார்.
ஒரு பெரிய அறிவு ஜீவி மறைந்தார். ஒரு சகாப்தம் முடிவுற்றது. தமிழ் இலக்கிய உலகம் இன்னொரு தன்னிகரில்லாப் படைப்பாளியை எப்போது காணப்போகிறது?
அவர் ஆத்மா சாந்தி அடைவதாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...